08-02-2019, 09:29 AM
இதில் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய ஆர்சனிக், கார்டுமியம், குரோமியம், நிக்கல் ஆகியவை கலந்துள்ளன. தங்கமும் வெள்ளியும் கலந்திருக்கிறது. அதை மட்டும் பணத்துக்காக பிரித்து எடுத்து விடுவார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்கிற தாமிர அடர்த்தி மிக மிகத் தரம் குறைந்ததாகும். விலையோ மிகவும் மலிவு. லத்தீன் அமெரிக்க நாடுகளில் தரம் உயர்ந்த தாமிர அடர்த்தி கிடைக்கிறது. ஆனால் விலை அதிகம். அதனால் ஸ்டெர்லைட் ஆலை வாங்காது.
நீதிபதி தருண் அகர்வால் குழு ஸ்டெர்லைட் புகைக் குழாய் குறித்து நான் எடுத்து வைத்த வாதங்களை நான்கு பாராக்களில் குறிப்பிட்டு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிகளை மீறி ஸ்டெர்லைட் இயங்குகிறது. புகைக் குழாய் உயரத்துக்கு ஏற்றவாறு உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுதினார்.
புகைக் குழாயை உயர்த்த முடியாது. அதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகும். தாமிர உற்பத்தியையும் குறைக்க மாட்டார்கள். எனவே இத்தனை ஆண்டுகளும் நச்சுப் புகையை வெளியிட்டு மக்களுக்குக் கேடு செய்த குற்றத்துக்காக ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும்.
பசுமை அடர்த்தி (Green Belt)
1994 தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தபோது, ஆலைக்குள் 250 மீட்டர் அகலம் பசுமைச் சுற்று (Green Belt) இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அந்த அகலத்தைக் குறைக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை 1994 ஆகஸ்டு 11 ஆம் தேதி தமிழக அரசுக்கு விண்ணப்பித்தது.
அலாவுதீன் அற்புத விளக்கு போல் அதிசயம் நேர்ந்தது. ஏழே நாட்களில் 1994 ஆகஸ்டு 18-ம் தேதி 250 மீட்டரை 25 மீட்டராக தமிழக அரசு குறைத்தது. இதன் மர்மம் என்ன?
உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக், நீதிபதி கோகலே அமர்வு 2011 பிப்ரவரியில் ஸ்டெர்லைட் ஆலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய நீரி குழு செல்வதுடன், அதில் என்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியது. நானும் நீரி குழுவுடன் ஸ்டெர்லைட்டுக்குச் சென்றேன்.
இரண்டாவது அதிசயத்தைக் கண்டேன். ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் பசுமை அடர்த்தியே கிடையாது. வெளியிடங்களிலிருந்து மரங்களையும், செடிகளையும் வேரரோடு பெயர்த்துக் கொண்டுவந்து ஸ்டெர்லைட் ஆலைக்குள் மண்ணில் வேர்களைப் புதைத்து காட்சிப் பொருள் ஆக்கினர்.
நீதிபதி நாரிமன்: அப்படியானால் மூன்றாவது அதிசயம் என்ன?
வைகோ: 2013 மார்ச் 23 அதிகாலையில் ஸ்டெர்லைட் ஆலை நச்சுப் புகையால் நடைபாதைகளில் மக்கள் மயங்கி விழுந்தனர். பூக்களின் நிறம் மாறியது. பூச்செடிகள் கருகின. மரங்களில் இலைகளின் நிறம் மாறியது. அந்தப் புகைப்படங்கள் அடங்கிய ஆவணத்தை இதோ நீதிபதிகளிடம் தருகிறேன்.
தூத்துக்குடி மக்கள் கொதித்து எழுந்தனர். நானும் போராட்டத்தில் கலந்துகொண்டேன். 2013 ஏப்ரல் 2-ம் தேதி ஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆலையை மூடும் தீர்ப்பு வரும் என்று கருதி தமிழக அரசு மார்ச் 30-ம் தேதி ஆலையை மூடியது. ஆனால் உச்சநீதிமன்றம் ஆலை இயங்குவதற்கு தீர்ப்பளித்தது.
தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கக்கூடாது என்று தமிழக அரசு முறையீடு செய்தது. நானும் மேல்முறையீடு செய்தேன். தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதிபதி சொக்கலிங்கம் விசாரித்தார். ஒன்றரை மணி நேரம் நான் வாதங்களை எடுத்து வைத்தேன். ஏப்ரல் 29 ஆம் தேதி தீர்ப்பாயம் கூடியது.
நீதிபதி சொக்கலிங்கம் மிகுந்த வருத்தத்துடன், இந்த வழக்கு டெல்லியில் உள்ள பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வுக்கு திடீரென்று மாற்றப்பட்டுவிட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. அதிர்ச்சியாக இருக்கிறது என்றார். நீதிபதி அவர்களே, நான் இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பசுமைத் தீர்ப்பாய தலைமை அமர்வின் தலைவர் தந்த தீர்ப்பில் இதில் சம்பந்தப்பட்டப் பகுதியை வாசிக்கிறேன்.
“தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் வழக்கை விசாரிப்பதிலிருந்து தானாக விலக்கிகொண்டது” என்று குறிப்பிட்டுள்ளார். இப்பிரப்பிரச்சினையில் இதுதான் மூன்றாவது அதிசயம்.
2018 இல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வின் தலைவர், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஒரு குழுவை அனுப்ப வேண்டும் என்றபோது, ஸ்டெர்லைட் வழக்கறிஞர் சுந்தரம், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிதிமன்ற நீதிபதி எவரையும் அனுப்பக் கூடாது என்று குறிப்பிட்டார்.
அப்படியானால் நான் கேட்கிறேன், தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் ஒருதலைபட்சமாக தீர்ப்பு அளிப்பார்களா? நீதி தவறுவார்களா? தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதிகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் உலகப் புகழ்பெற்ற நீதிபதிகள் ஆவர். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் அத்தகைய புகழ் குவித்தவர். அவரால் வார்ப்பிக்கப்பட்ட அவரது ஜூனியர் வழக்கறிஞர் நான்.
இங்கே ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை மூடியதால் நாட்டின் பொருளாதாரத்துக்கே வீழ்ச்சி என்றும், பல கோடி நட்டம் என்றும் அங்கலாய்த்தனர். பொருளாதாரத்தைவிட, பணப் புழக்கத்தைவிட மனித உயிர்கள் உன்னதமானவை; பாதுகாக்கப்பட வேண்டியவை.
அதனால்தான் இந்திய அரசியல் சட்டத்தை அமைத்தபோது முகப்புரையில் (Preamble) இந்திய நாட்டு மக்களுக்கு நீதியும், சுதந்திரமும், சமத்துவமும், சகோதரத்துவமும் வழங்குவதற்கு இறையாண்மை உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக் குடியரசாக 1948 நவம்பர் 26 ஆம் நாள் இந்திய மக்களுக்கு அரசியல் சட்டத்தை அமைக்கிறோம்.
அரசியல் சட்டத்தின் 21 ஆவது பிரிவு மனித உயிர்களுக்கு உத்தரவாதம் தருகிறது. அரசியல் சட்டத்தின் 48A பிரிவு சுற்றுச் சூழலைப் பாதுகாக்கிறது. மக்களுக்காகத்தான் சட்டம். சட்டத்திற்காக மக்கள் அல்ல.
ஆலை மூடியதால் நஷ்டம் ஏற்பட்டது என்று இங்கே கூறினார்களே, மராட்டிய மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் அரசு அனுமதி வாங்கி அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை இரத்தினகிரி மாவட்ட விவசாயிகள் சம்மட்டிகளோடும், கடப்பாறைகளோடும் வந்து அடித்து நொறுக்கினார்களே, மறுநாள் மராட்டிய மாநில அரசு லைசென்சை இரத்து செய்ததே. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் ஏன் மும்பை உயர்நீதிமன்றத்திலோ, டெல்லி உச்சநீதிமன்றத்திலே மராட்டிய அரசின் நடவடிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை?
2013 முதல் 2018 மே 22 வரை தமிழ்நாடு அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல்கள் எதனையும் கண்டுகொள்ளவில்லை. மாறாக ஆலைக்கு ஆதரவாகவே தொடர்ந்து செயல்பட்டது. ஆலை புகை போக்கியின் உயரம் குறித்த பிரச்சினையை நான் தான் முதன் முதலில் ஆய்வுக் குழுவில் கொண்டு வந்தேன்.
2013-ல் ஆலையைத் திறக்க வேண்டும் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இரண்டு மேல்முறையீடு வழக்குத் தொடுத்தேன். தமிழ்நாடு அரசும் கண்துடைப்புக்காக ஒரு மேல்முறையீடு செய்தது.
நீதிபதி அவர்களே, இத்தனை அமர்வுகள் நடந்ததே, ஒரு அமர்விலாவது 2013 மேல் முறையீடு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்று தமிழக அரசு வழக்கறிஞரோ, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்களோ குறிப்பிட்டாரா? என்றால் கிடையாது. ஜனவரி 8-ம் தேதி அமர்வில் நான்தான் உங்களிடம் குறிப்பிட்டேன்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை குறித்த எனது மேல்முறையீட்டு வழக்குகளும், தமிழ்நாடு அரசின் மேல் முறையீடும் நிலுவையில் இருக்கிறது. அந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று நான் விடுத்த கோரிக்கையை கனிவோடு ஏற்றுக்கொண்டு இந்த வழக்கில் சேர்த்தீர்கள் மிக்க நன்றி.
தமிழ்நாட்டில், தூத்துக்குடியில் எங்கள் தலையில் எமனாக வந்து உட்கார்ந்துகொண்டது. பத்து இலட்சம் மக்களும் ஆலையை எதிர்க்கிறார்கள். ஏன்? மொத்தத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்க்கிறார்கள்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு இந்த உச்சநீதிமன்றத்தில் நீதியரசர்கள் தீர்ப்பளிக்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறேன்.”
இவ்வாறு வைகோ வாதம் செய்தார்.