07-02-2019, 11:25 AM
நாட்கள் பறந்தன...
ஒரு மீட்டிங்க அதுவும் ஆல் இந்தியா ல்வெல்ல பன்னுரது எவ்வளவு கஷ்டம்னு அப்பதான் மோகனுக்கு புரிந்தது....ஒரு பெரிய லிஸ்ட் எடுத்து அவங்க கம்பனியுடன் வைத்த turnover.. மற்றும் கொள்முதல்.. அதை சரி செய்து லிஸ்ட் கொடுத்து அதுல மாற்றம், அப்புரன் செக்;லிஸ்ட்... அப்புறம் அது முடிவடைந்து இறுதி வடிவம் கொடுக்க...
இன்விடேசன் அடிக்க... யார் யார் வராங்க அவங்களுக்கு மெயில் அனுப்பி கன்ப்ர்ம் பண்ணி, ரூம் புக் பண்ணி... மெனு செக் பண்ணி
என்ன என்ன புராடக்ட் கொண்டு போகனும் லிஸ்ட்.... அதுக்கு தேவையான மற்ற உப கரணங்கள்... ete..etc... ஒரு வாரம் பெண்டு நிமித்தி விட்டது மோகனுக்கு.. இதற்கிடையில் சாட்டாவது ஒன்னாவது.. எல்லாம் பரன்ல தூக்கி போட்டாச்சு...
அந்த நாளும் வந்தது.....அது ஒரு வியாழக்கிழமை.... இரவு 9.30 பாண்டியன் எக்ஸ்பிரஸ்... எல்லாருக்கு 3 டயர் ஏ சி.. கோச்...எல்லாம் நம்ம
கிட்டத்தட்ட 60 பேர்... மீதம் உள்ள சிலர் நேரடியாக மதுரை வருவதாக சொல்லி இருந்தனர்...சிலர் மறு நாள் மாலை நேரடியாக ஹோட்டலுக்கு
வருவதாக சொல்லி விட்டனர்..
அகிலா தன் பேக்கை தூக்கி கொண்டு வர பின்னால் பியூன் ஒரு பெரிய ட்ராலி பேக்க இழுத்து கொண்டு வந்தான்..அகிலா அந்த டிராலி பேக்கை கொடுத்து இது உன் பொறுப்பு என்றாள்..
இழுத்து பார்த்தான் செம கனம்...
என்ன அகிலா இது பொனம் மாதிரி கனக்குது...
ஆமா அத ரெம்ப அடிச்சாலும் பொனம் தான்...
என்னது...
ஆமாடா... ஃபுல்லா பாட்டில் எல்லாம் ஃபாரின் அயிட்டம்...எம் டி கொடுத்து வுட்டார்... பொறுப்பா அங்க கொண்டு வந்துடு..
மவனே இடைலை யாராவது கைய வச்சா.. அவ்வளவு தான்.. நீ குடிப்பியா..
மோகன்.. மண்டைய ஆட்டினான்..
என்ன ஒன்னு ஆமான்னு ஆட்டு இல்லை இல்லைன்னு ஆட்டு பொத்தம் பொதுவா ஆட்டினா என்ன அர்த்தம்...
இல்லை எப்பவவாவது....
சரி தான் பாலுக்கு பூனை காவல்... சிரித்தாள்...
எல்லாரும் வந்தாச்சான்னு பாரு... டிக்கெட் இந்தா... சொல்லி விட்டு அவளுக்கு என்று இருந்த பெர்த்தில் போய்
உட்கார்ந்து கொண்டாள்... அவளுடன் இன்னொருத்தி சேல்ஸ் ல உள்ளவ.. அவளுடன் இணைந்து கொண்டாள்...
வண்டி கிளம்பியது... ம்ம்ம் செக்கிங்க் முடிந்து... பாண்டியன் செங்கல் பட்டு தாண்டியது.....இரவை கிழித்துக் கொண்டு...
வந்தார் G.M. Sales... என்ன மோகன் சரக்கு எங்க என்றார்..
சார் அந்த டிராலில இருக்கு சார்..
போ மோகன் போய் ஒரு பாட்டில் எடுத்துட்டு வா.. மெல்ல கொண்டு வா சத்தம் போடாம ..ம்ம்ம்
நான் வாசல் கிட்ட் இருக்கேன்... கதவை திறந்து வாஷ் பேசின் பக்கம் போய் நின்று கொண்டார்....
போனான் எடுத்தான் வந்தான்.. கையில் ஒரு BECCADY.... WHITE RUM... அவ்ர் கையில் கொடுத்தான்..
இரு மோகன் இதோ வந்துடுறென்.. மீண்டும் உள்ளே போனார்...மமோகன் வாஷ் பேசன் கிட்ட நிற்க...
இப்பத்தான் சனி விளையாடியது.... ஏ சி கதவு திறந்தது.. வந்தவள்.. அகிலா...
பாத்ரூம் போக வந்தவள் மாட்டிக் கொன்டான்... கையில் பாட்டில் ... முழித்தான்...
நான்.. இல்ல.. ஜிம் ஜிம் உளரினான்... அவர் தான் .. உள்ள போயிருக்கார்..வர்ரார்...
யாரு அவன் அந்த சொட்டை தலையனா... அடிக்கட்டும்... நீ மட்டும் அடிச்சே... அப்புறம் அவனை முறைத்த படி
டாய்லெட் போக....மோகன் அவஸ்தையாய் நெழிந்தான். இது என்ன டா வம்பு... அவ அடிக்காதாங்க்றா...இவர் அடிங்கிறார்...
என்ன பன்ன...
ஏசி கதவு திறந்தது.. GM, AGM SALES, AGM A/C... மூனு பேர் வந்தனர்...