04-02-2019, 12:13 PM
"சாரிடா செல்லம்.." அவள் கொஞ்சிக்கொண்டே என் கன்னத்தை பிடிக்க,
"ப்ச்.. ஒன்னும் வேணாம் போ.. கையை எடு.." நான் அவளுடைய கையை தட்டிவிட்டேன்.
"சரி.. பட்டர் ஸ்காட்ச்சே ஆர்டர் பண்ணு.. நான் சாப்பிடுறேன்.."
"எனக்காக ஒன்னும் நீ புடிக்காததுலாம் சாப்பிட வேணாம்.."
"இல்லை.. எனக்கு புடிக்கும்.."
"திரும்ப திரும்ப பொய் சொல்லாத கவி.. அப்டியே அறைஞ்சுடுவேன்.." நான் கையை ஓங்க,
"ம்ம்ம்.. அறை அசோக்.. அறிவே இல்ல எனக்கு.. நல்லா அறை..!!" அவள் முகத்தை திருப்பி, நான் அறைவதற்கு வாட்டமாக கன்னத்தை காட்டினாள்.
"போடீ... லூசு...!!" நான் உயர்த்திய கையை கீழே போட,
"யுவர் ஆர்டர் ப்ளீஸ் சார்.." என்று பேரர் வந்து நின்றான்.
"எனக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் டபுள் ஸ்கூப்.. அவளுக்கு என்ன வேணும்னு அவகிட்டயே கேட்டுக்கோ..!!" நான் வெறுப்பாக சொன்னேன்.
"மேடம்.." என்று அவன் கவியை பார்க்க,
"என் வூட்டுக்காரர் ஆர்டர் பண்ணினதே எனக்கும் கொண்டு வாங்க..!!"
அவள் நல்லபிள்ளை மாதிரி சொல்லிவிட்டு, மீண்டும் என் கையை கட்டிக்கொண்டாள். பேரர் ஒரு நமுட்டு சிரிப்புடன் நகர்ந்தான். அப்புறம் கொஞ்ச நேரம் நான் கவியிடம் எதுவுமே பேசவில்லை. ஆர்டர் செய்த ஐஸ்க்ரீம் வந்து, சாப்பிட்டு முடிப்பதற்குள் கவி அடிக்கடி என்னை சீண்டி பார்த்தாள். நான் முறைப்பை மட்டுமே பதிலாக அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்து, மீண்டும் காருக்குள் சென்று அமர்ந்தோம். இப்போது கவி என் இடுப்பை வளைத்துக் கொண்டு கொஞ்சினாள்.
"கோவம் இன்னும் போகலையா..?"
"ப்ச்.. விடு கவி.."
"ம்ஹூம்.. கோவம் போயிடுச்சுன்னு சொல்லு.. அப்போதான் விடுவேன்.."
"கோவம்லாம் போகாது.. விடு.."
"ப்ளீஸ் அசோக்.. நீ இப்டி மூஞ்சியை உர்ர்ருனு வச்சிருந்தா.. பாக்கவே சகிக்கலை தெரியுமா..? சிரிச்சாத்தான் உன் மூஞ்சி நல்லாருக்கு.. சிரி அசோக்.. ப்ளீஸ்..!! வேணுன்னா.. உனக்கு கோவம் போற வரை.. நல்லா என்னை கிஸ் பண்ணிக்கோ..!! ம்ம்ம்.."
என்றவாறு அவள், கண்களை மூடிக்கொண்டு உதட்டை பிதுக்கி காட்ட, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. முதலில் லேசான புன்னகைதான் என் உதட்டில் இருந்து வெளிப்பட்டது. பின்னர் அந்த புன்னகை பெரிதானது. சிரித்துவிட்டேன். அவ்வளவுதான்...!!! தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரிந்த மாதிரி கவியின் முகம் பிரகாசமானது.
"ஹை... இப்டி சிரிச்சா.. எப்டி இருக்கு மூஞ்சி.. ம்ம்ம்ம்... லவ்யூடா குட்டி..!!"
கூச்சலிட்டவாறு கவி என்னை இறுக்கி அணைத்துக்கொண்டாள். நானும் இப்போது அவளை ஆசையாக தழுவிக் கொண்டேன். அவளது கூந்தலின் நறுமணத்தை வாசம் பிடித்தேன். அவளுடைய நெற்றியில் காதலாக ஒரு முத்தமிட்டு விட்டு, பின்பு அன்பான குரலில் கேட்டேன்.
"ஏண்டி இப்டி பண்ற..?"
"நான் என்ன பண்ணுனேன்..?" அவள் ஒன்றும் தெரியாத பிள்ளை மாதிரி கேட்டாள்.
"பொய் பொய்யா சொல்லி என்னை லவ் பண்ண வச்சிருக்கடி.."
"ஹாஹா.. பெரியவங்க சொல்லிருக்குறதைத்தான நான் பண்ணிருக்கேன் .?"
"பெரியவங்க என்ன சொல்லிருக்குறாங்க..?"
"ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு ஆம்பளையை கவுக்கனும்னு சொல்லிருக்காங்கல்ல..?"
"லூசு... அது ஆம்பளையை கவுக்குறது இல்ல.. கல்யாணம் பண்றது..!!"
"ரெண்டும் ஒண்ணுதான்..!!" அவள் பட்டென்று சொல்ல, நான் சிரித்தேன்.
"ஹ்ஹாஹ்ஹா.. ம்ம்ம்.. ஆனா.. நீ என்னை கவுக்குறதுக்காக மட்டும் பொய் சொல்லலையே..? சம்பந்தமே இல்லாம.. உப்பு சப்பு இல்லாத மேட்டருக்குலாம் பொய் சொல்லிருக்க..!! என்னவோ.. பொய் சொல்லாம உன்னால இருக்கவே முடியாத மாதிரி.. அது ஏன்..?"