காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#30
எனது கடும் வார்த்தைகளை கேட்ட கலா உடனே மறுபேச்சு இன்றி உள்ளே சென்றாள். அவளை பார்த்து கெட்ட வார்த்தைகளால் கூட திட்ட மனமும் வார்த்தையும் வரவே இல்லை. ஒருவேளை நான் இன்னமும் அவளை நேசிகிறேனா.. அவளாக கேட்டால் மனம் மாறிவிடுவேனா என்ற எண்ணம் கூட என்னுள் எழுந்தது. என்னடா ஆண் ஜென்மம். ஒருத்தி உன்னை தூற்றி சென்று விட்டாள்.

ஆனால் இன்னமும் அவளை நேசித்து கொண்டிருக்கிறாய் என்ன மனமடா இது. நானே என்னை நொந்து கொண்டேன். அவள் மன்னித்துவிடு என்று ஒருவார்த்தை கேட்டால் மன்னிக்க கூட மனம் தயாராக இருந்தது. என்ன ஒரு பேடி மனம்.

நல்ல வேலை அவளே என்னை சீண்டி பார்க்கும் வார்த்தைகளை பேசினாள் இல்லையேல் என்ன நிகழ்ந்திருக்குமோ நினைத்து பார்க்கவே மிக கேவலமாக இருக்கிறது.

மீண்டும் அவளை பார்க்கும் சக்தி இல்லாமல் நான் ரயில் பெட்டியில் வாசலிலேயே நின்றேன், உணவகம் வரை சென்று உணவருந்தினேன். வழியில் வந்த அனைத்து ஸ்டேஷன்களிலும் இறங்கி ஏறினேன். மாலை மறைந்து இருள் சூழ்ந்தது. எனது வாழ்விலும் அதே சூன்நியம் சூழ்ந்தது.

மீண்டும் நான் எனது இருக்கைக்கு செல்ல வேண்டும். வேறு வழியே இன்றி வேண்டா வெறுப்பாக சென்றேன். நான் எனது கம்பாட்மென்டுகுள் சென்றேன், அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, இரவு நேர மங்கிய விளக்கு எரிந்தது. அனைவரும் தங்கள் இருக்கை திரையை மூடி இருந்ததனர். எனது இருக்கையிலும் அப்படியே. உள்ளே எட்டி பார்த்தேன்.

அங்கே கலாவுடன் வந்த பெண்மணி கைக்குழந்தையுடன் உறங்கி கொண்டிருந்தாள். கலா மேலே இருந்த இருக்கையில் அந்த பக்கமாக முகம்வைத்து தூங்கி கொண்ருந்தாள். நான் வெளியே சென்றிருந்த பொழுது யார் எனது அருகில் வந்து அமர போகிறார்கள் என்று நினைக்கவே இல்லை. இப்போது எனது இருக்கைக்கு மேலிருந்த பெர்த்தில் ஒரு இளைஞன் படுத்திருந்தான். அனைவரும் உறங்க. நான் சப்தமின்றி எனது இருக்கையில் சென்று அமர்ந்தேன். வராத உறக்கத்தை வரவழைக்க முயன்றேன். கண்கள் மூடினால், ரயிலின் சப்தம், AC யின் குளிர், இவை அனைத்திற்கும் மேல் சற்றே ஆற துவங்கிய மன புன்னை மீண்டும் சீண்டிப்பார்க்க வந்த என் வாழ்கையின் வில்லி கலா. எல்லாம் சேர்ந்து என்னை மேலும் சோதித்து.

கண்களை இருக்க மூடி, கண்ணீரால் எனக்கு நானே ஆறுதல் தேட முயன்ற நேரம், எனது அருகில் ஒரு நிழல், சிறு விசும்பலுடன் அமர்ந்திருந்தது. ஆம் கலாதான் என்னருகில் அமர்ந்திருந்தாள். இவ எப்போ இங்கே வந்தான், அவா வந்தது கூட தெரியாமல் இருந்துடேனே என்று என்னை நானே கடிந்து கொண்டு அவளை தள்ளிவிட்டு, சீ போ என்று விரட்டினேன். அவளோ அசையாமல் இருந்தாள். வந்த கோபத்தில் அவளது கன்னத்தில் ஒரு அரை விட்டேன். மேலும் அங்கிருக்க மனம் இல்லாமல் நான் வெளியே வந்தேன். எனக்காக வைத்தாற்போல் அந்த அட்டெண்டர் அங்கே இல்லை அவருக்கு படுக்க வசதியாக இருக்கும் பலகையை விரித்து நான் படுக்க போனேன். மீண்டும் அவளே வெளியே வந்தாள். அங்கிருந்த வெளிச்சத்தில் தெளிவாக தெரிந்தது எனது கைதடம் அவளது கன்னத்தில்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 05-02-2019, 06:39 PM



Users browsing this thread: 2 Guest(s)