Checkmate ... A cybercrime thriller dreamer
#4
ஜாஷ்வா: "கவலையே படாதே. இந்த ட்ரான்ஸ்ஃபர் பண்ணும் போது பாதியில் ஹாஃப்மன் எதாவுது வெரிஃபை பண்ணினான்னா என்ன பண்ணறதுன்னு நான் ஒரு சின்ன அலிபி (பொய்யான ஆதாரம்) க்ரியேட் பண்ணினேன். அதை இப்ப காரணமா காமிக்க போறேன்" சக்திவேல்: "என்ன அலிபி?" ஜாஷ்வா: "பாதில வந்து சொன்ன அக்கௌண்டுக்கு பதிலா ஏன் வேற அக்கௌண்டுக்கு பணம் போகுதுன்னு கேட்டான்னா? நீ சொன்ன அக்கௌண்ட்ல பிரச்சனை அதனால உபயோகிக்காம இருக்கற என்னோட அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணறேன். அவங்களுக்கு இந்த அக்கௌண்ட்டை கொடுத்துடுன்னு சொல்லலாம்னு இருந்தேன். அவங்க சொன்ன அக்கௌண்ட்டில நானே ஒரு ப்ராப்ளத்தையும் உண்டு பண்ணினேன்" நித்தின் (சிரித்தபடி): "என்ன அந்த அக்கௌண்ட்டை ப்ளாக் (block) பண்ண சொல்லி எஃப்.பி.ஐ அனுப்பின மாதிரி ஒரு மொட்டை கடுதாசி அனானிமஸ் மெயில் அனுப்பினயா?" ஜாஷ்வா: "எஸ். பரவால்லை நான் ஒரு வருஷத்துக்கு முன்னாடி சொன்னதை இன்னும் ஞாபகம் வெச்சுட்டு இருக்கே. என்.எஸ்.ஏ (National Security Agency) அனுப்பின மாதிரி ஒரு ஸ்பூஃப் மெயில் (ஏமாற்று மெயில்) ஃபினான்ஷியல் செக்யூரிடி செல்லுக்கு அனுப்பினேன். எதிர் பாத்த மாதிரி உடனே அவங்க ஒரு டெம்பரரி ப்ளாக் (temporary block) போட்டாங்க. அதை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து வெச்சுகிட்டேன். அதுக்கு அப்பறம் தான் என்னோட அக்கௌண்ட் நம்பரை உங்களுக்கு சொன்னேன். நாளைக்கு அவங்க சந்தேகப் பட்டு கேட்டா அதே காரணத்தை சொல்லி இந்த கவரை கொடுத்துடப் போறேன். பதட்டத்தில உனக்கு கொடுக்க மறந்துட்டேன்னு சொல்ல போறேன். நித்தின்:: "இப்ப அந்த டெரரிஸ்ட்டுகளோட அக்கௌண்ட் ப்ளாக் (block) ஆகி இருக்கா?" ஜாஷ்வா: "ம்ம்ஹூம் .. அரை மணி நேரத்துல ப்ளாக் (block) லிஃப்ட் பண்ணிட்டாங்க. என்னோட ஈமெயில் ஸ்பூஃப் மெயில்னு தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும் அந்த அக்கௌண்டை அடுத்த ராண்டம் ஆடிட் சைக்கிளில் (Random Audit Cycle) ஆடிட் பண்ண சொல்லி ஃப்ளாக் (flag) பண்ணி வெச்சு இருப்பாங்க. அதனால ஹாஃப்மன் நிச்சயம் நான் பண்ணின காரியத்தை பாராட்டுவான். இல்லைன்னா, அவன் அந்த அக்கௌண்ட்டை அடுத்த சைக்கிள்ல ஆடிட் பண்ணும் போது நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃபர் விஷயம் வெளில வரும். ஃப்ளாக் (flag) பண்ணின அக்கௌண்டை ஆடிட் பண்ணாம ஸ்கிப் பண்ணவும் முடியாது" சக்திவேல்: "சரி, நீ அக்கௌண்ட் நம்பர் சொல்ல மறந்துட்டேன்னா அதை அந்த டெரரிஸ்ட்டுகள் நம்புவானுகளா?"ஜாஷ்வா: "டெரரிஸ்ட்டுங்க நம்பறது சந்தேகம். ஹாஃப்மனும் ஆண்டர்ஸனும் வேற அக்கௌண்ட்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணின காரணத்தை நிச்சயம் நம்புவாங்க. அதுக்கப்பறம் நான் மறந்துட்டேன்னு சொல்றதை நம்ப மாட்டாங்க. சான்ஸ் கிடைச்சுது சுருட்ட பாத்தேன். சுருட்ட முடியலை இப்ப திருப்பி கொடுக்கறேன்னு சொல்லிட்டு வரப் போறேன். அவனுக ஒண்ணும் பெரிய உத்தமனுக இல்லை. இந்த மாதிரி ஒரு சான்ஸ் கிடைச்சு இருந்தா பணத்தை எடுத்துட்டு கண் காணத ஊருக்கு போயிருப்பானுக. சோ, பேசாம வாங்கிக்கு வாங்க" நித்தின்: "அவங்க பேசாம வாங்கிக்குவாங்க. ஆனா அந்த டெரரிஸ்ட் கும்பல் பேசாம வாங்கிக்குவாங்களா?" ஜாஷ்வா: "இந்த மாதிரி ஒரு வேலையை ட்ரக் கார்ட்டல்காரங்ககிட்ட பண்ணி இருந்தா சான்ஸே இல்லை. அவங்க கிட்ட யாரும் வாலாட்டாம இருக்க மத்தவங்களுக்கு ஒரு பாடமா நம்மை எல்லாரையும் I mean including Anderson and Hoffman தீத்துக் கட்டிடுவாங்க. ஏன்னா அவனுக இங்க இன்னும் தொடர்ந்து பிஸினஸ் பண்ணனும். ஆனா தீவிர வாத கும்பல் அப்படி இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன். எனி ஹவ், நாளைக்கு மீட்டிங்குக்கு தீவிர வாத கும்பல்காரங்க யாரும் வரமாட்டாங்க. அவனுக நேரடியா ஆண்டர்ஸனை காண்டாக்ட் பண்ணி இருக்க மாட்டாங்க. யாரோ ஒரு இண்டர்மீடியரி (இடையீட்டாளர் அல்லது பிரதிநிதி) மூலம்தான் காண்டாக்ட் பண்ணி இருப்பாங்க. பணம் ட்ரான்ஸ்ஃபர் ஆகலைங்கற விஷயத்தை நம்ம கிட்ட விசாரிச்ச அப்பறம் தான் ஆண்டர்ஸன் அவங்க கிட்ட சொல்லுவான். அப்படியும் நான் சுருட்ட பாத்தேன்னு என்னை போட்டு கொடுக்க மாட்டான். அப்படி போட்டு கொடுத்தா அவங்க ரெண்டு பேர் மேலயும் சந்தேகம் வரும். நாம் எப்பவும் சொல்ற மாதிரி ட்ரான்ஸ்ஃபருக்கு 100% உத்திரவாதம் இல்லை நடுவுல எதாவுது பிரச்சனை வந்தாலும் வரலாம்னு டெரரிஸ்ட்டுகள் கிட்டயும் ஆண்டர்ஸன் முதல்லயே சொல்லி இருப்பான். சோ, சமாளிச்சுடலாம்" நித்தின்: "என்ன கைக்கு வந்தது வாய்க்கு வரலையேன்னு இருக்கு .. " ஜாஷ்வா: "நம்ம பண்ற விஷயத்துல பேராசை கூடாதுன்னு சொல்லி இருக்கேன் இல்லை?" சக்திவேல்: "சரி, நாளைக்கு அந்த மீட்டிங்குக்கு எப்பவும் போல நாம் ஒண்ணாதானே போறோம்? மீட்டிங்குக்கு முன்னால் எங்க மீட் பண்ணறது?" என்று கேட்டுக் கொண்டு இருக்கும் போது ஒரு கருப்பர் இனத்தவன் அவர்களின் டேபிளுக்கு வந்து ஜாஷ்வாவின் அருகே "யோ ப்ரோ" என்றவாறு அமர்ந்தான். பிறகு "ஃபுல்லி லோடட். எக்ஸ்ட்ரா ரெண்டு கார்ட்ரிட்ஜ் மேகஸீன் வெச்சு இருக்கேன்" என்றபடி சிறிது கனமான ஒரு பழுப்பு நிற கவரை ஜாஷ்வாவிடம் கொடுத்து விட்டு விடை பெற்றான். எதிரில் இருந்த இருவரும் அந்த கவரைப் பார்த்தபடி இருந்தனர். ஜாஷ்வா: "முக்கியமா நாளைய மீட்டிங்க் பத்தி டிஸ்கஸ் பண்ணத்தான் உங்களை அவசரமா வரச்சொன்னேன். நாம் கொஞ்சம் முன் ஜாக்கிரதையா இருப்பது நல்லது. நான் ஒரு ப்ளான் வெச்சு இருக்கேன்" சக்திவேல்: "என்ன ப்ளான் சொல்லு" ஜாஷ்வா: "நீங்க ரெண்டு பேரும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே அந்த அண்டர்க்ரௌண்ட் பார்க்கிங்க் லாட்டுக்கு வந்து கார்லயே ஒளிஞ்சுட்டு வெயிட் பண்ணுங்க. நான் பத்து மணிக்கு என் கஸின் ஒருத்தன் கூட கார்ல வருவேன். என்னை இறக்கி விட்டுட்டு அவன் பக்கத்திலயே ஒரு ஸ்லாட்ல காரை பார்க் பண்ணிட்டு வெயிட் பண்ணுவான். நான் ஆண்டர்ஸன்கிட்டயும் ஹாஃப்மன்கிட்டயும் பேச ஆரம்பிப்பேன். அனேகமா அவங்க ரெண்டு பேர் மட்டும்தான் வருவாங்க. அவங்க ஒழுங்கா பேசினா உங்களுக்கு சிக்னல் கொடுக்கறேன். அதுக்கு அப்பறம் நீங்க கார்ல இருந்து இறங்கி வாங்க. அப்படி இல்லாம கூட வேற ஆளுங்க யாராவுது இருந்தா நீங்க கார்லயே இருங்க. வெளிய வராதீங்க. If I sense something fishy .. " என்றபடி அந்த பழுப்பு நிறக் கவரை லேசாக திறந்து காட்டினான். உள்ளே ஒரு பிஸ்டல் (கை துப்பாக்கி) இருந்தது. 
Like Reply


Messages In This Thread
RE: Checkmate ... A cybercrime thriller 1 dreamer - by johnypowas - 07-02-2019, 11:51 AM



Users browsing this thread: 2 Guest(s)