07-02-2019, 11:48 AM
(This post was last modified: 07-02-2019, 06:30 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
Thursday, 21 May 20094 Accused of Bombing Plot at Bronx Synagogues Four men were arrested Wednesday night in what the authorities said was a plot to bomb two synagogues in the Bronx and shoot down military planes at an Air National Guard base in Newburgh, N.Y. வியாழன்ம், மே 21 2009 நியூ யார்க் டைம்ஸ் தினசரியில் வெளிவந்த ஒரு செய்தியின் சாரம் ப்ராங்க்ஸ் பகுதியில் இருக்கும் யூத மத ஆலயத்தை குண்டு வைத்து தகற்கவும் நியூபர்க் பகுதியில் இருக்கும் ஏர் நேஷனல் கார்ட் விமானத் தளத்தின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தவும் திட்டமிட்ட நான்கு நபர்களை நேற்று இரவு எஃப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.The Last Meeting with Joshua Edwards Wednesday, 27 May 2009, 4:00 PM The Pearl Diner, Fletcher Street, Manhattan, New York, USA ஜாஷ்வா எட்வர்ட்ஸுடன் இறுதி சந்திப்பு புதன், மே 27 2009, மாலை 4 மணி நியூ நகரத்தின் மன்ஹாட்டன் பகுதியின் ஃப்ளெட்சர் வீதியில் இருக்கும் பர்ல் டைனர் என்னும் ரெஸ்டாரண்ட் காலையிலும் இரவிலும் உட்கார இடமில்லாமல் கூட்டம் நிரம்பி வழியும் அந்த உணவகம் அன்று அந்த இளமாலை வேளையில் பாதியளவே நிரம்பி இருந்தது. ஆள் நடமாட்டமற்ற ஒரு மூலையில் அருகருகே இருவரும் அவர்களுக்கு எதிரே ஒருவனுமாக அந்த மூன்று இளைஞர்கள் அமர்ந்து இருந்தனர். பார்ப்பவர் கண்களுக்கு அம்மூவரும் இருபத்து ஐந்து வயதிலிருந்து முப்பதுக்குள் இருப்பார்கள் என்பதை தவிர உருவ ஒற்றுமை மருந்துக்கும் இல்லை. அருகருகே அமர்ந்து இருந்தவர்கள் இருவரும் இந்திய உபகண்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் எதிரே இருந்தவன் ஆஃப்ரிக்கன்-அமெரிக்கன் எனும் கருப்பர் இனத்தவன் என்றும் எளிதாக கணிக்கலாம். மூவரும் மென்பொருள் வித்தகர்கள். மூவரும் அவரவர் நாட்டின் தலை சிறந்த கல்லூரிகளில் கம்ப்யூட்டர் சைன்ஸ் படித்து பட்டம் பெற்றவர்கள். மூவருக்கும் மென்பொருள் எழுதுவதும் அல்காரிதங்களை ஆராய்வதும் சுவாசிக்கும் காற்றைப் போல உயிர் வாழ ஒரு முக்கிய தேவை. அவர்கள் காலை முதல் மாலை வரை சம்பளத்துக்கு செய்யும் மென்பொருள் வேலையை தவிர ஓய்வு நேரங்களிலும் தூங்காமல் பல இரவுகளிலும் செய்யும் வேறு ஒரு மென்பொருள் வேலையே அவர்களை இங்கு ஒன்று சேர்த்து இருக்கிறது. அருகருகே இருந்தவர்களில் ஜன்னலருகே அமர்ந்து வீதியில் போக வரும் பெண்களை அடிக்கடி நோட்டம் விட்டபடி இருந்தவன் நித்தின் தேஷ்பாண்டே. ஐந்து அடி பத்து அங்குல உயரம். கோதுமை நிறம். முழுவதும் மழிக்கப் பட்ட சிறிதே பெண்மை கலந்த பல பெண்களை கவரும் அழகான முகம். பிறந்தது மும்பை. பள்ளிப் படிப்பு பத்தாவது வரை மும்பையில்; ப்ளஸ் டூ படித்தது புனாவுக்கு அருகே பஞ்சகனி என்னும் இடத்தில் இருக்கும் ஒரு உயர்தர போர்டிங்க் ஸ்கூலில்; பிறகு ஐ.ஐ.டி மும்பையில் பி.டெக் முடித்து மூன்று வருட அனுபவத்திற்கு பிறகு இப்போது சீனியர் சாஃப்ட்வேர் எஞ்சினியர். கணிப்பொறியை தவிர காரோட்டுவதிலும் கில்லாடி.