03-02-2019, 10:38 AM
ஐயோ இப்ப அவ தாண்டா எனக்கு அழகா தெரியுறா என்று மனதிற்குள் அவனை திட்டினான் ,சரி நம்ம இகோவ விட்டு கொடுக்க கூடாது என்று நினைத்து கொண்டு ஏன் இப்படி இப்படி மறுபடியும் மறுபடியும் எனக்கு பிடிக்கதாதா பண்றீங்க என்றான் பொய்யாக .
அவன் பயந்து கொண்டு சாரி சார் உங்களுக்கு பிடிக்காட்டி வேணாம் ப்ரோக்ராம் கேன்சல் பண்ணிடுவோம் சார் என்றான் . முகிலுக்கு பக் என்றானது அய்யோ நம்ம இகோவல வெட்டியா ஒரு சான்ச வீணாக்க குடாதே அப்படின்னு பயந்துட்டு சொன்னான் சரி சரி நம்ம டிவிக்குகாகவும் உங்களுக்கு ஆகவும் நான் பேட்டி கொடுக்கிறேன் என்ன ஒரு மணி நேரம்தானா அந்த முஞ்சிய பாக்கணும் நான் சமாளிச்சுகிறேன் என்றான் .
தேங்க்ஸ் சார் நீங்க வேணா பாருங்க இந்த ப்ரோக்ராம்க்கு அப்புறம் நிங்களும் டிடி பேனா மாறிடுவிங்க என்று கூறினான் .அடே நான் எப்பவோ அவ கிட்ட விழுந்துட்டேன்டா என்று நினைத்து கொண்டு சரி போதும் டிடி புகழ் போய் தூங்குயா என்று அவனிடம் நடித்தான் .
பின் அவன் போன் வைத்ததும் துள்ளி குதித்தான் .பின் ஓடி சென்று கம்ப்யூட்டரில் ஓடி கொண்டு இருந்த டிடியின் முகத்தை தொட்டு தொட்டு கொஞ்சினான் .செல்லம் நாளைக்கு உன்ன பாக்க வரேன் என்று நினைத்து கொண்டு சந்தோசமாக தூங்கினான்
தொடரும்