Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ராஸ் டெய்லர் 25 பந்துகளில் அதிரடியாக விளையாடி 2 பௌண்டரி 3 சிக்ஸர்கள் விளாசி 37 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியின் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சாஹலின் 2.4 ஓவர்களில் 32 ரன்களை குவித்தது நியூசிலாந்து.
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 212 பந்துகள் மீதமுள்ள நிலையிலேயே வெற்றியை சுவைத்தது நியூசிலாந்து. இதற்கு முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு நடந்த ஒருநாள் போட்டியொன்றில் இலங்கை அணி 209 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றியை சுவைத்தது.
அந்த வகையில் இந்திய அணி வரலாறு காணாத வகையில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
[Image: _105409800_gettyimages-1125584174.jpg]படத்தின் காப்புரிமைGETTY IMAGESImage captionகோப்புப் படம்.
நியூசிலாந்தின் ஹேமில்டன் நகரில் நடக்கும் இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 92 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கெனவே முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, நான்காவது போட்டியில் தற்போது விளையாடியது. இந்தப் போட்டியில் அணித் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் ஷர்மா கேப்டனாக இந்தப் போட்டியில் விளையாடினார். கோலிக்குப் பதிலாக பேட்டிங் வரிசையில் அவரது இடத்தில் 19 வயது இளம் வீரர் ஷுப்மன் கில் புதிய பேட்ஸ்மேன் ஆக அறிமுகம் செய்யப்பட்டார்.
தோனிக்கு உடல் நிலை இன்னும் போதிய அளவு முன்னேறாததால் அவரும் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. முகமது ஷமிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்குப் பதில் கலீல் அகமது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தியத் தரப்பில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 02-02-2019, 09:29 AM



Users browsing this thread: 99 Guest(s)