screw driver ஸ்டோரீஸ்
#39
அண்ணி படபடவென்று சொல்லிவிட்டு, தலையை உலுக்கிக் கொண்டாள். அந்த இரவை நினைத்து இப்போதும் நடுங்குபவள் போல, அவளிடம் இருந்து ஒரு சிலிர்ப்பு வெளிப்பட்டு அடங்கியது. எனக்கு அண்ணியை பார்க்க பாவமாக இருந்தது. அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்குமாறு பேச ஆரம்பித்தேன்.

"சரி விடுங்க அண்ணி.. நடந்தது நடந்து போச்சு... இனிமே நடக்குறது நல்லா இருக்கும்... இன்னும் கொஞ்ச நாள்ல நீங்க யூ.எஸ் போயிடுவீங்க... அண்ணனோட சந்தோஷமா வாழப் போறீங்க... பழசெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா உங்களுக்கு மறந்துடும்..."

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அண்ணி "ப்ச்" என்றாள். அலட்சியமாக பார்வையை எங்கோ திருப்பிக் கொண்டாள். எனக்கு இப்போது அண்ணி மீது சற்று எரிச்சல் வந்தது. அப்படி என்ன ஒரு அலட்சியம் இவளுக்கு...?

"என்ன அண்ணி இது... நான் இவ்வளவு சொல்றேன்.. நீங்க பாட்டுக்கு வேற எங்கேயோ திரும்பிகிறீங்க..? உங்களுக்கு யூ.எஸ் போறதுல இன்ட்ரஸ்ட் இல்லையா...?" நான் கேட்க,

"சத்தியமா இல்லை..." அண்ணி பட்டென்று பதில் சொன்னாள். நான் அதிர்ந்து போனேன்.

"என்ன அண்ணி சொல்றீங்க...? இன்ட்ரஸ்ட் இல்லையா...? சும்மா வெளையாடாதீங்க அண்ணி..." நான் சொல்ல, அண்ணி எரிச்சலானாள்.

"நான் எதுக்கு வெளையாடப் போறேன்...? என்னை யூ.எஸ் அனுப்பி வைங்கன்னு என்னைக்காவது நான் வந்து உங்களை கேட்டிருக்கேனா...? அத்தையும், நீயுந்தான் என்னை யூ.எஸ் அனுப்பி வைக்க.. கங்கணம் கட்டிட்டு எல்லா வேலையும் செய்யுறீங்க..."

நான் இப்போது சுத்தமாக குழம்பிப் போனேன். இவளுக்கே அமெரிக்கா செல்ல ஆர்வம் இல்லை என்றால்.. அப்புறம் இந்த எக்சர்சைஸ், கம்ப்யூட்டர், ஸ்போக்கன் இங்க்லீஷ்.. இந்த எழவெல்லாம் எதற்கு...? பேசாமல் இவள் அப்பா வீட்டுக்கு சென்று விடுவதுதானே..? எதற்காக இதெல்லாம் கற்றுக்கொண்டு கஷ்டப் படுகிறாள்...? நான் அவளிடமே கேட்டுவிட முடிவு செய்தேன்.

"அண்ணி... என்ன பேசுறீங்க நீங்க...? என்னமோ எங்களுக்காகத்தான் நீங்க யூ.எஸ் போற மாதிரி பேசுறீங்க..? உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இல்லைன்னா.. அப்புறம் எதுக்கு இந்த எக்சர்சைஸ், கம்ப்யூட்டர் க்ளாஸ்லாம்...? எதுக்கு இதெல்லாம் கத்துக்குறீங்க...? அதுவும் சும்மா கடனுக்கு கத்துக்காம.. அவ்வளவு ஆசையா கத்துக்குறீங்க... அது ஏன்...? சரி... நேத்து ஸ்விம்மிங் போனோமே... அப்போ கூட எவ்வளவு சந்தோஷமா, ஆசையா வந்தீங்க... உங்களுக்கு யூ.எஸ் போக இன்ட்ரஸ்ட் இல்லைன்னா... அப்புறம் எதுக்கு இவ்வளவு ஆசையா எல்லாம் கத்துக்குறீங்க...?"

நான் கேட்டதும் அண்ணி பட்டென்று அமைதியானாள். தலையை கவிழ்த்துக் கொண்டாள். அசைவில்லாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள். கொஞ்ச நேரம் அவளையே பார்த்த நான், பின்பு பொறுமை இல்லாமல் கேட்டேன்.

"கேக்குறேன்ல..? பதில் சொல்லுங்க அண்ணி...."

நான் சற்று கோபமாக கேட்டதும் அண்ணி என்னை நிமிர்ந்து பார்த்தாள். ஓரிரு வினாடிகள் என் கண்களையே ஒரு மாதிரி பார்த்தவள், பின்பு ஒரு நீளமான பெருமூச்சு விட்டுவிட்டு பேச ஆரம்பித்தாள்.

"அசோக்.. நான் இதெல்லாம் சந்தோஷமா கத்துக்குறதுக்கு காரணம்.. நீ எனக்கு சொல்லித் தர்றதாலதான்.. நேத்து ஸ்விம்மிங் போறப்போ.. நான் சந்தோஷமா இருந்தது, ஸ்விம்மிங் போற ஆசைல இல்லை.. உன்கூட தனியா கொஞ்ச நேரம் இருக்கப்போறேனேன்ற சந்தோஷந்தான்... இப்போகூட அதிகாலைல அலாரம் வச்சு.. எதுக்கு இப்படி இந்த பார்க்கை எட்டு ரவுண்டு அடிக்கிறேன்...? எல்லாம் நீ என் கூட ஓடி வர்றதாலதான்... எனக்கு... எனக்கு... உன் பக்கத்துலேயே இருக்கணும் போல இருக்கு அசோக்...."

அண்ணி பேசிக்கொண்டே போக, எனது இதயத்துடிப்பு 'படக் படக்' என்று அதிகமாகிக் கொண்டே போனது. அப்படி என்றால் நான் சந்தேகப்பட்டது உண்மைதானா..? அண்ணி என்னை.. என்னை..?

"அ....அண்ணி... எ.....என்ன சொல்றீங்க நீங்க....? நான் உ....உங்க பக்கத்துல..."

"ஆமாம் அசோக்.. இனிமேலயும் நான் மறைக்க விரும்பலை... ஐ... ஐ லவ் யூ அசோக்... நான்.. உன் மேல என் உயிரையே வச்சிருக்குறேன்.."

அண்ணி என் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டு சொல்ல, நான் சுத்தமாக அதிர்ந்து போனேன். சப்த நாடியும் அடங்கிப் போய் அண்ணியையே பார்த்தேன். அவளுடைய ஏக்கப் பார்வை என் மனதை என்னவோ செய்தது. நோ...!! அண்ணி தப்பு செய்கிறாள்.. கணவனின் தம்பியை காதலிப்பதா..?

"அண்ணி... என்ன உளர்றீங்க நீங்க...? என்னைப் போய்... ச்சே...."

"ஏன்... நான் உன்னை லவ் பண்ணக் கூடாதா...?"

"என்ன அண்ணி பேசுறீங்க.. நான் உங்க புருஷனோட தம்பி..."

"அதனால என்ன...? என்னைக் கொஞ்சம் கூட புரிஞ்சுக்காம... கட்டிக்கிட்ட அடுத்தநாளே என்னை விட்டுட்டு ஓடிப்போன என் புருஷனை விட... என்னை புரிஞ்சுக்கிட்டு.. எனக்காக கஷ்டப்படுற... என் மேல பிரியமா இருக்குற.. உன்னை.. எனக்கு புடிச்சு போனதுல என்ன தப்பு அசோக்...?"

"தப்புதான் அண்ணி... பெரிய தப்பு... உங்களுக்கு தாலி கட்டுனவன் யூ.எஸ்ல இருக்கான்.. இன்னைக்கு வேணா அவன் உங்களை விட்டுட்டு போயிருக்கலாம்.. ஆனா நாளைக்கே அவன் உங்களை புரிஞ்சுகிட்டு வந்து உங்களை ஏத்துப்பான்.. என்னைக்கா இருந்தாலும் நீங்க அவனுக்கு சொந்தமானவங்க அண்ணி... எனக்கு இல்லை... அவன்... அவன்... உங்களை தொட்டு தாலி கட்டிருக்கான் அண்ணி... என்னை லவ் பண்றதா சொல்றது.. அவனுக்கு நீங்க பண்ற துரோகம்.."

"ஒரு மஞ்சக் கயித்தை கழுத்துல கட்டிட்டா.. மனசுல இருக்குற ஆசையை எல்லாம் தனியா தூக்கி வச்சிரனுமா அசோக்...?"

அண்ணி என் கண்களைப் பார்த்து கூர்மையாக கேட்க, என்னிடம் அதற்கு சரியான பதில் இல்லை. நான் திணறிக் கொண்டிருக்க, அண்ணியே தொடர்ந்தாள்.

"என் மனசு புல்லா நீதான் இருக்க அசோக்.. எனக்காக எவ்வளவு கஷ்டப்படுற..? என் மனசை எவ்வளவு அழகா புரிஞ்சு வச்சிருக்குற..? எனக்கு எது புடிக்கும்.. எது புடிக்காதுன்னு பாத்து பாத்து பண்ணுற..? என் மேல எவ்வளவு பிரியமா இருக்குற..? ஒரு பொண்ணு.. யார் அவ மேல பிரியமா இருக்காங்களோ.. அவங்களுக்குதான் அவ சொந்தமாகனும்னு நெனைப்பா... நான் உனக்கு சொந்தமானவளா இருக்க ஆசைப்படுறேன் அசோக்.. உன் அண்ணனுக்கு இல்லை... கல்யாணத்துக்கு அடுத்த நாளே ஓடிப் போனாரே.. இதுநாள் வரை என்னைக்காவது எனக்கு போன் பண்ணி ஒரு வார்த்தை பேசிருப்பாரா...? சும்மா தாலி கட்டிட்டா சொந்தமாயிட முடியுமா...? அவ மேல அன்பா.. பிரியமா இருக்க வேணாமா...? என் மேல பிரியமா இருக்குற நீதான் எனக்கு வேணும் அசோக்... வேற யாரும் வேணாம்..."

அண்ணி பேசிக்கொண்டே போக, நான் திகைத்துப் போனேன். அவளுடைய நியாமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினேன். ஆனால் அண்ணியின் இந்த ஆசையை வளரவிடக்கூடாது என்று எண்ணினேன். ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். எனக்கு பட்டென்று அந்த யோசனை வந்தது. நான் மிக நல்லவன் என்றுதானே அண்ணி எனக்காக இப்படி உருகுகிறாள்..? அண்ணியின் மனதில் இருக்கும் என்னைப் பற்றிய இமேஜை ஸ்பாயில் செய்தால்..? அவளுக்கு என் மீது ஒரு வெறுப்பு வந்தால்..? என்னை மறந்துவிடுவாள்தானே..? நான் துணிந்து அந்த பொய்யை சொன்னேன்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 06-02-2019, 10:29 AM



Users browsing this thread: 13 Guest(s)