01-02-2020, 12:08 PM
நண்பா நீ தற்காலிக வழியை கேட்கிறாய்... என்னால் நிரந்தர வழியை தான் தர முடியும். நீ கூறிய அதே வலைத்தளத்தில் 500 வார்த்தைகளை மட்டும் பதித்து, எத்தனை பிழைகள் இருக்கின்றன என்று பார்.. பின்னர் ஒவ்வொரு பிழையாக தேர்ந்தெடுத்து , அதன் சரியான வார்த்தைகளை அறிந்து திருத்து... இதை எப்படி ஒவ்வொரு பதிவுக்கும் செய்வது என்று நீங்கள் கேட்க்கலாம்... அப்படி இல்லை... நீங்கள் ஒவ்வொரு பிழையையும் திருத்த திருத்த, அடுத்த முறை நீங்கள் கதையை தட்டச்சு செய்யும்போதே, அந்த பிழை ஏற்படும் போதே நீங்களே எளிதாக திருத்தி விடுவீர்கள்.. அதன் பிறகு நீங்கள் அந்த பிழை திருத்தும் வலைப்பக்கம் போக வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு மூன்று பதிவிற்கு முயன்று பாருங்கள். உங்களுக்கு அது சரிப்பட்டு வராத பட்சத்தில் வேறு வழிகளை பற்றி ஆலோசிக்கலாம். தமிழை பிழை இன்றி எழுதுவதில் ஒரு தனி இன்பம் உள்ளது.. அதை தேடி தான் நான் பயணிக்கிறேன். நீங்களும் வாருங்கள்..