06-02-2019, 08:28 PM
அபி எப்போதும் இப்படித்தான். எந்த நேரத்தில் என்ன செய்வாள் என்று கணிப்பது கடினம். அவளுடைய இம்சை தாங்க முடியாமல், அவளுடனான காதலை ரீ-கன்சிடர் செய்யலாமா என நான் யோசிக்கும்போதெல்லாம், இந்த மாதிரி முத்தம், அணைப்பு என்று ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்து, என்னை மீண்டும் காதல் கடலுக்குள் ஆழமாய் மூழ்கடித்து விடுவாள். எல்லா சேட்டையும் செய்துவிட்டு, எப்படி பச்சைக் குழந்தை மாதிரி முகத்தை வைத்திருக்கிறாள் பாருங்கள்..?
"கிஸ் பண்றதுக்குத்தான் லிஃப்டுக்குள்ள கூட்டிட்டு போனியா..?" கிரவுண்ட் ப்ளோரில் இறங்கியதும், கிசுகிசுப்பான குரலில் அபியிடம் கேட்டேன்.
"ம்ம்.." அவள் கேஷுவலாக சொல்லிவிட்டு முன்னே நடந்தாள்.
"ஏய்.. எங்க போற..?"
"பசிக்குதுடா.. ஏதாவது சாப்பிடலாம்..!!"
சொன்னவள் பிஸ்சா ஹட்டுக்குள் நுழைய, நான் பின் தொடர்ந்தேன். மெனு கார்ட் வாங்கி என்னிடம் நீட்டினாள்.
"என்ன சாப்பிடலாம் சொல்லு.." என்றாள்.
நான் ஒரு ஐந்து நிமிடம் செலவழித்து,
"எனக்கு ஒரு ஸ்பைசி சிக்கன் சீஸ் பிஸ்சா.. உனக்கு..?" என்றேன். அவள் உடனே பேரரிடம் திரும்பி,
"டூ டொமாட்டோ பாஸ்தாஸ் வித் கார்லிக் ப்ரெட்.." என்றாள்.
பேரர் நகர்ந்துவிட எனக்கு ஆத்திரமாக வந்தது. நான் ஒன்று சொன்னால், இவள் ஒன்று ஆர்டர் செய்கிறாளே..?
"நான் பிஸ்சா கேட்டேன் அபி.." என்றேன் கடுப்பான குரலில்.
"பிஸ்சாலாம் கிடையாது.. பாஸ்தா நல்லாருக்கும்.. சாப்பிடு..!!" என்றாள் அவள் முறைப்பாக.
"அப்புறம் எதுக்கு எங்கிட்ட 'என்ன வேணும்'னு கேட்ட..?"
"சும்மாதான்.. உன் டேஸ்ட் எவ்வளவு கேவலமா இருக்குன்னு தெரிஞ்சுக்கதான் கேட்டேன்.. ஏற்கனவே மாடு மாதிரி இருக்குற..? இதுல பிஸ்சா வேணுமா உனக்கு..? வெயிட்டை குறை..!!"
"ம்ம்.. பாஸ்தா சாப்பிட்டா வெயிட் குறையும்னு யார் உனக்கு சொன்னது..?"
நான் கடுப்புடன் கேட்க, அவள் கவலையே இல்லாமல் கலகலவென சிரித்தாள். எனக்கு எரிச்சலாக வந்தது. கொஞ்ச நேரத்தில் பாஸ்தா வர, வேறு வழியில்லாமல் அதை விழுங்க ஆரம்பித்தேன். ஃபோர்க்கில் பாஸ்தாவை அள்ளி வாய்க்குள் திணித்துக் கொண்டே அபி சொன்னாள்.
"சாப்டுட்டு அப்டியே படத்துக்கு போறோம்.. டிக்கெட்லாம் வாங்கிட்டேன்..!!"
"படத்துக்கா..? சொல்லவே இல்லை.. என்ன படம்..?"
"டேட்ஸ் நைட்.."
"இங்க்லீஷ் படமா..? பலான ஸீன் இருக்குமா..?"
"ச்சீய்.. டர்ட்டி மைண்டட் டாங்க்கி..!! அதெல்லாம் கிடையாது.. டீசன்ட் மூவி..!!"
"போ அபி.. நான் வரலை..!!"
"ஏன்..?"
"ரொம்ப போரடிக்கும்.. எனக்கு ஒரு எழவும் புரியாது.. நீ மட்டும் கெக்கக்கெக்கேன்னு இளிச்சுட்டு இருப்ப..?"
"எனக்கு புரியுது.. இளிக்கிறேன்..!!"
"ஓஹோ.. அப்ப போ..!! போய் நீ மட்டும் இளிச்சுட்டு வா..!! நான் வரலை..!!"
"நெஜமாத்தான் சொல்றியா..?"
"யார் மேல சத்தியம் பண்ணனும்..?"
"ஓகே.. நீ வரவேணாம்.. நான் மட்டும் போறேன்.. என்ன.. படத்துக்கு நீ வந்தா.. இப்போ லிஃப்ட்ல தந்தனே.. இந்த மாதிரி சூடா ரெண்டு கிஸ் தரலாம்னு நெனச்சேன்.. இன்டர்வலுக்கு முன்னால ஒன்னு.. இன்டர்வலுக்கு பின்னால ஒன்னு.. நீதான் வரலைன்னு சொல்றியே..?"
அதற்கு அப்புறமும், படத்துக்கு வரமாட்டேன் என, நான் ஒரு மூச்சு விட்டிருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..? ம்ஹூம்..!! அதான் சூடா ரெண்டு கிஸ் என்று என்னை அடித்து, ஃப்ளாட் ஆக்கிவிட்டாளே பாவி...? நாக்கைத் தொங்கப் போடாத குறையாக, அவளுடன் தியேட்டருக்கு சென்றேன். படத்தை எல்லாம் கவனிக்கவில்லை. எனக்கு அருகே கும்மென்று வாசனையாக இருந்த அபியைத்தான் கவனித்துக் கொண்டிருந்தேன்.
அபி என்னை ஏமாற்றவில்லை. படம் ஆரம்பித்து, பதினைந்தாவது நிமிடத்தில் அவள் வாக்குறுதியில் இருந்து ஒரு முத்தத்தை எனக்கு கொடுத்தாள். அவளுடைய முத்தம் தந்த போதையில் இருந்து மீள முடியாமல், நான் அவளுடைய தோள் மீது சாய்ந்து கொண்டேன். அவள் அணிந்திருந்த ஸ்லீவ்லஸ் டாப்ஸ், அவளுடைய செழுமையான, வெளுப்பான புஜத்தை பளீரென்று காட்டியது. நான் என் முகத்தை, அந்த புஜத்தில் வைத்து தேய்த்துக் கொண்டேன். வழுவழுவென்று இருந்தது. அபி அதற்கெல்லாம் ஒன்றும் சொல்லவில்லை. கொஞ்சம் ஓவர் மூடாகி, என் கையை அவளுடைய இடுப்பில் தவழ விட்டபோதுதான், என் மண்டையில் நறுக்கென்று குட்டினாள்.
இன்டர்வெல் வந்தது. வெளியே வந்தோம்.
"எனக்கு பாப்கார்னும் பெப்ஸியும் வாங்கு.. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்..!!"
அபி சொல்லிவிட்டு பெண்கள் ரெஸ்ட் ரூம் பக்கம் செல்ல, நான் கும்பலில் அடித்துப் பிடித்து இரண்டு பாப்கார்ன், இரண்டு பெப்சி வாங்கினேன். எல்லாவற்றையும் கையில் பிடிக்க முடியாமல் பிடித்தபடி திரும்பிய நான், ஒரு வளர்ந்து கெட்டவனின் முகத்திலேயே முட்டிக் கொண்டேன். நிமிர்ந்து பார்த்தபோதுதான் தெரிந்தது.. அந்த வளர்ந்து கெட்டவன் வேறு யாரும் இல்லை.. சாட்சாத் அந்த சசி பரதேசிதான்..!! என்னைப் பார்த்ததும் 'டொய்ங்ங்ங்..' என்று கண்களை விரித்து அதிர்ச்சியானான். நானும்தான்..!!