07-02-2019, 11:49 AM
அடுத்து அமர்ந்து எதிரில் இருப்பவனை தீர்க்கமாக பார்த்தபடி உரையாடலில் உன்னிப்பாக கவனம் செலுத்தி இருந்தவன் சக்திவேல் முத்துசாமி. ஆறடி இரண்டு அங்குல உயரம். மேக்கப் இல்லாத ரஜனி காந்த் நிறம். மீசையை தவிர மழித்த முகம். அவன் உடலமைப்பு குறிப்பிடத்தக்கது. ரவி வர்மா தனது ஓவியங்களில் வெவ்வேறு தேவர்களையும் வீரர்களையும் சித்தரித்து இருக்கிறார். ஆனால் அவர் தனது ஓவியங்களில் ஆஞ்சனேயருக்கு கொடுத்து இருக்கும் உடலமைப்பு வேறு எவருக்கும் கொடுக்கவில்லை. உடலின் வலிமையையும் தேவையானால் வில்லாய் வளையும் தன்மையையும் கணத்தில் காற்று வேகத்தில் செயல்படும் திறனையும் பறைசாற்றும், ஆஜானுபாகு என்பதற்கு முழுமையான உதாரணமான உடலமைப்பு. சக்திவேலின் உடலமைப்பை எளிதில் அதற்கு ஒப்பிடலாம். பிறந்து பள்ளி படிப்பு முடியும் வரை ஈரோடு. பிறகு சென்னையின் பழைய பெயரை இன்னமும் தக்க வைத்துக் கொண்டு இருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸில் பி.டெக். விளையாட்டு வீரர்கள் படிப்பில் மட்டம் என்ற பொதுவான கருத்தை பொய்யாக்கியவர்களில் ஒருவன். அவனும் இப்போது ஒரு சீனியர் சாஃப்ட்வேர் எஞ்சினியர். எதிரில் இருந்தவன் ஜாஷ்வா எட்வர்ட்ஸ். தலைமுடியும் ஓரளவு அவனது தோலின் நிறமும் மட்டுமே அவனை கருப்பர் இனமென்று காட்டின. அவனது வசீகரமான முகவடிவும் கருப்பர்களுக்கு இல்லாத மெலிந்த உதடுகளும் சிரித்தால் பளீரிடும் பல் வரிசையும் ஹாலிவுட் நடிகர் டென்ஸில் வாஷிங்க்டனை நினைவு படுத்தின. பிறந்தது நியூயார்க் நகரத்தின் Black Ghetto என்று அழைக்கப் படும் ஹார்லம் பகுதியில். போதை பொருளுக்கு அடிமையான தாயால் தந்தை பெயர் தெரியாத அவனை வளர்க்க இயலாது என்று அரசாங்கம் எடுத்த முடிவால் பல ஃபாஸ்டர் இல்லங்களில் (சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில்) வளர்ந்தும் உலகின் தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளின் ஒன்றான எம்.ஐ.டியில் கம்ப்யூட்டர் சைன்ஸில் இடம் பிடித்து படித்தபின் உலகெங்கும் வெவ்வேறு வாய்ப்புகள் இருந்தும் தன் பிறப்பிடமான ஹார்லத்திற்கே திரும்பி வந்து குடியேறியவன். அவனுக்கு அப்பகுதியில் அவன் வயதை ஒட்டிய அவனைப் போன்ற வரலாறு கொண்ட பல சகோதரர்கள் உண்டு. அமெரிக்க வங்கிகளில் ஒன்றில் டேட்டா பேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர். அவன் படிப்புக்கு அந்த வேலைதானா என்று கேட்பவருக்கு புன்சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்கும். வரும் சம்பளத்தை விட அவன் செய்யும் மற்றோர் வேலையும் அந்த வேலையில் கிடைக்கும் பண வரவுமே இவ்வேலையில் அவன் இது வரை இருப்பதற்கு முக்கிய காரணங்கள். இனி அவர்கள் உரையாடலில் கவனம் செலுத்துவோம். ஜாஷ்வா: "உங்க ரெண்டு பேரோட ஃப்ளாட்ஸ் சுத்தமா காலி பண்ணீட்டீங்களா?" நித்தின்: "எஸ். ஒரு துரும்பு கூட விடாம தொடைச்சு விட்டுட்டு வந்தோம்" ஜாஷ்வா: "இப்ப தங்கி இருக்கற ஹோட்டல் ரூம் எப்படி இருக்கு?" சக்திவேல்: "ரூம் ஓ.கே .. பட் இன்னும் ரெண்டு நாள்ல எப்படியும் இந்தியா திரும்பறோம். அப்படி இருக்கும் போது எதுக்கு இந்த ஏற்பாடு?" ஜாஷ்வா: "ஒரு முன் ஜாக்கிரைதான். அப்பறம் அந்த கார் மேட்டர்?" நித்தின்: "ரெண்டையும் ரிடர்ன் பண்ணிட்டு வேற ஒரு ரெண்டல் கம்பெனில இருந்து ஒரு கார் எடுத்து இருக்கோம். ரெண்டு பேரும் ஒண்ணுலதான் போறோம். இப்ப எல்லாம் எங்க போனாலும் நான் முன்னாடி போயிட்டு மெதுவா ஒட்டிட்டு வர்ற இவனுக்காக வெய்ட் பண்ண வேண்டியது இல்லை. அதைத் தவிர ஒரு உபயோகமும் இல்லை. இந்த முன் ஜாக்கிரதை கொஞ்சம் ஓவரா இல்லை?" ஜாஷ்வா: "உனக்கு ஒரு கதை தெரியுமா? மார்கரேட் தாச்சர் பிரதமரா (PM) இருந்தப்ப ஐ.ஆர்.ஏ தீவிரவாத இயக்கம் அவரை குண்டு வெச்சு கொல்லப் பாத்துது. பிரிட்டிஷ் போலீஸாரோட முன் ஜாக்கிரதைனால மயிரிழையில தப்பிச்சாங்க. அப்ப ஒரு சீக்ரெட் ப்ரெஸ் ரிலீஸில் அந்த ஐ.ஆர்.ஏ சீஃப் என்ன சொன்னான் தெரியுமா? 'நாங்க அவரை கொல்ல நூறு முறை முயற்சி செய்து அதில் ஒரு முயற்சியில் வெற்றி அடைந்தால் எங்கள் குறிக்கோள் நிறைவேறிடும். ஆனால், போலீஸார் அவரை காப்பாத்துகின்ற நூறு முயற்சியிலும் வெற்றி அடைந்தால்தான் அவர்கள் குறிக்கோள் நிறைவேறும்'. டெரரிஸ்ட்டுங்க விஷயத்துல எப்பவுமே கொஞ்சம் அதிக முன் ஜாக்கிரதை தேவை" சக்திவேல்: "சரி, நம்மை எஃப்.பி.ஐ காரங்க சந்தேகப் பட வாய்ப்பு இருக்கா?" ஜாஷ்வா: "அந்த டெரரிஸ்ட்டுகளுக்கு பணம் எங்கே இருந்தோ கிடைச்சு இருக்குன்னு எஃப்.பி.ஐக்கு தெரியும். ஆனா அது அந்த ஷிப்பிங்க் கம்பெனி வழியா நாம் பண்ணின ட்ரான்ஸ்ஃப்ர மூலம்னு சந்தேக பட வாய்ப்பு இல்லை. Come On, have faith in our expertise! (நம் திறமை மேல கொஞ்சம் நம்பிக்கை வை). அப்படியே அந்த ட்ரான்ஸ்ஃபரை லொக்கேட் பண்ணினாலும் எப்படி அந்த ட்ரான்ஸ்ஃப்ர் நடந்துதுன்னு புரியறதுக்கு பல வருஷங்கள் ஆகும்" சக்திவேல்: "ஆனா நம்மை ஏமாத்தி அந்த ட்ரான்ஸ்ஃபர் பண்ண வெச்சதை இப்ப நினைச்சாலும் பத்திகிட்டு வருது" ஜாஷ்வா: "எனக்கு மட்டும் சந்தோஷமா இருக்கா? நடந்தது நடந்துடுச்சு விடு" நித்தின்: "அப்பறம் ஏன் எங்களை அவசரமா வரச்சொன்னே. எப்படியும் நாளைக்கு டின்னருக்கு மீட் பண்ணறதா இருந்தோமே?" சக்திவேல்: "ஆமா, மத்தியானம் கூட சஞ்சனா என்னை ஃபோன்ல கூப்பிட்டு எந்த மாதிரி சாப்பாடு வேணும்னு பேசிட்டு இருந்தாளே?" ஜாஷ்வா: "அதில ஒரு மாற்றம். நாளைக்கு ஆண்டர்ஸன் நம்மை மீட் பண்ண ஹாஃப்மன் மூலமா சொல்லி அனுப்பி இருக்கான். நைட்டு பத்து மணிக்கு. யூஷுவல் ஸ்பாட். இதை பத்தி சஞ்சனா கிட்ட நான் இன்னும் சொல்லலை" சக்திவேல்: "எதுக்கு மீட் பண்ணனுமாம்?" ஜாஷ்வா: "கடைசியா பண்ணின மூணு ட்ரான்ஸ்ஃபரும் டெரரிஸ்ட் கும்பலுக்குன்னு ஆண்டர்ஸனுக்கும் தெரியாதாம். கொலம்பியன் ட்ரக் கார்டல்காரங்கதான் பண்ண சொன்னதா நம்பினானாம். இப்ப அவனும் எங்கே எஃப்.பி.ஐ காரங்க ட்ரேஸ் பண்ணிடுவாங்களோன்னு பயந்து இருக்கானாம். நாம் என்ன ப்ரிகாஷன் எடுத்துக்கறதுன்னு டிஸ்கஸ் பண்ண வர சொல்லி இருக்கான்" சக்திவேல்: "எப்படியும் நாங்க நாளன்னைக்கு இந்தியா திரும்பறோம். நீயும் அடுத்த வாரம் பஹாமாஸுக்கு போறே. அப்படி மாட்டினா அவங்க ரெண்டு பேரும்தான் மாட்டணும். இதுல நாம் என்ன ப்ரிகாஷன் எடுக்கறது?" ஜாஷ்வா: "அவன் அப்படி சொன்னதுனால எனக்கு கொஞ்சம் சந்தேகம். அதனால தான் உங்ககிட்ட நேரில் பேச வரச் சொன்னேன். இல்லைன்னா எப்பவும் போல தகவல் கொடுத்து இருப்பேன்" சக்திவேல்: "என்ன சந்தேகம்?" ஜாஷ்வா: "அவன் நம்மை சந்தேகப் படறானோ அப்படிங்கறது ஒரு சந்தேகம். இன்னோரு சந்தேகமும் இருக்கு அதை நான் கடைசியா சொல்றேன்" நித்தின்: "என்ன ரொம்ப புதிர் போடறே? சரி உன் முதல் சந்தேகத்துக்கு வருவோம். நம்மை எதுக்கு அவங்க சந்தேகப் படணும்? நாம் தான் சொன்ன ட்ரான்ஸ்ஃப்ர எல்லாம் முடிச்சு கொடுத்துட்டமே?" ஜாஷ்வா: "அந்த டெரரிஸ்ட் கும்பலுக்கு பண்ணின மூணு ட்ரான்ஸ்ஃபர்ல ரெண்டு தான் அவங்க கைக்கு போய் சேந்துது" சக்திவேல்: "என்ன சொல்றே? புரியலே" ஜாஷ்வா: "உங்ககிட்ட சொல்லாம நான் ஒரு சின்ன வேலை பண்ணினேன்" என்றவன் எதிரில் இருந்த இருவரும் கூர்ந்து பார்ப்பதைக் கண்டு சரணடைவது போல் கைகளை உயர்த்தி "டோன்ட் வொர்ரி, நம்ம நல்லதுக்குதான்" நித்தின்: "என்ன வேலை?" ஜாஷ்வா: "லாஸ்ட் லெக்ல அவங்க சொன்ன அக்கௌண்டுக்கு உங்களை நான் ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லலை. நம்ம அக்கௌண்டுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொன்னேன்"