04-02-2019, 12:18 PM
அப்புறம் ஒரு.. ஒரு வாரம்.. கவி அடிக்கடி என் செல்போனுக்கு கால் செய்தாள். நான் பிக் செய்யவே இல்லை. நிமிஷத்துக்கு ஒரு SMS அனுப்பினாள். படிக்கும் முன்பே அதை டெலீட் செய்தேன் நான். அவள் மேல் அவ்வளவு கோபத்தில் இருந்தேன். கவி மீது நான் கொண்டிருந்த காதல், தென்றலாய் அவ்வப்போது என் மனதை வருடி, அவளுடன் என்னை பேச சொல்லி தூண்டினாலும், அவள் என்னிடம் சொன்ன பொய்கள் ஏற்படுத்திய எரிச்சல், மிக அதிகமாயிருந்தது. அவளைக் கட்டிக்கொண்டு தினம் தினம் மண்டை காய்வதை விட, இப்போது கொஞ்சநாள் வலி தாங்கலாம் என்று தோன்றியது. 'அவள் உனக்கு வேண்டாம்..!!' என்று எனக்கு நானே அடிக்கடி சொல்லிக் கொண்டேன்.
அப்போதுதான் ஒருநாள் காலை.. நான் என் ஆபீசில், என்னுடைய ப்ரைவேட் ரூமில் இருந்தேன். வரவிருக்கும் ஒரு கான்ட்ராக்ட்டுக்காக எஸ்டிமேட் ப்ரிப்பேர் செய்து கொண்டிருந்தேன். ஆபீஸ் ரிஷப்ஷனிஸ்ட் சுதா இன்டர்காமில் அழைத்தாள். எடுத்து பேசினேன்.
"ஸார்.. கடக்கரை மேஸ்திரி வந்திருக்காரு.. உங்களை பாக்கணுமாம்.."
"என்னவாம்..? அதான் பேமன்ட்லாம் கொடுத்தாச்சுல..?"
"இல்ல ஸார்.. அவரு பொண்ணுக்கு கல்யாணமாம்.. இன்விடேஷன் கொடுக்க வந்திருக்காரு.."
"ஓஹோ.? சரி.. வர சொல்லு.."
சொல்லிவிட்டு நான் ரிசீவரை வைத்தேன். மீண்டும் அந்த எஸ்டிமேஷன் சார்ட் மீது பார்வையை வீசினேன். தனித்தனியாய் இருந்த அமவுண்டுகளை, கால்குலேட்டரில் போட்டு கூட்டினேன். ரூம் கதவு தள்ளப்பட்டதும் நிமிர்ந்தேன். கடற்கரை உள்ளே நுழைந்தார். கூடவே கவியும்..!! உள்ளே நுழைந்ததும் இருவரும் என்னைப் பார்த்து 'ஈஈஈஈஈ..' என இளித்தார்கள். நான் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல், ஓரிரு வினாடிகள் அவர்களை பார்த்தேன். அப்புறம் இன்டர்காம் எடுத்து சுதாவை அழைத்தேன்.
"சொல்லுங்க ஸார்.."
"உன்னை நான் கடக்கரையை மட்டுந்தான உள்ள அனுப்ப சொன்னேன்..?"
"அவரோட பொண்ணு கையாலயே இன்விடேஷன் கொடுக்கணும்னு ஆசைப்பட்டாரு.. அதான் அந்தப் பொண்ணையும் அனுப்பினேன்.."
நான் இப்போது நிமிர்ந்து என் எதிரில் நின்றவர்களை ஒருமுறை பார்த்தேன். தாரில் குளித்துவிட்டு வந்த மாதிரி கருகருவென் கடற்கரையும், தங்கத்தில் முலாம் பூசிக்கொண்டவள் மாதிரி தகதகவென கவியும், பக்கத்தில் நிற்கும்போதே படு கான்ட்ராஸ்ட்டில் காட்சியளித்தார்கள். நான் மீண்டும் இன்டர்காமில் சுதாவிடம் கேட்டேன்.
"எவ்ளோ சம்பளம் வாங்குற நீ..?"
"ஏழாயிரம்..!! ஏன் ஸார்..?" அடுத்த மாதத்தில் இருந்து ஆறாயிரந்தான் என்று நான் மனதுக்குள் சொன்னவாறு,
"ஒண்ணுல்ல.. இந்தப் பொண்ணைப் பாத்தா.. கடக்கரையோட பொண்ணு மாதிரியா தெரியுது..?" என கேட்டேன்.
"எனக்கும் அந்த டவுட்டு வந்தது ஸார்.. அந்த பொண்ணுட்ட கேட்டேன்.. அவ அவங்க அம்மா ஜாடைன்னு சொன்னா.."
"ஓ..!! வேற என்ன சொன்னா..?"
"அவங்கம்மா எட்டயபுரம் ஜமீன் பரம்பரைல பொறந்தவங்களாம் ஸார்.. ஐஸ்வர்யா ராய் மாதிரி அவ்வளவு அழகா இருப்பாங்களாம்.. அவங்களை கட்டிக்க சுத்துப்பட்டு எல்லா ஜமீனும்.. நீ நான்னு போட்டி போட்டாங்களாம்..!! ஒருதடவை நம்ம கடக்கரை மேஸ்திரி.. வேலை விஷயமா.. அவங்க அரண்மனைக்கு போயிருக்குறப்போ.."
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, நான் ரிசீவரை அறைந்து சாத்தினேன். மீண்டும் கடற்கரையையும் கவியையும் நிமிர்ந்து பார்த்தேன். இப்போது கடற்கரை வாயெல்லாம் பல்லாக, என்னை சமாதானப் படுத்தும் குரலில் சொன்னார்.
"இன்னா ஸார் நீ.. பாப்பாவாண்ட பைட்டு வுட்டுக்கினியாமே..? போன் பண்ணா எட்க கூட மாட்டின்றியாம்.. பாவம் ஸார் பாப்பா.. ஓ'ன்னு அழுவுது.. இந்த ஒருதபா மன்னிச்சு வுட்று ஸார்.."
"இங்க பாரு கடக்கரை.. நான் கன்னாபின்னான்னு திட்றதுக்கு முன்னாடி.. இங்க இருந்து போயிடு.."
"நான் போறேன் ஸார்.. நீ பாப்பா கூட கொஞ்சம் மன்சு வுட்டு பேசு.. போ பாப்பா.. போ... பேசு போ.."
கவியை முன்னால் தள்ளி விட்டுவிட்டு, கடற்கரை கதவு திறந்து வெளியேறினார். அவள் பால் குடிக்க தெரியாத பூனை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு, பவ்யமாக எனக்கு முன்னால் வந்து அமர்ந்தாள். நான் எதுவும் சொல்லாமல், சற்றே எகத்தாளமாய் அவளை பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள்.