07-02-2019, 09:07 PM
`` `பண்ணையாரும் பத்மினியும்' ஓர் உறவு, ஓர் ஏக்கம், ஒரு கொண்டாட்டம்!" - #5YearsOfPannaiyarumPadminiyum
``பொருள்கள் உயிரற்றவை. ஆனால், அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொருள்களுடனான மனித உறவின் காரணத்தை அறிய முயற்சி செய்வது கடினம். ஆனால், அதை வெளிப்படுத்தலாம்; காட்சிப்படுத்தலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம், `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படம்."
``பொருள்கள் உயிரற்றவை. ஆனால், அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொருள்களுடனான மனித உறவின் காரணத்தை அறிய முயற்சி செய்வது கடினம். ஆனால், அதை வெளிப்படுத்தலாம்; காட்சிப்படுத்தலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம், `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படம்."
மனிதனின் ரசனைக்கு எல்லை இல்லை. ஒரு விஷயத்தின் மீதான மனிதனின் ஈர்ப்பை வரையறுக்க முடியாது. சக மனிதன் அல்லது பிற உயிர்களிடத்தில் காட்டும் கனிவை, அதன் மீது காட்டும் அடிப்படை அறமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், உயிரற்ற பொருள்களின் மீது வைத்துள்ள அளப்பறியா அன்பு, மனித உணர்வின் அழகியல். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அவரவர் சித்தம். பொருள்கள் யாதுமற்றவை. ஆனால், அது அதிசயமாகப் பார்க்கப்படுகிறது. பொருள்கள் அர்த்தமற்றவை. ஆனால், சிலரின் வாழ்விற்கு அர்த்தங்களைக் கொடுக்கிறது. பொருள்கள் உயிரற்றவை. ஆனால், அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொருள்களுடனான மனித உறவின் காரணத்தை அறிய முயற்சி செய்வது கடினம். ஆனால், அதை வெளிப்படுத்தலாம்; காட்சிப்படுத்தலாம் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம், `பண்ணையாரும் பத்மினியும்' திரைப்படம்.
பண்ணையாருக்கு (ஜெயபிரகாஷ்) ஏனோ பார்த்தவுடன் நண்பரின் காரின் மீது மிகப்பெரிய ஈர்ப்பு. அப்படிப்பட்ட காரை பண்ணையாருக்கு வழங்குகிறார், நண்பர். அதன் டிரைவர் ஆகிறான், முருகேசன் (விஜய் சேதுபதி). போக்குவரத்து வாகனங்கள் கிராமங்களுக்கு அறிமுகமான ஆரம்பச் சூழல்கள், ரசனையான காட்சிகளாக அமைக்கப்பட்டிருக்கும். `காரை நீ ஓட்டினால்தான் அதில் ஏறுவேன்' என்று கணவனை அன்பாகச் சீண்டும் மனைவி செல்லம்மா (துளசி). காரை ஓட்டியே தீருவேன் என வெள்ளந்தியான பண்ணையார்... எனப் பயணப்படும் கதை.
தமிழ் சினிமா, இளைஞர்களின் காதல் என்ற தளத்திற்குள் தன்னைப் பெருவாரியாகச் சுருக்கிக்கொண்டதோ என்று வருத்தப்படலாம். அந்தளவிற்கு ஒரு காரை சுற்றிய அற்புதமான கதைக்களத்தைக் கொண்டிருந்தது, `பண்ணையாரும் பத்மினியும்’. அதனுடாக, ஹீரோயிசம் என்ற குறிப்பிட்ட வெளியைத் தவிர்த்து, இரு முதிய கணவன் - மனைவி காதலின் அம்சங்களை ரசிக்க வைத்திருப்பார்கள். குறிப்பாக, `உனக்காகப் பொறந்தேனே எனதழகா' பாடல் காட்சிகளைச் சொல்லலாம். ஒவ்வொரு முறையும் இருவரும் தமக்குள்ளே பகிர்ந்துகொள்ளும் காதல், பேரன்பின் வெளிப்பாடு. `இந்த மொசரகட்டையப் பாக்காட்டி எனக்குச் சோறு இறங்காது' என்று அதன் நீட்சியாக முருகேசனைச் சொல்வார், பண்ணையாரின் மனைவி செல்லம்மா. தங்கள் வீடுதான் துக்கம் முதல் விசேஷம் வரை ஊர் மக்களின் அனைத்திற்கும் நிகழ்விடமாக இருக்கும். அதில், சிறுவர்கள் தாராளமாக விளையாடலாம். இப்படிப் பறந்து விரிந்துகிடக்கும் நேசங்கள் அனைத்தும் ஒரு காரணியால் தன் இருப்பியலை ஏக்கமாக வெளிப்படுத்தியிருப்பார்கள். அதுதான், பத்மினி கார்.