04-02-2019, 10:20 AM
தன்னைப் பிடிக்க வந்த கும்கி யானையுடன் விளையாடும் சின்னத்தம்பி!
சின்னத்தம்பி யானை, தன்னைப் பிடிக்க வந்த கும்கி யானை கலீமுடன் விளையாடி வருகிறது.
சின்னத்தம்பி யானை, தன்னைப் பிடிக்க வந்த கும்கி யானை கலீமுடன் விளையாடி வருகிறது.
கோவையில் காட்டு யானை சின்னத்தம்பி, கடந்த மாதம் டாப்ஸ்லிப் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டான். ஆனால், இடமாற்றம் செய்யப்பட்ட சில நாள்களிலேயே சின்னத்தம்பி யானை, மீண்டும் தன் வாழ்விடத்தைத் தேடி வெளியில் வந்துவிட்டது. தொடர்ந்து சுமார் 80 கி.மீக்கு மேல் சின்னத்தம்பி நடந்து சென்று கொண்டிருக்கிறான். தற்போது, உடுமலையில் இருக்கும் சின்னத்தம்பி, எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல், தன் வாழ்விடத்தைத் தேடி அமைதியாக செல்வது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, சின்னத்தம்பி யானையைப் பிடிப்பதற்காக, டாப்ஸ்லிப்பில் இருந்து கலீம் மற்றும் மாரியப்பன் என்ற இரண்டு கும்கி யானைகள் களமிறக்கப்பட்டன. நேற்று இரவு முதலே கும்கிகளுடன் சின்னத்தம்பி விளையாடி வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது கலீம் யானையுடன், சின்னத்தம்பி யானை இன்று இரவு விளையாடி வருகிறது. பொதுவாக, காட்டு யானைகள் முரட்டுத்தனமாக இருக்கும் என்று பரவலாக கூறப்படும் நிலையில், தன்னைப் பிடிப்பதற்காக வரவழைக்கப்பட்டுள்ள கும்கி யானையுடன் சின்னத்தம்பி யானை விளையாடுவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தடாகம் பகுதி மக்கள், ``எப்பேர்பட்ட பெரிய யானையாக இருந்தாலும், அதனுடன் சின்னத்தம்பி எளிதில் நெருங்கி பழகிவிடுவான். யாருடனும் சேராமல் தனியாக சுற்றும் விநாயகன் யானையே, சின்னத்தம்பியுடன் மட்டும் விளையாடும். அதுதான் சின்னத்தம்பியின் குணம்" என்றனர்.