04-02-2019, 12:11 PM
"க்ளாசா..? இதுல போய் இன்னாத்துக்கு க்ளாஸ் போடுறானுங்கோ.. அறிவு கெட்டவனுங்கோ..!!" கிண்டலாக சொன்ன கடற்கரையை நான் முறைத்துப் பார்த்தேன். அதை உணர்ந்ததும் அவர் கொஞ்சம் கம்மலான குரலில் கேட்டார்.
"இன்னா சார்..?"
"அந்த க்ளாஸ் போடுற ஐடியா நான் சொன்னது...!!"
"ஓ.. உன் ஐடியாதானா..? இன்னாத்துக்கு க்ளாஸ்லாம் போடுற இதுல நீ..?"
"ப்ச்.. அதுலாம் உனக்கு சொல்லி புரிய வைக்க முடியாது கடக்கரை.. இந்த மாதிரி ஏதாவது வேலை பண்றதுக்குத்தான் எனக்கு பணம் தர்றாங்க.. நான் சொல்ற வேலையை மட்டும் செய்.. போதும்..!!"
"சரி வுடு.. பண்ணிர்லாம் வுடு.."
"எப்போ..?"
"அதான் பண்ணிர்லாம்னு சொல்றேன்ல..?"
"இப்போ பண்ணு.. இன்னைக்கு நான் உக்காந்து பாத்துட்டுத்தான் போறேன்.." நான் சீரியஸாக சொல்லிக் கொண்டிருக்க, கடற்கரை சிரித்தார்.
"எதுக்கு சிரிக்கிற இப்போ..?" நான் சற்றே எரிச்சலாக கேட்டேன்.
"நான் பண்றேன்.. ஆனா பாக்கத்தான் நீ இருக்கமாட்ட.."
"ஏன்..?"
"அங்க பாரு.. பாப்பா வந்தினுகிது.."
கடற்கரை கை நீட்டிய திசையில், தூரமாய் நான் பார்வையை வீசினேன். கதீட்ரல் ரோடிலிருந்து பிரிந்து வந்த சாலையில், ஸ்கூட்டி ஓட்டிக் கொண்டு கவி வருவது தெரிந்தது. இந்தக்கதையின் ஹீரோயின்..!! மிதமான வேகத்தில் வந்தவள், எங்கள் பில்டிங்கை அடைந்ததும், வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டாள். நான் திரும்பி கடற்கரையை பார்க்க, இப்போது அவர் முகத்தில் ஒரு கேலிப்புன்னகை.
"இன்னா.. இப்போ உக்காந்து வேலையை இருந்து பாத்துனு போறியா..?" அவர் கிண்டலாக கேட்க, நான் ஒரு அசட்டுப் புன்னகையை சிந்தினேன்.
"வேலையை முடிச்சிடு கடக்கரை.. நான் காலைல வந்து பாக்குறேன்.."
"ஒன்னும் கவலைப்படாத.. போயினு காலைல வா.. வேலை முடிஞ்சிருக்கும்.."
அவர் என் முதுகை பார்த்து சொல்ல, நான் என் லேப்டாப் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக் கொண்டேன். படிக்கட்டில் இறங்கிக்கொண்டே, செல்போன் எடுத்து கவியின் நம்பரை தட்டினேன். கால் பிக்கப் செய்யப்பட்டு நான் ஹலோ சொல்வதற்கு முன்பே, எதிர் முனையில் கவி சோகமான குரலில் கொஞ்சலாக சொன்னாள்.
"அசோக்... இப்போதான் வீட்டுக்குள்ளயே நொழையுறேன்டா செல்லம்.. ரொம்ப லேட் ஆயிடுச்சு.. டயர்டா வேற இருக்கு.. என்னால அங்க வர முடியாதுன்னு நெனைக்கிறேன்.. நாம நாளைக்கு மீட் பண்ணலாமா..? ம்ம்..? ஓகேவா..?"
அவள் குழைவான குரலில் கெஞ்சிக்கொண்டிருக்க, நான் பதில் சொல்லாமல் காதுக்கு கொடுத்திருந்த செல்போனை, கடுப்புடன் கையில் எடுத்து பார்த்தேன். டிஸ்ப்ளேயில் வெண்பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த கவியின் முகத்தை சற்றே எரிச்சலாய் முறைத்தேன். 'ஆரம்பிச்சுட்டியா..????' என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். அப்புறம் மறுபடியும் செல்போனை காதுக்கு கொடுத்து,
"லூசு..!!!! நீ வந்ததை.. மேல இருந்து நான் பாத்துட்டேன்..!!" என்றேன் எரிச்சலை அடக்கிக்கொண்டு.
"ஓ.. பாத்துட்டியா..? ச்ச்சே.. திடீர்னு உன் முன்னாடி வந்து நின்னு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சேன்.. எல்லாம் போச்சு..!!" இப்போது அவளது குரல் சோகம் விடுத்து ஏமாற்றமாய் ஒலித்தது.
"ம்ம்ம்.. அதுசரி.. என்ன.. அஞ்சு மணிக்குலாம் வந்து நிக்கிற..? ஆறு மணிக்குத்தான் வருவேன்னு சொன்ன.."
"ஹஹா.. அது சும்மா பொய் சொன்னேன்.."
"எதெதுக்குத்தான் பொய் சொல்றதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா உனக்கு..?" நான் சற்றே கோபமான குரலில் கேட்க,
"சரிசரி.. ஆரம்பிச்சுடாத.. இனிமே பொய் சொல்லலை.. போதுமா..?" அவள் என்னை சாந்தப் படுத்தினாள்.
"சரி கீழேயே இரு.. வர்றேன்.."
"பரவால்ல அசோக்.. மேல வர்றேன்.."