05-02-2019, 09:05 PM
அனைவரும் கடலில் சிறுவர்கள் போல் குளித்தும் விளையாடியும் மகிழ்ந்து கொண்டிருந்தனர் அப்போது எங்கோ வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்த பாலுடம் செந்தாமரை வந்து என்னங்க அங்க என்னத்த வேடிக்கை பாக்குறிங்க என்று கேட்டு அவன் பார்த்த திசையை பார்த்து விட்டு ஓ....சார் வெள்ளகாரிங்கல பார்த்து சைட் அடிக்கிறிங்களா . ஐயோ அப்படிலாம் இல்லடி சும்மாதான் பார்த்துட்டு இருந்தன் . இல்லையே உங்க பார்வை அப்படி இல்லையே எதையோ ரசிச்சி பார்த்த மாதிரி இருந்துச்சி . இல்லடி அந்த வெள்ளகாரிங்கள பாரேன் எவ்ளோ வெள்ளையா ஸ்லிம்மா அழகா இருக்காங்கனு அததான் பார்த்துட்டு இருத்தேன் நீ என்னடான்னா . ஏன் அப்போ அவளுங்கதான் அழகா இருக்காங்க நா அழகாயில்ல அப்படிதான ? ஏய் செந்தா நீ ஏன்டி கோவபடுற எனக்கு எப்பவுமே என் செல்ல பொண்டாட்டி தான்டி அழகு உன்ன மாதிரி ஒரு அழகி இந்த உலகத்துல வேற யாருடி இருக்க போறா சொல்லு . ஆஹாஹா.... ரொம்பதான் இவ்ளோ நேரம் அந்த வெள்ளகாரிங்கள சைட் அடிச்சிட்டு இப்போ எனக்கு ஐஸ் வைக்கிறிங்களா ம்...? ஏய் செந்தா செல்லம் நா ஐஸ்லாம் வைக்கலடி எனக்கு எப்பவுமே நீதான்டி பேரழகி . அப்புறம் ஏன் அவளுங்கள பாத்துட்டு இருந்தீங்க ? சும்மா தான்டி பார்த்தேன் சரி விடு இனிமே அவளுங்கள பார்க்கள போதுமா . ம்...அந்த பயம் இருக்கட்டும் . என்று கூறிவிட்டு அவன் தலையில் செல்லமாக கொட்டினால் . பிறகு அனைவரும் கடல் அலையுடன் சிறிது நேரம் விளையாடி விட்டு கடற்கரையில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டு சந்தோஷமாக சிரித்து பேசி கொண்டிருந்தனர் . அப்போது சத்யாவின் கணவன் ரமேஷ் ஓகேங்க எல்லாரும் போட்டிங் போலாமா என்று கேட்டான் . அதற்கு அனைவரும் சரி வாங்க போகலாம் என்று கூறினர் . அங்கே இருந்த போட்டிங் கிளப்புக்கு அனைவரும் சென்றனர் கடலில் போட்டிங் செல்வதற்கு டிக்கெட் வாங்கி கொண்டு அனைவரும் காத்திருந்தனர் . அங்கே கடலில் செல்ல கூடிய 2 பேர் மட்டும் போககூடிய அளவில் இருந்த மோட்டார் பைக் போட்டில் செல்வதற்கே நிறைய பேர் ஆர்வமாக நின்று கொண்டிருந்தனர் . அனைவரும் காதலர்களாகவும் புதுமண தம்பதிகளாகவும் இருந்தனர் . சிலர் மட்டுமே குடும்பம் சகிதமாக வந்துயிருந்தனர் . குடும்பமாக வந்தவர்கள் 10 பேர் அமரகூடிய போட்டில் செல்லவே ஆர்வமாக இருந்தனர் . அப்போது இரண்டு போட் வந்தது அதில் முதல் போட்டில் சிலர் குடும்பம் ஏறி கொண்டது . இரண்டாவது போட்டில் ஒரு நடுத்தற வயது வெள்ளைகாரனும் அவன் மனைவியும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் முதலில் ஏறி கொண்டனர் . அப்பொது ரவி ரமேஷிடம் ஏங்க மீதம் இருக்குற 6 சீட்ல நம்ம பேமிலி எப்படிங்க உட்காரது என்று கேட்டான் . அதற்க்கு ரமேஷ் அது ஒன்னும் பிராபளம் இல்லைங்க நாம ஆம்பளைங்க பசங்க இந்த போட்ல போகலாம் லேடிஸ்லாம் இன்னொரு போட் இப்போ வரும் அதுல அவங்க எல்லாரும் வரட்டும் என்ன சொல்லுறிங்க என்று கேட்டான் . அதற்கு அனைவரும் சரிதான் ஆனா நாங்க மட்டும் எப்படி தனியா இங்க இருக்கிறது என்று பெண்கள் கேட்டனர் . அதற்கு ரவி ஓகே உங்க கூடவேணா கார்த்தி விட்டுடு பொறோம் . டேய் கார்த்தி நீ அவங்க கூட அடுத்த போட்லவாடா நா பசங்கள அழைச்சிட்டு இந்த போட்ல போறோம் என்று ரவி கூறினார் . அதற்கு கார்த்தியும் சரிங்க மாமா என்று கூறினான் . பிள்ளைகளும் போட்டில் செல்லும் ஆர்வத்தில் தங்களின் தந்தைகளுடன் சென்றனர் . ஐஸ்வர்யா , சத்யா , செந்தாமரை , ஹாஜிரா ஆகியோருடன் கார்த்தியும் நின்றிருந்தான் . சிறிது நேரத்தில் மற்றொரு போட் வந்தது அதில் இவர்கள் அனைவரும் சென்று அமர்ந்தனர் . இவர்களின் பின்னால் மேலும் மூன்று பெண்கள் அந்த போட்டில் ஏறிகொண்டனர் .