கனியும் ஒரு காதல்..(completed)
#10
சூப்பர் சரக்கு மச்சி... எப்படிடா இது...அவர்களுக்குள்.. எல்லாம் நம்ம பையன் இருக்க நாம் ஏன் கவலைப்படனும்.. என்னக் காட்டி கண்னடிக்க

அட பாவிகளா.. ஆபீச பொருத்த மட்டில் சேல்ஸ்... அக்கவுண்ட்ஸ்.. அடிச்சுகுவானுக.. இங்க வந்தா.. இப்படி குடிக்கரதுக்கு
கூடி கும்மியடிக்கிறாங்க....

டாய்லட் கதவு திறந்தது.. அகிலா வெளிய வந்தாள்.. அவர்களைப் பார்த்தாள் என்ன சார் இன்னும் தூங்கலையா...

இல்லம்மா கொஞ்சம் பேச வேண்டி இருக்குது.. அங்க எல்லாம் தூங்குறாங்க.. நீ போய் படு... நாங்க பேசிட்டு வறோம்..

அகிலா மோகனை முறைத்தவாறு அவனுக்கு கண்னால் எச்சரிக்கை விடுத்து விட்டு சென்றாள்....

சரி பாட்டில் இல்லை.. எப்படி அடிக்க போறங்க பார்போம்.. கொஞ்சம் நின்றான் மோகன்....

AGM வாட்டர் பாட்லை கொண்டு வந்திருந்தார்... அதில் முழுசும் தன்னீர்..
ஜி எம்... ரம் பாட்டிலை திறக்க.. மெல்ல்லிய வாசனை மூக்கைத்துளைத்தது.. அப்படியே கொஞ்சம் வார்யில் கவிழ்த்தார்...
வாட்டர் பாட்டிலை திறந்து அதையும் தன் வார்யில் விட்டு வாயிலேயே கலந்து முழுங்கிட்டாட்.. எமகாதகன்....இவனுக நம்ம குடி மகன் களையும் மிஞ்சிடுவாங்க போல.... நினத்துக் கொண்டான்....

அப்புறம் தண்ணி பாட்டில்ல கொஞ்சம் நல்ல ஊத்தி கலக்கினானுக ரெண்டு பாட்டிலைய்ம் மாத்தி மாத்தி கலந்தானுக தன்னனி ரெடி பண்ணி ..அடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.... வண்டி மேல் மருவத்தூர் தாண்டியது....

இரண்டு பாட்டிலும் மாறி மாறி கைமாற.. கொறிக்க ஒரு சிப்ஸ் பாக்கட் அத வச்சே ....வடிவேல் மாதிரி கைய நக்கல அவ்வளவு தான்...
மற்றபடி அவனை விட மோசம்...

வண்டி விழுப்புரம் நெருங்கியது மணி கிட்டத்தட்ட 12.45...

ஸ்டேசன் வந்ததும் ஏ ஜீ எம் உடனே ஓடி போய் ஒரு 7 அப் 1.5 லிட் வாங்கி ஏறிக்கொள்ள...அதற்குள் ஒரு புல் பாட்டில் காலி... ஜி .ஏம் நாலைந்து கார வகை பாக்கட்டுகள்.... கையில்

அடப் பாவிகளா... மேல் மருவத்தூரில் ஆரம்பித்து விழுப்புரம் வரதுக்குள்ள ஒரு பாட்டிலா.. பிரியா கொடுத்தால் பினாயிலயே குடிப்பானுக போலிருக்கே.....

மோகன் இன்னோறு பாட்டில் எடுத்திட்டு வாப்பா.....

பாண்டியன் மீண்டும் நகர ஆரம்பிக்க.....

முழித்தான் மோகன்... எப்படி எடுக்க....

மறுபடியும் உள்ள போய் மெல்ல டிராலி திறந்து எடுத்து மூடி.. சத்தம் இல்லாமல் வர..

அட இது வோட்கா பாட்டில்.... ஸிம்ரனாஃப் ( SMIRANOFF) 1 Lr...
"சார் இருட்ல தெரியல சார் இது வோட்கா சார்...."
"பரவால்லைப்பா.. கொண்டா.. ரெண்டும் ஒன்னு தான்...."

அதையும் கலந்தார்கள் 7 அப் உடன்... இப்ப தான் ரெண்டு பாட்டில் இருக்கே....மோகன் அவர்களுடன் நின்றான்....

"என்னே மோகன் நீ அடிக்க வே இல்லையே...."
"இல்ல சார் பழக்கம் இல்லை.. நீங்க கேட்டீங்கன்னு தான் எடுத்து வந்தேன்...."
"இல்லை மோகன்.. இது சும்மா நல்லா இருக்கும் அடித்து பார்.."

சொல்லி விட்டு... 7 அப் பாட்டில மோகனிடம் கொடுக்க.. அவன் தயங்கிய படி வாங்க... ம்ம்ம் ஷியர் அப் மேன்... ஜி ம் அக்கவுன்ட்ஸ் சொல்ல வேத வாக்காய் எடுத்து அவன் வாய் அருகில் கொண்டு போக....
ஏ சி கதவு திறந்தது.... வந்தவள் .. சாட்சாத் அகிலா தான்....

மோகனை பார்தவள்.. ஜி எம் பார்த்தாள் ஓன்றும் சொல்லாமல் டாய்லெட் போனாள்.. அவள் போகும் வரை
அமைதியாய் இருந்தவர்கள்... அவள் திரும்பி போன வுடன்.... ஜி எம் சேல்ஸ் சொன்னார்.". இவளுக்கு என்ன சுகர் இருக்கா
இப்படி அடிக்கடி பாத்ரூம் போறா....." சொன்னவுடன் அனைவரும் சிரித்தனர்.. கொல்லென்று....

மோகனுகு வலித்தது.... ம்ம்ம் அவள் நான் குடிகிறேனான்னு செக் பண்ண வரா.. அத போய் இந்த கிழடுகள்... அவ மக வயசு இருக்கும் இப்படி சொல்லுதுகளே.. நினைததவன்...
Like Reply


Messages In This Thread
RE: கனியும் ஒரு காதல்.. - by johnypowas - 07-02-2019, 11:26 AM



Users browsing this thread: 4 Guest(s)