காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#22
கடந்த கால நினைவுகளில் இருந்து மீண்ட நான், சுற்றும் முற்றும் பார்த்தேன் அனைவரும் சொந்த ஊரை அடைந்த மகிழ்ச்சியில் இருந்தனர், அது அவர்களின் கண்களில் நன்றாக தெரிந்தது. இறுக்கமான ஆடையில் ஒய்யாரமாக பவனி வந்து அனைவரின் பார்வைக்கும் மட்டும் அல்ல விமான பணி சேவையிலும் அனைவருக்கும் விருந்தளித்து கொண்டிருந்தனர் அந்த விமான பணி பெண்கள். அவர்களை கண் குளிர ரசித்து கொண்டிருந்தேன். நான் இறங்கும் வேலையும் வந்தது.

விமானத்தை விட்டு கீழிறங்க நான் வெளியே வந்த பொழுது, என்னதான் AC குளிர்ந்தாலும், அந்த குமரி கடலின் காற்றலைகள், தேடிவந்த மகனை ஓடிவந்து அனைத்து கொண்டது அந்த குளிர்ச்சிக்கு இணை எதுவும் இல்லை. இரவுநேர காற்று நான் மீண்டும் சொந்த ஊர் வந்த சந்தோசத்தை இரட்டிப்பாக்கியது. மேலும் இருள் என்னும் போர்வை போர்த்தி இருந்த இரவில், அங்காங்கே எட்டிப்பார்த்த விண்மீன்கள் உனக்கொரு வாரிசு வர போகிறான் என்று வாழ்த்தி கண் சிமிட்டியது. இயற்கை அனைத்தும் என்னை வாழ்கிறது போல் தோன்றியது.

விமான நிலையத்தை விட்டு நான் வெளியே வரும் பொழுது எனது மொபைல் போன் மறுபடியும் சிணுங்கியது. எடுத்து பார்த்தால், அதில் எனது நண்பன் வேலா வின் பெயர் தெரிந்தது. நான் அந்த அழைப்பிற்கு பதில் சொல்வதற்குள் இரு கரங்கள் எனது கண்களை மறைக்க மேலும் பலரது கைகள் என்னை செல்லமாகதட்டி ஒரு பெரிய கூச்சலையே ஏற்படுத்தினர். நான் திமிறி யார் எல்லாம் வந்திருகிறார்கள் என்று பார்த்தால், அதே அந்த ஏழு பேர் கொண்ட படை எனது வாழ்வில் என்றும் பிரியாத அந்த என்னுயிர் நண்பர்கள். அனைவருக்கும் நான் பதில் சொல்லுவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. நாங்கள் அந்த இடத்தை விட்டு பிரியும் முன் அனைவரின் பார்வையும் எங்கள் மீதே இருந்தது. அப்படி பேசிய சத்தம், நேற்று தான் கல்லூரி முடித்து வந்த வாலிபர்கள் போன்ற நடத்தை. ஒவ்வொருவருக்கும் திருமணம் முடிந்து பிள்ளைகள் இருந்தும், நண்பனை பார்த்த சந்தோசத்தில் அனைவருக்கும் அந்த பதின் வயது இளமை மீண்டும் திரும்பியது போல் இருந்தது. ஒருவழியாக அனைவருடன் பேசிவிட்டு அவர்கள் கொண்டு வந்த அந்த அம்பாசிடர் மற்றும் இன்னோவா வண்டிகளில் அனைவரும் ஏறினர். நான் அந்த அம்பாசிடரில் வேலா ஓட்ட முன் சீட்டில் அமர்ந்து கொண்டு வந்தேன். சிறிது நேரத்தில் நான் தூங்கியும் போனேன். அந்த ஆழ்ந்த உறக்கத்தில் நான் மீண்டும் அந்த பழைய நினைவுகளை புரட்டிப்பார்த்தேன்.

கலாவின் வீட்டில் இருந்து திரும்பிய பொழுது, அன்று நான் கீழே விழுந்ததில் எனது தலை நேராக அங்கே இருந்தே இரு பெரிய கரும் கல்களுக்கிடையே பலமாக மோதியது, நான் விழும் தருணத்தில் கூட அழைத்த பெயர்...கேட்டால் நீங்கள் கூட சிரிப்பீர்கள்.. ஆம் கலாதான். எனக்கு எதிர் திசையில் வந்த அந்த இரண்டு முகப்பு வெளிச்ச்சமுன் எனது நண்பர்கள் என்னை தேடிவந்த இரு பைக்-கின் வெளிச்சமே. நான் எழுப்பிய கலா என்கிற சத்தம் தான் அவர்களுக்கு நான்தான் கீழே விழுந்தேன் என உறுதியாக நம்ப செய்தது. கீழே கிடந்த என்னை ஹாஸ்பிடல் கொண்டு போய் சேர்த்தனர், மேலும் நான் அங்கேயே விட்டு வந்த பைக்-கை எடுத்து வந்தனர். தலையில் பலமாக அடிப்பட்டதில், அரைமயக்கத்தில் இருந்தேன். அந்த இரண்டு நாட்கள் எனக்கு என்ன நடந்தது என்றே எனக்கு தெரியாது.

ஆனால் அங்கே நான் மருத்துவ மனையில் பெட்டில் கிடக்க என்னுடைய அம்மாவும் நண்பர்களும் பேசும் வார்த்தைகள் ஒன்றிரண்டு காதில் விழும் ஆனால் என்னால் கைகளை அசைத்தோ அல்லது வாய் பேசியோ எதுவும் கூற முடியவில்லை. கண்களில் கண்ணீரும், காதுகளால் கேட்கமட்டுமே முடிந்தது. சூழ்நிலை மிக மோசமாக தொடங்கியது. இரு தினங்கள் மயக்கத்தில் இருந்த நான் முணுமுணுத்த ஒரே வார்த்தை கலாதான். அதுவரை கலாவை எனது தோழி என்று நினைத்துவந்த என்னுடைய அம்மா நான் எவ்வளவு கலாவை காதலிக்கிறேன் என்று பார்த்து பார்த்து கண்ணீருடன் நின்று கொண்டிருந்தார்கலாம். நான் நினைவு திரும்பிய பின் நண்பர்கள் சொல்லியது.

நான் ஏதேதோ மோசமான கனவுகள் கண்டேன் எதுவும் இப்பொழுது நினைவில்லை ஆனால் அந்த மோசமான கனவுகள் தான் என்னை மயக்கத்தில் இருந்து எழ செய்தது. அடிப்பட்ட இரண்டாம் நாள் இரவு 'கலா' என்ற பெரிய சப்தத்துடன் படிக்கையை விட்டு எழுந்தேன் ஒரு கைகளில் குளுக்கோஸ் ஏற மறு கைகளில் வழியாக எனது இருதய துடிப்பை பார்க்க வொயர்கள் பொருத்தி இருந்தனர். வேகமாக எழுந்ததில் வலது கைகளில் இருந்த குளுக்கோஸ் டுயுப் அறுந்து இரத்தம் வேகமாக தெறிக்க இடது கைகளில் இருந்த வொயர்கள் அறுந்ததில் அங்கே அடுக்கு வைக்கப்படிருந்த மருந்து, பழங்கள் கீழே உருண்டு ஓட பெரிய அதிர்ச்சியில் நான் கத்தினேன். தலை மற்றும் உடலில் பல பாகங்கள் வலிக்க மேலும் பலமாக அம்மா என்று கத்தினேன். அறையில் உறங்கி கொண்டிருந்த என்னுடைய அம்மாவும், நண்பன் வெங்கடேசும் என்னை பேரதிர்ச்சியுடன் பார்த்துகொண்டிருந்தனர்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 03-02-2019, 11:10 AM



Users browsing this thread: 2 Guest(s)