04-02-2019, 10:55 AM
மேற்கு வங்க அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையிட சி.பி.ஐ முடிவு! #mamatavscbi
சாரதா நிதி நிறுவனம் தமது முதலீட்டாளர்களிடம் இருந்து கோடிக் கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்குத் தொடர்பாக, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிப்பதற்காக, அவரது இல்லத்துக்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். அப்போது, சி.பி.ஐ அதிகாரிகளை மாநில காவல்துறையினர் கைது செய்து, அருகிலுள்ள காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டுக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநிலம் முழுவதும் பேரணியில் ஈடுபடுவதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சி.பி.ஐ அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். இன்று, சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்வதற்கு அனுமதி மறுத்த மேற்கு வங்க அரசின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு மற்றும் சி.பி.ஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படவுள்ளது.
குடியரசுத் தலைவர் ஆட்சியையும் எதிர் கொள்ளத் தயார் என்று மம்தா பானர்ஜி சவால் விடுத்திருந்திருந்தார். இருப்பினும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் முடிவில் மத்திய அரசு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் மூலம் இந்தப் பிரச்னையை மத்திய அரசு இந்தப் பிரச்னையை கையாளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.