காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#23
முதலில் சு தாரித்த வெங்கடேஷ் அங்கே இருந்த இரவு நேர டாக்டரையும், நர்சையும் அழைத்து வந்தான். அவர்கள் வரும் வரை என்னுடைய அம்மா என்னிடம் பேச்சு கொடுக்க முயன்றாள், நான் கலா என்று மட்டும் கத்திய பிறகு கண்ணீருடன் அழுது கொண்டே இருந்தேன் வேறு யாரிடமும் பேசவே இல்லை. சிறிது நேரத்தில் வந்த டாக்டர் என்னை மீண்டும் பரிசோதித்து. நான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து முழுமையாக மீளவில்லை அதனால் யாரும் என்னை தொந்தரவு செய்யாமல் நன்றாக தூங்க விடுங்கள் என்று கூறிவிட்டு சென்றார். நான் அப்படி செய்தது எனது சுயநினைவு இல்லாமலே செய்தேன்.

டாக்டர் கொடுத்த அந்த தூங்க செய்யும் மருந்தால் நன்றாக தூங்கிய நான் காலையில் நார்மலாக எழுந்தேன். நான் எப்பொழுது கண் திறப்பேன் என்று எதிர் பார்த்து எனது அம்மா எனருகிலேயே காத்து கொண்டிருந்தாள். நான் கண் திறந்ததும், என்னிடம் பேச்சு கொடுக்க தொடங்கினாள்.

அம்மா: எய்யா ராசா எப்படிப்பா இருக்கு, நீ எழுந்திர்க்க வேண்டாம்ப்பா. ஏதாவது வேணுமாய்யா என்று கண்ணீருடன் கேட்டாள்.

அம்மாவின் பேச்சை கேட்ட அங்கிருந்த வேலாவும், வெங்கடேசும் என்னருகில் வந்து ஏதோ கேட்டனர். ஆனால் நான் அவர்களுக்கு அளித்த பதில் ஒன்றே ஒன்றுதான்

நான்: என்னோட கலாவுக்கு கல்யாணம் முடிஞ்சிரிச்சாம் மக்கா. அவா என்னை விட்டு ரொம்ப தூரம் போய்டாடா என்றேன்.

எனது பதிலை கேட்ட இருவரும் தலை அடித்து கொண்டே கண்ணீருடன் அவளை நீ இன்னும் நினைச்சுடாடா இருக்கே என்று அழுது கொண்டே கேட்டனர். என்னை மேலும் அழவிடகூடாது என்பற்காக என்னுடைய அம்மா வேற ஏதையோ கேட்டாள், பேச்சை அப்படியே மாற்றினாள். பின்னர் டாக்டர்ஸ் வந்து என்னை வீட்டுக்கு அழைத்து செல்லலாம் அன்று அனுமதி அளித்து விட்டு சென்றனர்.

அதன் பின்பு வந்த அந்த ஆறு மாதமும் எனது வாழ்வின் மிக மோசமான கருப்பு பக்கங்கள் என்றால் கூட மிகையாகாது. எப்படி அந்த நாட்களில் நானும் அழுது சுற்றி இருந்த அனைவரையும் கஷ்டபடுத்தி கொண்டே இருந்தேன் என்று தெரியவில்லை. ஆனால் இன்றுவரை நான் அப்படி நடந்து கொண்டதை பற்றி யாரும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. அவர்களின் அந்த செயலே என்னை முழுமையாக மீட்டெடுத்தது.

நான் வீடு சென்ற பின்னர் யாரிடமும் பேசவே இல்லை, எல்லோரும் என்னிடம் என்னென்னமோ கேட்டுப்பார்த்தார்கள் நான் எதற்கு வாய் திறந்து பேசவே இல்லை. பொறுத்திருந்து பார்த்த என்னுடைய அம்மா.

அம்மா: நீ ஏதாவது பேசி தொலையேண்டா.. நீ அமைதியா இருந்து ஏன்டா எல்லோரையும் உயிரோட கொல்லுற என்று கண்ணீருடன் மிரட்டினாள். அதில் கோபம் இல்லை ஆதங்கமே இருந்தது. இதற்குமேல் அவள் அங்கே இருந்தால் மேலும் தாங்க மாட்டாள் என்று கருதி என்னுடைய நண்பர்கள் சிலர் அவளை வெளியே அழைத்து சென்றனர்.

பின்னர் என்னருகில் இருந்த ஆறுமுகம் மெதுவாக பேச்சு கொடுக்க தொடங்கினான்.

ஆறுமுகம்: ஏம்டா மக்க, இப்படி அமைதியா இருக்க, இங்க பாரு நீ அவளையே நினைச்சு நினைச்சு உன்ன பத்தி கவலைபடுரவங்களை கொஞ்சங்கூட யோசிக்க மாட்டேங்கிற.. நீ மூச்சு பேச்சு ஏதும் இல்லாமல் இருக்கும் போது உன்ன பக்கத்தில இருந்து இரண்டு நாளா தூங்காம பார்த்து பார்த்து அழுதுட்டு இருந்து உன்னோட அம்மாதாண்டா அதை ஏன்டா புரிஞ்சுக்க மாட்டேங்கிறே என்று கேட்டு எனது சிந்தனை ஓட்டத்தை தடுத்தான்
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 03-02-2019, 11:12 AM



Users browsing this thread: 3 Guest(s)