07-02-2019, 11:49 AM
சக்திவேல்: "நம்ம அக்கௌண்டா? என்னடா சொல்றே?" ஜாஷ்வா தன் ஜாக்கெட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து டேபிளில் மேல் போட்ட பிறகு தொடர்ந்தான், "கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் பணத்தை எல்லாம் எப்படி நான் இங்க இருந்து பஹாமாஸுக்கு கொண்டு போறதுன்னு யோசிச்சப்ப என் கஸின் ஒருத்தன் பேர்ல ஒரு நம்பர் அக்கௌண்ட் ஓபன் பண்ணினேன். ஆனா அதுக்கு அப்பறம் அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஃப்ஸர் (ஹவாலா போன்ற பண மாற்றம்) முலம் கொண்டு போறதுன்னு முடிவு பண்ணினேன். அண்டர்க்ரௌண்ட் ட்ரான்ஃப்ஸர் மூலம் பணம் அனுப்பறதுக்கு இந்த அக்கௌண்ட் தேவை இல்லை. இருந்தாலும் எதுக்கும் இருக்கட்டும்னு இதை க்ளோஸ் பண்ணலை. அக்கௌண்ட் ஓபன் பண்ணறதுக்காக ஆயிரம் டாலர் போட்டதோடு சரி. அதுக்கு அப்பறம் அக்கௌண்டை ஆபரேட் பண்ணலை. (அதிலிருந்து பணம் எடுக்கவோ போடவோ செய்ய வில்லை). அந்த டெரரிஸ்ட் கும்பல் பிடிபட்ட நியூஸ் வந்த உடனே அவங்களுக்கு நாம் பண்ணின முதல் ரெண்டு ட்ரான்ஸ்ஃபர் மூலம்தான் பணம் கிடைச்சு இருக்குன்னு எனக்கு தெரிய வந்துது. மூணாவுது பெரிய ட்ரான்ஸ்ஃபர். பத்து மில்லியன் (ஒரு கோடி). வேற எதோ பெரிய வேலைக்குன்னு நினைக்கிறேன். நம்மை ஏமாத்தினதுக்கு தண்டனையா அவனுக அக்கௌண்ட்டுக்கு பதிலா இந்த அக்கௌண்ட் நம்பரை உங்க கிட்ட கொடுத்தேன். எப்பவும் போல 10-30-30-30 ரேஷியோல (விகிதத்தில்) நாம் பங்கு போட்டுக்கலாம்னு இருந்தேன். உங்க ஷேரை செண்ட் ஆஃப் பண்ண வரும்போது ஒரு சர்ப்ரைஸ் கிஃப்டா கொடுக்கலாம்னு இருந்தேன்" என்று புன்முறுவலிட்டான்.நித்தின் முகம் வெளிறி அமர்ந்து இருந்தான். தான் எதற்கும் அதிர்ச்சி அடையாதவன் என்று நிரூபிப்பதைப் போல் சக்திவேல் உதட்டை சுழித்து சிரித்த படி, "உனக்குதான் இப்படி எல்லாம் தோணும் .. நாம்தான் இந்த ஒரு வருஷத்துல வேணுங்கற அளவு சம்பாதிச்சுட்டமே. எதுல விளையாடறதுன்னு இல்லையா?" ஜாஷ்வா: "நம்ம சம்பாதிச்சதுக்கு மேல இன்னும் ஆளுக்கு மூணு மில்லியன் டாலர்னா கசக்குதா?" நித்தின்: "கசக்கலைதான் .. டேய், சக்தி, நாமும் இந்தியா திரும்பி போறதுக்கு பதிலா இவன் கூட பஹாமாஸ் போய் செட்டில் ஆயிடலாமா?" சக்திவேல்: "சும்மா இருடா... ஏன் ஜாஷ்? இப்ப அவங்க கைக்கு பணம் போகலைன்னு தெரியாம இருக்குமா?" ஜாஷ்வா: "என்னோட லாஜிக்கை கொஞ்சம் கேளு. அந்த நாலு பேர் அரெஸ்ட் ஆனதுக்கு அப்பறம் டெரரிஸ்ட் கும்பலில் யாரும் பேங்க் பக்கம் கொஞ்ச நாள் போக மாட்டாங்க. ஏன்னா எஃப்.பி.ஐ யாரெல்லாம் கேஷ் (பணம்) எடுக்கறாங்கன்னு கண்காணிக்கும். சந்தேகப் படற மாதிரி யார் பணம் எடுத்தாலும் உடனே வந்து கொத்திட்டு போயிடுவாங்க. அவனுகளுக்கும் அது தெரியும். ஹாஃப்மன் பணம் போய் சேந்துச்சான்னு பாக்கணும்னா சிஸ்டத்துல லாக் இன் பண்ணி பணம் போய் சேர வேண்டிய அக்கௌண்ட் நம்பரை கொடுத்து கொயரி பண்ணனும். அதுக்கு அவனுக்கு ரைட்ஸ் (கணிணி அல்லது இணையத்தை உபயோகிப்போருக்கு வழங்கப் படும் தகுதி அல்லது உரிமை) இருக்கு. இருந்தாலும் சிஸ்டத்துல லாக் இன் (log in) பண்ணற ஒவ்வொருத்தரும் என்ன பண்ணினாங்கன்னு ஒரு ஆடிட் ட்ரெயில் (நடக்கும் கணக்கு வழக்குகளை தணிக்கை செய்வதற்கு உதவ கணிணியில் பதிக்கப் படும் ஏடு) ரெக்கார்ட் ஆயிட்டு இருக்கு. அது அவனுக்கு தெரியும். அதை பாத்தா ஹாஃப்மன் எந்த அக்கௌண்டை கொயரி பண்ணினான்னு தெரிஞ்சு அவன் மேல சந்தேகம் வரும். அப்படி ஒரு தடயம் வரக் கூடாதுங்கற காரணத்தினால அவன் எப்பவும் பாக்க மாட்டான். ஆண்டர்ஸனுக்கு பணம் போய் சேந்துதான்னு பார்ட்டியோ இல்லை ஹாஃப்மனோ சொன்னாதான் உண்டு. அப்படி இருக்கும் போது இவங்க ரெண்டு பேருக்கும் நான் பண்ணின அக்கௌண்ட் மாறாட்டம் தெரிய போறதில்லைன்னு கான்ஃபிடெண்டா இருந்தேன். இப்ப கூட அவங்களுக்கு தெரிஞ்சு இருக்குமாங்கறது ஒரு சந்தேகம்தான்" நித்தின்: "சரி, இப்ப தெரிஞ்சு போச்சுன்னு வெச்சுக்குவோம். அவ்வளவு பணம் போனா சும்மா விடுவாங்களா?" சக்திவேல்: "பணம் எங்க போச்சு இன்னும் நம்ம கைல தான இருக்கு. எதாவுது சொல்லி அந்த அக்கௌண்டை அவங்க கிட்ட கொடுத்துடணும். எனிவே அவங்களுக்கு நம்ம கூட இனி எந்த பிஸினஸும் இல்லை. தே ஷுட் நாட் மைண்ட்" நித்தின்: "அவங்களை ஏமாத்த பாத்து இருக்கோம்னு தெரிஞ்சா? இதுக்கு முன்னாடி அப்படி பண்ணி இருப்போமோன்னு வீணா சந்தேகப் படுவாங்க" சக்திவேல்: "ஹலோ! இது வரைக்கும் நம்ம பண்ணின ட்ரான்ஸ்ஃபர் எல்லாம் கொலம்பியன் ட்ரக் கார்டல் காரங்களுக்கு. அவனுக இந்த டெரரிஸ்ட்டுகளை விட ரொம்ப சாமர்த்திய சாலிங்க. ஒரு ட்ரான்ஸ்ஃபர் ஒழுங்கா போலைன்னாலும் உடனே அவங்களுக்கு தெரிஞ்சுடும். அது ஆண்டர்ஸனுக்கும் ஹாஃப்மனுக்கும் தெரியும். அதனால இதுவரைக்கும் அப்படி ஆகி இருக்கும்னு சந்தெகப் படறதுக்கு சான்ஸே இல்லை" நித்தின்: "சரி, இப்ப நீ அவங்க கிட்ட என்ன சொல்லி சமாளிக்க போறே ஜாஷ்வா?"