07-02-2019, 11:27 AM
"சார் இத புடிங்க.. நான் ட்ராலி லாக் பண்னாம வந்திட்டேன்... வேற எவனாவது எடுத்து வச்சிக்கிட்டான்ன நாளைக்கு என் தலை தான் உருளும் " சொல்லி விட்டு ஏ சி திறந்து உள்ளே போனான்...
அவன் எதிர் பார்த்த மாதிரியே.. அகிலா அங்க அவன் பெர்தில் உட்கார்ந்திருக்க.....
அவள் அருகில் போய் " என்ன அகிலா தூங்கலையா... "
"இல்லடா தூக்கம வரலை..."
"ஏன்.. அதுக்கு என் பெர்த்ல வந்து உக்காந்து இருக்கீங்க..."
"உன்னது தான் சைடு லோயர்.. போதுமா... குடிச்சியா.... அவங்க கூட..." அவள் குரலில் கலக்கம்...
"இல்லை அகி நான் குடிக்கலை.... "அவன் அவளை அகி என்று சுருக்கி கூப்பிட்டது அவளுக்கு தெரிந்தும் அவன் அப்படி சொன்னதை அவள் பெரிசா எடுத்துக்கலை...
"நம்ம ஸ்டாப் நாளக்கு எதுன்னாலும் நாம தான் பதில் சொல்லனும்... அது தான் அவங்க கூட இருக்கேன்..."
"நீ சொன்ன பிறகு நான் குடிப்பேனா... குடிக்க மாட்டேன் அகிலா..."
"இல்லை நாளைக்கு நிறைய வேலை இருக்குடா.. நீ இப்படி அவங்க கூட இருந்தா.. எப்படி நாளைக்கு வேலை செய்வ...."
அவள் கேட்டதும் அவனுக்கு அவள் தன் மேல் கொண்டிருந்த அக்கரை வெளிப்பட்டது....
"இல்லை அகி நான் மேனஜ் பன்னிகிறேன்... நீ இனிமே இந்த பக்கம் வராதே.. அந்த பக்கம் போ......"
சொல்லிட்டு விடு விடுவென்று கதவை நோக்கி நடந்தான்... மோகன்.... அகிலாக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது... தன்னை ஏதோ கிண்டல் பண்ணி பேசி இருக்கிறார்கள்.. அது தாங்காமல் அவன் உள்ள வந்து தன்னை சமாதானம் பண்ணி... திரும்ப போய்....
இரண்டு நாள் முன்னாள் .. அவள் பின்னோக்கி போனாள்...
ஆபிஸ்... மோகன் சீட்டில் இல்லை.. ஒரு மிக முக்கியமான ரிப்போர்ட்... பாக்கனும் அது மோகன் கம்பூட்டர் ல இருக்கு.. பார்தாள்.. அவன் கம்புய்ட்டர ஓப்பன் பன்னியவள்.. அதிர்ந்தாள்.. மெஸஞ்சர் ஓபன் ஆகி அவள் ஐடி காட்டியது... அவள் அனுப்பிய மெஸஜ் எல்லாம்... அவன் ஐடி ல.....அதிர்ந்தவள்.. சுதாரித்தாள்... ஆக.. இவன் தான் அவன்... அவள் முகத்தில் மெல்லிய புன் முறுவல்..
படவா என் கிட்டயே வாஅ... உனக்கு மட்டும் தான் தெரியுமா.. அப்படி ஆக்ட் பண்ண.... நான் சாவித்திரி டா.. அத விட நல்லா ஆக்ட் கொடுப்பேன் பாக்குரியா... ம்ம்ம்ம் யோசித்தபடி வந்து தன் இருக்கையில் அமர்ந்தாள்....
ம்ம்ம்ம்ம்.... அது தான் இப்ப மனசில் ஓடியது.....மனசு அவளை கேள்வி கேட்டது....அவன் குடிக்க கூடாது .. ஏன் இப்படி அவனை நீ காதலிக்கிறாயா.. மனசு இடித்தது......
இல்லை அவன் என் அசிஸ்டண்ட்....
சோ வாட் அடிமை இல்லையே.....
ஆனா அவன் குடிக்க கூடாது....
அப்ப அவனை நீ காதலிக்கிற அப்படித்தானே.....
இல்லை
அவனை புடிச்சிருக்கா.....
ம்ம்ம்ம்ம் ஆமா....
இப்பவா இல்லை முன்னாடியேவா...
இல்லை இப்பத்தான் கொஞ்ச நாளா...அவனை புடிக்க ஆரம்பிதிருக்கு....
ஏன்...
தெரியலை.. ஆனா அவன் கூட பேச புடிக்குது... அவன் கூட சுத்த பிடிக்குது....
அப்ப அவனை நீ காதலிக்கிற...
இல்லை..... இன்னும் இல்லை....அவனை புடிச்சிருக்கு....
என்ன இது அவனை புடிச்சிருக்கு ஆனா அவனை காதலிக்கலை.... என்ன இது....
அது தான் எனக்கும் தெரியலை..... அவனை புடிச்சிருக்க அவ்வளவு தான்...
மனசு அவளிடம் சண்டை போட்டது........
அப்படியே அவன் பெர்த்தில் தூங்க ஆரம்பிததாள் அகிலா.....
மோகன் திரும்பி வந்தான்.