கனியும் ஒரு காதல்..(completed)
#3
காலைல வழக்கம் போல் ஆபிஸ் வந்ததும்.. சாட் ஓபென் பண்ணி பார்த்தான்.. ம்ம் ம்ம்ம்ம் ஒன்னும் மெஸ்ஜ் இல்லை...

என்ன ஆனாள் இவள் இன்னும் வரவில்லை..கொஞ்ச நேரத்தில் மிகவும் பதட்டமாக வந்தாள் அகிலா..



"மோகன்.. நேத்து கொடுத்த Quote that japan company, is that money paid yesterday... பதட்டமாய் கேட்டாள்....


"ம்ம்ம் நேத்து முடிச்சிட்டு தான் போனேன்.. ஏன்... 5.00 மனிக்கு ப்ரொசஸ் ஆகி...அவங்க கன்ஃபிர்ம் பன்னிடாங்க ஏன் அகிலா... எதாவது ப்ரொப்ஸ்.... "


"Oh thank god.. நான் முடிச்சிட்டு போயிருக்கனும்... ஏதோ ஒரு ஞாபத்துல போய்டேன்..போகலன்னா என் வேலை காலிடா...."


என்ன சொல்லுர...



"ஆமா மோகன் இன்னிக்கு டாலர் ரேட் 5 ரூபா ஏறிடுச்சு... கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் போயிருக்கும்... நல்ல வேளை நீ முடிச்சிட்ட..இல்லைன்னா நான் காலிடா.. "


"நான் தான பணணினேன்... உன்ன எதுக்கு ...."


"இல்லை மோகன் நீ தப்பு பண்ணினாலும் நான் தான் அதுக்கு பலி ஆகனும்.. தாங்க்ஸ் மோகன்.. "


இடையில் M.D. வந்தார்.. GOOD JOB.. AKILA... 2 CR... IN KITTY.. GOOD JOB KEEP IT UP...

மோகனுக்கு விளங்கவில்லை.....

அவர் போனவுடன் கேட்டான்.. என்ன அகிலா உன்னை குட்டின்னுட்டு போறார்....


"ஹைய் அவனை பார்த்து முறைத்தவள்.. "அது குட்டி இல்லை.. கிட்டி... அப்படீன்னா.. சேவிங்க்ஸ் ந்னு அர்த்தம்....."

இன்னிக்கு சாயுங்காலம் உனக்கு A 2 B ல ட்ரீட் உனக்கு.....

அது என்ன A 2 B....

நீ அம்மாஞ்சியா... ஒன்னும் தெரியலை... அடையார் ஆனந்த பவன்..ல டிரீட் உனக்கு.. நான் தரென்..

அவள் குரலில் மகிழ்ச்சி... பொங்கியபடி.... மோகனுக்கு வானில் பறப்பது போல் இருந்தது...

மோகனுக்கு மனசு பறந்தது.. இன்னிக்கு சொல்லிடலாமா... அது நான் தான் என்று... சொல்லிட வேண்டியது தான்... மாலை வழக்கம் போல் 5.30 க்கு கிளம்பினாள் அகிலா,



"என்ன மோகன் கிளம்பலாமா..."
"ம்ம் இதோ வந்திட்டேன்....."
அன்று இருந்த வேலை பழுவில் அவன் மெசஜ்ஸ்ர் ஓபன் பண்ணவே இல்லை.. அவன் எண்ணம் முழுவதும்,
மாலை 5.30 லிருந்த்து...



இப்ப ஓபன் பண்ணிலால் இவளுக்கு தெரிந்து விடும்.. அப்படியே விட்டு விட்டான்...இரவு பாத்துக்கலாம்னு...

அங்க போனா.. ஏதோ திருவிழா கூட்டம் மாதிரி பாவிகளா திங்கறதுக்கு இப்படியா விழுவாங்க என்னமோ ஓசில கொடுக்கற மாதிரி, அடிச்சு பிடிச்சு இடத்த எப்ப பிடிக்க இந்த கூட்டத்தில எப்படி அவ கிட்ட பேச . மனசு அலை பாய்ந்தது மோகனுக்கு.

"என்ன மோகன் வந்ததில் இருந்து பாக்குரேன் அப்படி என்ன யோசனை, காசு நான் கொடுக்கிறென் எம் டி. 1000/- ரூபாய் கொடுத்திருக்கார்"

"என்னது.."
"ஆமாம்டா.. நான் எம்.டி கிட்ட சொல்லிட்டேன் இதுக்கெல்லாம் காரணம் நீ தான்னு..."
"ஏன் சொன்ன.."
"இல்லை நான் அத செய்யலை நீதான் அத செஞ்ச... சோ த க்ரெடிட் ஈஸ் யுவர்ஸ்...."

"அதனால் என்ன நீ தான இன்ஸ்டரட் பன்னின...""
"நோடா இம்பிலிமெண்ட்டேசன் ... அது மேட்டர்ஸ்...நீயும் போயிருக்கலாம்ல... இருந்து முடிச்சிட்டு போனதனால் தான இந்த லாபம் கம்பனிக்கு..."
"சரி அப்ப நான் ஒன்னு சொல்லவா..."
"என்ன"
"இங்க வேண்டாம் வா காபி ஷாப்க்கு போயிடலாம்.. ஒரு பர்ஜர் ஐஸ் கிரீம்... காபி கலக்கிடுவோம்..."
"என்ன விளையாடுரியா... 1000 தான் இருக்கு.. அங்க போனா பழுத்திரும்.."
"எனக்கு தான ட்ரீட் "
"ஆமா"
"அப்ப வா என் கூட... "
"உன் கிட்ட பேச முடியாதுப்பா.. வா போகலாம்..." அவள் அவனுடன் இணைந்து நடந்தாள்... அருகில் இருந்த காபி ஷாப்பிற்கு.
ஓரமாக இடம் பிடித்து அமர்ந்தாள்.. அவன் சென்று ஆர்டர் செய்து விட்டு.. அவள் எதிரே அமர்ந்தான்.

"இன்னிக்கு என்ன ஒரே சந்தோசமா இருக்கறா மாதிரி இருக்கு..."
"ஆமா.. இருக்கு சந்தோசமா.."
"இதுக்கா இவ்வளவு சந்தோசம்...."
"இல்லை மோகன்.. அது வேற.."
"ம்ம்ம்ம் இன்னிக்கு நீ ரெம்ப அழகா இருக்கிற மாதிரி எனக்கு தெரியுது..."
"என்ன உளர்ற... நான் ட்ரீட் கொடுக்கிறது காபி மட்டும் தான்... நீ என்னமோ ட்ரிங்கஸ் அடிச்சமாதிரி உளர்ற.."
"இல்லை அகிலா.. இன்னிக்கு கொஞ்சம் வித்தியாசமா.."
"என்ன வித்தியாசம்... சொல்லு.."
"சொல்லிடுவேன்..."
"சொல்லு மோகன்..."
"உன் ட்ரெஸ்... எப்பவுமே..நீ டார்க் கலர்ல சேலை மேட்சிங்கா அதே டார்க் கலர்ல பிளவுஸ் போடுவ.."
"ம்ம்ம்ம்.."
"இன்னிக்கு அப்படி இல்லை... லைட் கலர் சேலை காண்டிராஸ்ட்டா... பிளவுஸ்..."
"இல்லையே நான் எப்பவாவது இப்படி போடுவது உண்டு...."
"அப்புறம்.... ம்ம்ம்... இல்லை வேன்டாம்...."
"என்ன வேன்டாம்.. சொல்லு..."
"இல்லை வேனாம்.. இரு நான் போய் நம்ம அயிட்டங்களை எடுத்திட்டு வந்திடுறேன்...."

மோகன் போய் ரெடியான அனைத்தையும் எடுத்து வந்தான்..ஒரு ப்ர்ஜர்.. ஒரு கேக் இரண்டு காபி...

"என்ன மோகன் எல்லாம் ஒன்னு ஒன்னு வாங்கீருக்க..."
"இல்லை எப்பவுமே வரைட்டி வரட்டியா சாப்பிடனும் அது தான் எனக்கு பிடிக்கும்... இப்ப ரெண்டு பர்ஜர் வாங்கினேன்னா ரெண்டு பேருமே அத தான் சாப்பிடனும்.. இப்ப இதுல ஒன்னு அதுல ஒன்னுன்ன்னா ரெண்டு அயிட்டம் ஒரே நெரத்துல சாப்பிட்ட மாத்ரி எப்படி...."
"உனக்கு தான்பா இப்படி எல்லாம் யோசனை வருது.. வடிவேலு சொன்ன மாதிரி உக்காந்து யோசிப்பையா இதெல்லாம்..." சொல்லி சிரித்தாள்

"ஆனா இந்த கான்சப்ட் எனக்கு பிடிச்சிருக்கு... வரைட்டி.. ம்ம்ம் குட்.. உன் கிட்ட சரக்கு இருக்கு...."
"சொல்லு மோகன் ஏதோ அப்ப சொன்ன நிறுத்திட்ட..."
"ம்ம்ம் கோவிக்காம கேட்டா சொல்லுவேன்..."
"சொல்லு அத அப்புறமா யோசிக்கலாம்... வெட்டிய பர்ஜரை ஒரு பகுதிய எடுத்து கடித்தபடி..."

" உன்ன யாராவது இதுவரை புரொபோஸ் பன்னி இருக்காங்களா?..."
Like Reply


Messages In This Thread
RE: கனியும் ஒரு காதல்.. - by johnypowas - 04-02-2019, 08:36 PM



Users browsing this thread: 2 Guest(s)