Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கரும்பு தோட்டத்தில் புகுந்த சின்னத்தம்பி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்புத் தோட்டப் புதரில் இருந்த சின்னத்தம்பி யானையை கரும்பு சோகையைக் காட்டி வனத்துறை ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர்.

[Image: Tamil-image.jpg]


Highlights
  • கரும்புத் தோட்டப் புதரில் இருந்த சின்னத்தம்பி யானை வெளியே அழைத்து வரப்பட்டது
  • கும்கி யானைகளும் அங்கு தயார் நிலையில் உள்ளன


திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்புத் தோட்டப் புதரில் இருந்த சின்னத்தம்பி யானையை கரும்பு சோகையைக் காட்டி வனத்துறை ஊழியர்கள் வெளியே அழைத்து வந்தனர். 

கோவை தடாகம், கணுவாய், பன்னிமடை கிராமங்களில் அட்டகாசம் செய்ததாக கூறி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி என பெயரிடப்பட்டுள்ள காட்டு யானை பொள்ளாச்சி அருகே வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது. சின்னத்தம்பி யானையின் கழுத்து பகுதியில் ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்டது. அதன் உதவியுடன் வனத்துறையினர் சின்னத்தம்பியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்தனர். 

இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி இரவு டாப்சிலிப் பகுதியில் இருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை, உடுமலையை அடுத்த கிருஷ்ணாபுரம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் இரு நாட்களாக முகாமிட்டுள்ளது. 

தண்ணீர் குடித்த யானை தொடர்ந்து கரும்புத் தோட்டத்திற்கு வெளியே உலவித் திரிகிறது. பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து அழைத்து வரப்பட்ட கலீம், மாரியப்பன் ஆகிய கும்கி யானைகளும் அங்கு தயார் நிலையில் உள்ளன. சின்னத்தம்பியை அமராவதி வனப்பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இதனிடையே சின்னத்தம்பி யானையை மீண்டும் அதன் வாழ்விடத்திலேயே சேர்க்க வலியுறுத்தி, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வன ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 05-02-2019, 09:52 AM



Users browsing this thread: 89 Guest(s)