கனியும் ஒரு காதல்..(completed)
#4
" வாட் நோ நோப்....." மெசஞ்சர்ல சாட்ல சொல்லுற மாதிரி... தத்தி தத்தி விழுந்தன வார்த்தைகள்.. ஆனால் தடுமாறியது உதடு...
"என்ன ஏதோ மெசஞ்சர்ல மெசஜ் வந்த மாதிரி சொல்லுரீங்க...."
அவள் முகம் சிவந்தது.. குங்குமமாய்...

"இல்லையே.. இது வரை இல்லை.....ஆமா நீ ஏன் அத கேட்கிற...."

"இல்லை சும்மா கேட்டேன்'" ( மனசை அடக்கிக் கொண்டான் ) மடையா இது சொல்லும் நேரம் இது இல்லை,விதைய இப்பதானடா போட்ட, அதுக்கு முன்ன அருவடைக்கு அருவாளோட போனா எப்படிடா மனசு இடித்தது...மனதை அடக்கி கொண்டான் மோகன்.. இப்ப வேணாம்.. அப்புறம்.. இன்னொறு நாள்....

மாலை மணி 6.30 ஆகி விட்டது..

"மோகன் நான் கிளம்பபுரேன்.. இந்தா பில்லுக்கு உள்ள காசு.." அவனிடம் அவள் 1000 ரூபாய் நோட்டை நீட்ட...
மோகன் மறுத்தான்... " அகிலா என்னங்க இது நமக்குள்ள பார்மாலிட்டீஸ் வேனாம்.. இன்னொறு நாள் நீங்க பே பன்னுங்க..."

அவளை இன்னொறு நாள் வரவழைக்க வைத்த தந்திரம் அது... எலி பொறில மாட்டுமா இல்லையா இப்ப தெரிஞ்ச்டும்....

அவள் மோகனை உற்றுப் பார்த்தாள்..

"என்ன இன்னொறு நாளா...சான்ஸே இல்லை... ஆனா "
"என்ன ஆனா.."
":உனக்குத் தெரியுமா... நம்ம கம்பனில இருந்து மதுரைக்கு போறாங்க...ஆல் இந்தியா டீலர்ஸ் மீட் அரேஞ் பன்னுராங்க...
இந்த தடவை HR பாதி பொறுப்ப நம்ம தலைல கட்டிட்டான்... நீயும் வர... 15 நாள் இருக்கு இன்னும் "

"மதுரைல எங்க..."

" தி கேட்வே ஹோட்டல், பசுமைலை.... நல்ல இடம்... சின்ன மலை மேல 5 நட்சத்திரr ஹோட்டால்.... மதுரை முழுவதும் மண்டை காயிர மாதிரி வெயில் அடிச்சாலும் அங்க குளு குளுன்னு இருக்கும்... அப்படி ஒரு இடம்....அங்க இருந்து பார்த்தா மதுரை முழுவதும்
தெரியும்...." ( தெரியாத நண்பர்கள் கூகுள் ல போட்டு பாருங்க.. சும்மா அப்படி ஒரு இடம்...)

"நீங்க போயிருக்கீங்களா...."

"ம்ம் ஒரு தடவை போயிருக்கேன்.. ஒரு மூனு வருசம் முன்னால.... இப்ப இந்த வருசம்....அப்படியே குற்றாலம் போனாலுன் போவாங்க என்ன அங்கிருந்து ஒரு 150 கி.மீ தான்.... இப்ப சீசன் வேற....செட்யூல் இன்னும் வரலை.. வந்ததும் சொல்லுறேன்.".

மோகன் திகைத்தான்.. ஆகா..என்ன ஒரு அருமையான சான்ஸ்.. நல்ல வேளை இப்ப சொல்லடா சாமி....சொல்லி எதிர் மறையாக போயி..
அப்புரம் இந்த பொன்னான சான்ஸ் .. கிடைக்காதே.. 'ஆக்கப் பொறுத்தவன் ஆற பொறுக்கனும் நண்பா '... மனசு இடித்து சொல்லியது... பொறு பொறு பொறுத்தார் பூமி ஆழ்வார் பொறாதார் பொண்டாட்டி ஆழ்வார்... கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் சொல்லக் கேட்டது அவனுக்கு நினவு வந்தது... மோகன் பொறுக்க முடிவு செய்தான்.

அகிலா புறப்பட்டு விட்டாள்.. மோகன் அவள் போனதும் தன் பல்சரில் பறந்தான் வீட்டுக்கு....

அடித்து பிடித்து வந்து மெசஞ்ச்ர் ஓபன் பன்னினான்..

ஈஸ்வரி ... ஆப் லன் மெஸ்ஜ் கொடுத்திருந்தாள்...

'ஆமா நான் ஹதிராபாத்தில் இல்லை....'
'அப்ப இல்லை இப்ப சென்னையில் தான் இருக்கேன்...'
"'வேற எவளயோ பாத்திட்டு நான்னு நினக்கிறே...'
' பொறுக்கி அவ கிட்ட போய் அடி வாங்காத...'
' எனக்கு வண்டியே ஓட்ட தெரியாது ஸ்கூட்டி எப்படி ...'
' காமாலை கன்னுக்கு பாக்கிறது எல்லாம் மஞ்சளாத் தான் தெரியும்... பாத்து போ....'

' அப்புரம் நான் சுமாரா இருப்பேன் பை...'

குதித்தான் மோகன்.. ஆக அவ சென்னையில் இருப்பதை ஒத்துக் கொள்கிறாள்.. மோகன் பதில் அடித்தான்

' நீங்க அழகாவே இருக்கீங்க...."
"அது யாரு உங்ககூடவே ஒரு தடியன்...உங்க கூட ஒட்டிக்கிட்டு வந்தான் A2B ல....'
'உங்க லவ்வரா... ம்ம்ம்ம் ஆள் சுமார்ட்டா தான் இருக்கான்(ர்)..'
'எனக்கு பொறாமையா இருக்கு...அவன பாத்தா'
'ஏங்க ஆன் லன்லயே வர மாட்டீங்களா..'
அனுப்பிவிட்டு அதை ஆன் லன்லயே வச்சிட்டான் மோகன்.... அவள் வரவில்லை... ஆப் லைன் தான் காட்டியது...

கொஞ்ச நேரத்தில் ஹர்சினி ஆன் லன் ல வரவும்.. இவளை ஆப் லைன்ல போட்டுட்டு
ஹர்சினியிடம் சாட் பண்ண தொடங்கினான்.... ஒரு 1/2 மணி நேரம் ஓடியது...


திடீரென்று.. ஈஸ்வரி...யிடம் இருந்து மெசஸ்ஜ்.... ஆனால் அவள் பெயரில் ஆப் லன் தான் காட்டியது.. கள்ளி என்ன ஆப்
லன்ல போட்டுட்டு அங்க யாரிடமோ கதை பேசுகிறாள்.. மெசஸ்ஜ் பாத்து பதில் போடுறாள்...

'நான் ஆன் லன்ல இருந்தா என்ன ஆப் லன்ல இருந்தா என்ன...'
'உனக்கு மெஸஜ் வருதா அத மட்டும் பாரு...'
'நான் எங்கயும் போகலை வீட்ல தான் இருந்தேன் '
'நீ யாரிகிட்டயோ நல்லா அடி வாங்க போறப்பா பாத்து உடம்பு ஜாக்கிறதை..'

அடிப்பாவி இப்படியா புழுகுவீங்க .. ம்ம்ம் ... எல்லாரும் இப்படித்தானோ....மோகன் அதற்கு பதில் போடவில்லை... போட்டால் அவள் புரிந்து கொள்வாள்... நீயும் அப்படித்தானே என்று திருப்பிக் கேட்டால்.....அனைத்துவிட்டு தூங்க சென்றான்....
Like Reply


Messages In This Thread
RE: கனியும் ஒரு காதல்.. - by johnypowas - 04-02-2019, 08:38 PM



Users browsing this thread: 5 Guest(s)