screw driver ஸ்டோரீஸ்
#9
"இன்னைக்கு காலேஜுக்கு போனேன்னு சொன்னது..?"

"உண்மை.."

"ஒரு பையன் உனக்கு லவ் லெட்டர் கொடுத்தான்னு சொன்னது..?"

"பொய்.."

"ஸ்பெஷல் க்ளாஸ் இருக்குதுன்னு சொன்னது..?"

"பொய்.. பொய்.."

"ம்ம்ம்ம்... உனக்கு இன்னைக்கு பீரியட்ஸ்னு சொன்னது..?"

"பொய்.. பொய்.. பொய்.."

ஹாஹாஹா..!! இப்போது தெரிகிறதா.. இவளை நான் ஏன் தறுதலை என்று திட்டினேன் என்று..? இந்த மாதிரி ஒரு பெண்ணைத்தான் இத்தனை நாளாய் நான் காதலித்துக் கொண்டிருக்கிறேன். தினம் தினம் இவள்.. பொய் சொல்கிறாளா உண்மை சொல்கிறாளா என.. போராடுவதே எனக்கு பொழப்பாய் போயிற்று..!! சில்லித்தனமாய் கவி சொல்கிற பொய்கள்.. சில நேரங்கள் சிரிப்பை வரவழைத்தாலும்.. சில நேரங்களில் சினத்தையும் வரவழைக்கும்..!! எப்படி என்று கேட்கிறீர்களா..? சொல்கிறேன்..!!

இந்தக்கதை ஆரம்பித்த தினத்தில் இருந்து ஒரு இரண்டு மாதத்தில், என்னுடைய லவ் மேட்டர் என் வீட்டில் எல்லோருக்கும் தெரிந்து போனது. எனது வீட்டில் என்னைத்தவிர அம்மா, அப்பா.. அப்புறம் என் தங்கை அனிதா. கவியின் மேட்டரை துப்பறிந்து வீட்டில் போட்டுக் கொடுத்தது, சாட்சாத் என் தங்கை அனிதாவேதான். நான் எதிர்பார்த்த மாதிரியே, வீட்டில் பெரிதாக எதிர்ப்பு ஒன்றும் கிளம்பவில்லை. அப்பாதான் கொஞ்ச நேரம் கவியின் குடும்பத்தை பற்றி துருவி துருவி விசாரித்தார். எல்லாம் தெரிந்த பிறகு அவரும் திருப்தியாக சம்மதித்தார்.

என் வீட்டில் எல்லோரும் கவியை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப் பட்டார்கள். அவளை ஒருநாள் வீட்டிற்கு கூட்டி வர சொன்னார்கள். நானும் விரைவில் அவளை அழைத்து வருவதாக அவர்களிடம் சொல்லியிருந்தேன்.

அதன் பிறகு இரண்டு வாரம் கழித்து, கவியின் பிறந்த நாள் வந்தது. ஆக்சுவலாக அதற்கு முந்தைய தினம் இரவு, நான் கவியுடன்தான் ஊர் சுற்றிக் கொண்டு இருந்தேன். ஆனால் அடுத்த நாளை பற்றி அவளிடம் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை. சர்ப்ரைசாக ஏதாவது செய்து அவளை அசத்த வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

உங்களுக்கே தெரிந்திருக்கும்.. என்னுடைய வேலை கொஞ்சம் கடினமான வேலை. சைட் சைட்டாக அலைய வேண்டும். எட்டு மாடி, பத்து மாடி என்று படிக்கட்டில் ஏறி இறங்க வேண்டும். அதனால் தினமும் வீட்டை அடையும்போது, எக்கச்சக்கமாய் களைத்துப் போயிருப்பேன். பத்து மணிக்கு மேல், கண்களை திறந்திருப்பது மிகவும் கடினமான விஷயமாய் இருக்கும். அன்று நான் பனிரெண்டு மணி வரை விழித்திருந்தேன். அவளுக்கு பர்த்டே விஷ் சொல்வதற்காக..!!

பனிரெண்டு மணியானதும் செல் எடுத்து கவிக்கு கால் செய்தேன். கால் செய்தேன்.. கால் செய்தேன்.. செய்துகொண்டே இருந்தேன். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அவள் எடுக்கவே இல்லை. நன்றாக தூங்கிவிட்டாள் போலிருக்கிறது. ஆசையாக வாழ்த்து சொல்ல விழித்திருந்தவன், அரை மணி நேரத்திலேயே வெறுத்துப் போனேன். எரிச்சலாக செல்போனை தூக்கி எறிந்துவிட்டு, இறுதியாக ஒரு கொட்டாவியை வெளியிட்டுவிட்டு, மெத்தையில் விழுந்து உறங்கிப் போனேன்.

அடுத்த நாள் காலையில் எழுந்தபோது, வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அத்தை (அப்பாவின் தங்கை), மாமா (அத்தை மீது பயம் ஜாஸ்தி), அத்தை பெண் நித்யா (என் மீது ஒரு கண் அவளுக்கு). நான் குளித்து முடித்து வெளியே வந்த போது, மொத்த குடும்பமும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். அம்மா ப்ரேக் பாஸ்டுக்கு அழைத்தாள். 'இதோ வருகிறேன்..' என்று எஸ்கேப் ஆகி, நான் பால்கனி வந்தேன். மீண்டும் கவிக்கு கால் செய்தேன். இந்த முறை இரண்டே நிமிடத்தில் பிக்கப் செய்தாள்.

[Image: image008.jpg]
[+] 1 user Likes johnypowas's post
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 04-02-2019, 12:14 PM



Users browsing this thread: 9 Guest(s)