screw driver ஸ்டோரீஸ்
#11
"பொய்மையும் வாய்மையிடத்து - இஃப் இட் இஸ் கமிங் ஃப்ரம் கவியின் வாய்..!! அப்டி சொல்லிருக்காருல..?" அவள் சீரியசான குரலில் சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

"ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா"

"ஹையா.. ஒருத்தன் சிரிச்சுட்டான்பா.." அடுத்த முனையில் கவியும் குதூகலித்தாள்.

"போடீ லூசு.. கோவமா இருக்குறப்போ.. இப்டி ஏதாவது லூசுத்தனமா பேசி.. சிரிக்க வச்சிடு.."

"ஹாஹா.. கோவம் போயிடுச்சா..?"

"ம்ம்.. போயிடுச்சு.."

"ஹை.. ஜாலி ஜாலி.."

"சரி சரி.. சொல்றதை கேளு.. இப்போ நீ.. உடனே கெளம்பி என் வீட்டுக்கு வரணும்.."

"ஏன்..?"

"எங்க வீட்டு பொண்ணுகளுக்கு உன்னை பாக்கணுமாம்.. ஊர்ல இருந்து அத்தையும், அந்த நித்யாவும் வந்திருக்காங்க.."

"ஓ.. என் சக்களத்தி வந்திருக்காளா..?"

"ஆமாம்.. வந்து உன் அசட்டு மூஞ்சியை கொஞ்சம் காட்டிட்டு போ.."

"ம்ம்.. ஓகே.. வீட்டுக்கே வந்துடவா..?"

"திரு.வி.க. பார்க் வந்துடு.. நான் அங்க வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.."

"சரிடா.." அவள் காலை கட் செய்யப் போவது போல சொல்ல, நான் அவசரமாக தடுத்தேன்.

"ஹேய்.. இருஇரு.."

"என்ன..?"

"கொஞ்சம் டீசண்டா ட்ரஸ் பண்ணிட்டு வாடி.. இந்த டைட் ஜீன்ஸ், தொப்புள் தெரியிற டாப்ஸ்லாம் வேணாம்..!! பொடவை கட்டிட்டு வா..!!"

"எனக்கு பொடவை கட்ட தெரியாதே.."

"கிழிஞ்சது.. அப்புறம் எதுக்கு பட்டுப்பொடவைலாம் கேட்ட நீ..? சரி.. ஏதாவது சுடிதார் மாட்டிட்டு வா.."

"ஓகே.. டன்.."

ஒரு மணி நேரம் கழித்து நான் கார் எடுத்துக் கொண்டு, திரு.வி.க பார்க் சென்றேன். கவிக்காக காத்திருந்தேன். ஒரு பத்து நிமிடத்தில் அவள் ஆட்டோவில் வந்து இறங்கி எனக்கு அதிர்ச்சி கொடுத்தாள். அதிர்ச்சிக்கு காரணம் ஆட்டோவில் வந்தது அல்ல.. அவள் அணிந்து வந்தது..!! புடவை..!!!! தங்க நிறத்தில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு, கூந்தலை இழுத்துக்கட்டி பின்னல் இட்டு, தலை நிறைய மல்லிகைப்பூ சூடிக்கொண்டு, மணப்பெண் மாதிரி வந்து நின்றாள்.

[Image: image011.jpg]

"என்னடி இது..???? கும்முன்னு வந்து நிக்கிற..? பொடவை கட்ட தெரியாதுன்னு சொன்ன..?"

"அது சும்மா பொய் சொன்னேன்.." அவள் கூலாக சொன்னதை கேட்டு நான் முறைக்க, அவள்

"சரிசரி.. ஆரம்பிச்சுடாத.. காரை ஸ்டார்ட் பண்ணு.. கெளம்பலாம்.." என்று எஸ்கேப் ஆனாள்.

"எங்கிட்ட பேசுற மாதிரி.. அங்கயும் வந்து லூசு மாதிரி உளறிட்டு இருக்காத..!! உன்னைப் பாத்து.. அங்க எல்லாரும் ஃப்ளாட் ஆகணும்.. அந்த மாதிரி நடந்துக்கணும்.. சரியா..?"

நான் அவளை எச்சரித்தவாறே காரை ஸ்டார்ட் செய்தேன். ஐந்தே நிமிடத்தில் என் வீட்டை அடைந்தோம். கவி வீட்டுக்குள் நுழைந்ததுமே, அம்மாவின் காலிலும், அத்தையின் காலிலும் விழுந்து நமஸ்காரம் செய்து எல்லோரையும் மிரள வைத்தாள். என்னையுந்தான்..!! ரொம்ப வெட்கப்படுபவள் மாதிரி ஆக்டிங் கொடுத்தாள். அனிதாவுக்கு கூட 'வாங்க.. போங்க..' என்று மரியாதை கொடுத்தாள். எல்லோரிடமும் எளிறுகள் தெரிய, இளித்து இளித்து பேசினாளே ஒழிய, என்னை தவறியும் கூட ஏறெடுத்து பார்க்கவில்லை. நானே வாயடைத்துப் போனவன் மாதிரி ஆனேன்.
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 04-02-2019, 12:16 PM



Users browsing this thread: 7 Guest(s)