Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
``கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைனு நடக்கணும்னு வாழ்த்துறேன்!” - கலகலத்த இளையராஜா

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பிரமாண்டமான முறையில் இரண்டு நாள்கள் நடைபெற்ற 'இளையராஜா 75' நிகழ்ச்சி நேற்று நிறைவுற்றது. ரஜினி, கமல், தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், மோகன் பாபு, விக்ரம், சத்யராஜ், நாசர், குஷ்பு, சுஹாசினி, ரோகிணி, இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், இசையமைப்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், மணி ஷர்மா, தேவி ஸ்ரீபிரசாத், விஜய் ஆண்டனி, தினா ஆகியோர் பங்கு பெற்றனர். இரண்டு நாள்கள் நடந்த நிகழ்ச்சியில் முதல் நாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தது, சினிமாத்துறையினர் தங்க வயலின் வழங்கியது, ஏ.ஆர். ரஹ்மான் - இளையராஜா கலந்துரையாடல் எனக் களைக்கட்டியது. இரண்டாம் நாளான நேற்று ரஜினி- இளையராஜா பேச்சு, கமல் தொடர்ந்து 4 பாடல் பாடியது, ஷங்கர் - இளையராஜா கூட்டணி வேலை செய்த படம், விக்ரம் பாடல் பாடியது என ரசிகர்களுக்கு பெரும் விருந்தாய் அமைந்தது.
[Image: 0001_08022.jpg]
நிகழ்ச்சியில் சுந்தரி கண்ணால், ராக்கம்மா கையத்தட்டு, தென்பாண்டி சீமையிலே, பூவே செம்பூவே என 30-க்கும் மேற்பட்ட இளையராஜாவின் ஹிட் பாடல்கள் பாடப்பட்டன. நள்ளிரவு தாண்டியும் அரங்கில் குழுமியிருந்த பதினெட்டாயிரத்துக்கும் மேற்பட்ட இளையராஜா ரசிகர்கள் நிகழ்ச்சியைக் கண்டுகளித்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக இளையராஜா தென்பாண்டி சீமையிலே பாடலை பாடி முடித்து ரசிகர்களிடம் பேசினார். அப்போது, ``இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும் அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாதுனு நினைச்சவங்களுக்கும் ரொம்ப நன்றி.


இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சர்டிஃபிக்கேட் கொடுத்துருக்குனா அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவங்கதான் காரணம். விஷால் மற்றும் அவரின் அணி வாக்குகள் வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்தமாதிரி சங்கத்துக்குப் பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள். சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரியாளு ஆவாங்க, சிலர் பாடலில் இருக்குற குறைய கண்டுபுடிச்சிக் காட்டி பெரிய ஆவாங்க. அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைனு நடக்கணும் நான் வாழ்த்துறேன்" என்றார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். முன்னதாக `இளையராஜா 75' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு  தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.   
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 04-02-2019, 10:52 AM



Users browsing this thread: 6 Guest(s)