07-01-2020, 03:11 PM
(07-01-2020, 10:14 AM)naughty2hotty Wrote: இந்த பகுதி மேகாவின் பார்வையில்.
கடந்தகாலம் தொடங்கி நிகழ் காலம் வரை
“மேகா அவங்க உயிர் வாழணும்னா நீ ப்ரோப்லேம் பண்ணாம ஒழுங்கா வா. டாடிக்கு கோவம் வந்தா என்ன நடக்கும்னு உனக்கு தெரியும். ஐ வில் கில் தேம் போத். யு ஹவ் 5 செகண்ட்ஸ்”
எனது அப்பா எனக்கு வெறும் 5 நொடி கொடுத்து இருந்தார். 5 நொடி முடிவதற்குள் நான் போகவில்லை என்றால் அவர்கள் இருவரையும் கொன்றுவிடுவார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அருண் என் கணவன் என்பதை யாராலும் மாற்ற முடியாது என்பது எனக்கு தெரியும். உயிரின் பிரிவை விட இந்த தற்காலிக பிரிவு ஒன்றும் கொடியது அல்ல என்பதால் “லிவ் டு பைட் அனதர் டே” என்று அழுது கொண்டே சொல்லிவிட்டு இறங்கினேன்.
“பாப்பா இறங்கிட்டாங்க” என்று சொல்லி கொண்டே ஒரு குண்டன் என் கூடவே வந்தான் மற்ற அனைவரும் கார்த்திக் அருண் இருவரையும் சுற்றி வளைத்தனர்.
“மேகா டாடி பேச்சை கேட்டு இறங்கி வந்ததுக்கு தேங்க்ஸ் டியர். நான் எப்படி இவளோ பெரிய பதவிக்கு வந்தேன் தெரியுமா. ஒரு விஷயத்தை கையில எடுத்தா அதை வெற்றிகரமா முடிச்சிடுவேன், வித்தவுட் எனி கம்பரோமைஸ். ஆனா என்னோட பொண்ணு கல்யாணத்தை முடிக்க முடியல பாரு டியர். நீ என்னடானா ஓடி போய் அவனை திருட்டு கல்யாணம் பண்ணிகிட்டே. ஐ லாஸ்ட் டு காப்பில் ஒப் கிட்ஸ், எவளோ அசிங்கமா போச்சு தெரியுமா. அதுக்கு இப்போ என்ன பண்ணலாம்”
“டாட் யூ ப்ரோமிஸ்ட் தட் யு வோண்ட் ஹார்ட் தெம்”
“நோ டியர். நீ வரலைன்னா ரெண்டு பேரையும் கொன்னுடுவேன்னு சொன்னேன். நீ வந்துட்டே சோ ஐ திங்க் ஒன் சுட் பி எனப். லவ் பண்ணுற பையனா வேணுமா இல்லை அவனுக்காக எதையும் செய்யுற பிரெண்டா. யு ஹாவ் 5 செகண்ட்ஸ்”
5
4
“டாட் பிலீஸ் நோ” கதறி அழுதேன்.
3
2
1
“நானே சூஸ் பண்ணிக்கவா டியர். உனக்கு தாலி கட்டியவனை நான் பார்த்ததே கிடையாது. ஆனா என் கண்ணுல விரலை விட்டு ஆடிட்டு உன்னை தூக்கிட்டு போனவனை என்னாலே மறக்கவே முடியாது”
“டாட் பிலீஸ்…”
“மேகா மேகா..” தூரத்தில் அருண் கத்தினான்.
“என் கண்ணுல மண்ணை தூவினவன் உயிரோடு இருக்கவே கூடாது. டேய் பாப்பாவை தூக்கிட்டு போனவன் கதையை முடி. இன்னொருத்தன் உயிர் மட்டும் இருக்கணும். என்ன புரியுதா”
“ஹ்ம்ம் புரியுது ஐயா”
“டாட் நோ….”
அந்த குண்டன் காரை சுற்றி வளைத்த குண்டர்களிடம் சிக்னல் கொடுக்க இவன் நான் பார்க்காதவாறு மறைத்து கொண்டான்.
“கார்த்திக் ஓடிடு” என்று சத்தமாக கத்தினேன்.
“மேகா” அருணின் குரல்.
“கார்த்திக் ஓடுடா”
“மேகா” மீண்டும் அருணின் குரல்.
“டுமீல்” துப்பாக்கி சுடும் கேட்டது.
“கார்த்திக்…. டேய் அவனை ஏண்டா சூட் பண்ணீங்க” அருணின் ஓலம் கேட்டது.
குண்டன் நான் உட்கார்ந்து இருந்த காரை கிளப்ப கார்த்திக் அங்கே காருக்கு வெளியே பிணமாக கிடந்தான். அருணை காரில் இருந்து வெளியே இழுத்தனர்.
“அருண்..”
“மேகா..”
“அருண்…”
இருவரின் ஓலமும் அந்த குண்டர்களை ‘அசரவைக்கவில்லை. அருணை வெளியே இழுத்து அடிக்க தொடங்கினர்.
“அருண்…”
“அருண்…”
பார்வையில் இருந்து மறையும் தூரம் சென்று இருந்தேன். வீட்டிற்கு வருவதற்குள்ளாக அழுதழுது கண்ணீரே வறண்டு போய் இருந்தது.
“மேகா திரும்பி அந்த பய்யன் அருண் கூட சேரணும்னு முடிவு பண்ணினா அவனையும் கொன்னுடுவேன்” என்று அப்பா என்னை மிரட்டி வீட்டில் அடைத்து வைத்தார். அருணுடன் மீண்டும் எப்படியும் ஒன்று சேருவேன் என்கிற அந்த ஒரு நம்பிக்கை தான் என்னை தற்கொலையை செய்ய விடாமல் சென்றது. நாட்கள் கடக்க, அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்கிறேன் என்று சொல்லி அவர்களின் சொல்பேச்சை கேட்க ஆரம்பித்தவுடன் வீட்டிற்குள்ளே நடமாட இடம் கிடைத்தது. அந்த நேரத்தில் நான் ஆஃப்லை செய்த ஒரு அமெரிக்கன் யூனிவெர்சிடியில் அட்மிசன் கிடைக்க என்னுடைய கசின் உதவியுடன் லண்டனில் நான் முன்பு ஆஃப்லை செய்த கல்லாரியில் சேர போவதாக பொய் சொல்லிவிட்டு லண்டன் வழியாக அமெரிக்கா வந்து வேலை பார்த்து கொண்டே படிக்க தொடங்கினேன்.
இந்தியாவில் நடப்பதை எல்லாம் என்னுடைய கசின் எனக்கு அவ்வப்போது ஈமெயில் அனுப்புவாள். அருண் காம்பஸ் இன்டெர்வியு கிடைத்த அந்த அமெரிக்கா நிறுவனத்தில் பணியை தொடரவில்லை என்றும் அவன் அம்மாவுடன் பெங்களூரில் இருப்பதும் எனக்கு தெரிய வந்தது. அருணை பார்க்கும் ஆர்வம் இருந்தாலும் அப்பாவின் ஆட்கள் அருணை நோட்டமிட்டு கொண்டு இருப்பர் என்று பயந்தே இந்தியா வரவில்லை. கார்த்திக்கின் அப்பாவும் ஓரளவு செல்வாக்கு படைத்தவர் என்பதால் தன்னுடைய மகனை கொன்ற எனது அப்பாவை பழிவாங்க நினைக்க ஒரு காங்வாரே உண்டானது. கடைசியாக கார்த்திக்கின் அப்பா வெற்றி கொண்டார்.
அப்பாவிற்கு பயந்து அமெரிக்காவில் பதுங்கி இருந்த நான் அவர் இறந்தவுடன் என் அருணை பார்க்க ஆர்வமாக இந்தியா வந்திறங்கி பெங்களூரு சென்று அவனை காபி சாப் அருகில் பார்த்த போது அவன் என்னை பேச கூட விடவே இல்லை. அவன் கிட்ட தட்ட என்னை மறந்தே போய் இருந்தான். அன்று சாயங்காலம் அவனிடம் மீண்டும் பேச வரும்போது தான் அவன் இன்னொரு பெண்ணை பைக்கில் கொண்டு செல்வதை பார்த்தேன். எனக்கு அழுகையாக வந்தது.
என் கசின் தான் என்னை தேற்றினாள் “இங்கே பாரு மேகா. கல்யாணம் ஆன ஒரு நாளில் விட்டு போய் திடிர்னு வந்து நின்னா அருண் என்ன பண்ணுவான். அவனை பொண்ணுங்க சுத்துறது எல்லாம் சகஜம் தான் மேகா. மேன்லியா ஸ்மார்ட்டா இருக்க அவனை சுத்தாம இருக்கிறது தான் ஆச்சர்யம். நீங்க ரெண்டு பேரும் வச்சி இருக்கிறது ட்ரு லவ். ட்ரு லவ் ஆல்வேஸ் வின்ஸ. கிவ் ஹிம் சம் டைம். அது வரைக்கும் என் கூட சென்னை வா” என்று என்னை தேற்றினாள்.
எனக்கு தான் இருப்பு கொள்ளவில்லை என்னுடைய கசினுக்கு தெரியாமல் ஒரு பிரைவேட் டிடெக்ட்டிவ் வைத்து அருணுடன் இருந்த அந்த பெண் பெயர் நிவேதா என்றும் அவளுக்கு கல்யாணம் ஆகியது பற்றி எல்லாம் தெரிய வர ஒருவேளை என்னை மறந்து வேற ஒரு பெண்ணை அருண் காதலிக்க தொடங்கிவிட்டான் என்று நினைத்துக்கொண்டு இருந்த எனக்கு இது வெறும் கள்ள தொடர்பு என்று தெரிய வந்தது. சக்களத்தி அவளை கையும் களவுமாக பிடித்து திட்டி தீர்த்து அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து மீண்டும் பெங்களூரு வந்தேன்.
அருண் அவளை பைக்கில் ஏற்றி கொண்டு போக அவன் பின்னாடி பாலோ பண்ணி சென்றேன். பிறகு கதவை தட்டி அவனிடம் பேச முயற்சி செய்த போது தான் “அருண் இப்படி கட்டி போட்டுட்டு எங்கேடா போய்ட்டே” என்கிற அந்த பெண்ணின் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்தேன்.
“மேகா இது உனக்கு தேவை இல்லாதது” என்னை நிறுத்தினான்.
“நீ ஒழுங்கா வழிவிடு” அவனை நகர சொன்னேன்.
“மேகா ஸ்டாப் இட். உள்ள கார்த்தி அவளை மேட்டர் பண்ணிட்டு இருக்கான்”
“என்னது கார்த்தியா” அதிர்ச்சி ஆனேன்.
“....” அவன் ஒன்றும் பேசாமல் அதிர்ச்சியாக இருந்த என்னுடைய முகத்தையே பார்த்து கொண்டு இருந்தான்.
“கார்த்திக் அருண் அப்போவே செத்துட்டான் அருண். எங்க அப்பாவோட ஆளுங்க ஷூட் பண்ணிட்டாங்க”
“எங்க அம்மா செத்துட்ட அப்புறம் வாழ புடிக்காம சூசைட் பண்ணிக்க போனப்போ அவன் தான் என்னை தடுத்து நிறுத்தினான்”
“என்னடா சூசைடா ஏதேதோ பேசுறே”
“கடைசியா ஆதரவுன்னு இருந்த அம்மாவும் இறந்தப்போ. எனக்கு வாழவே பிடிக்கல. அப்போ சூசைட் பண்ணிக்கலாம்னு போனப்போ தான் அவன் வந்து தடுத்து நிறுத்தி மேகா போனதுக்காக நீ ஏன்டா சூசைட் பண்ணனும், அவ இல்லேன்னா ஆயிரம் பொண்ணுங்க நான் யாரை எப்படி கரெக்ட் பண்ணனும்னு சொல்லி தரேன்னு” கார்த்தி வந்தான்.
“என்னடா சொல்லுறே”
“இங்க பாரு அவனே வந்துட்டான்” என்னை பார்த்து சொல்லவிட்டு “கார்த்தி என்னடா முடிஞ்சதா” என்று யாருமே இல்லாத இடத்தை பார்த்து பேசி கொண்டு இருப்பதை பார்த்து அழுகையாக வந்தது.
எக்கச்சக்கமாக காசை கொட்டி கஷ்டமேதும் படாமலே கடமைக்கு படித்துவிட்டு அப்பாவின் பிசினஸை கவனிக்க போகும் மாணவர்களுக்கு இடையில் கஷ்டபட்டு வந்த அருணின் வெற்றிக்கு நான் பக்கபலமாக நின்று என்னால் ஆன உதவியை செய்ய வேண்டும் என்கிற முதலில் தொடங்கிய அந்த நினைப்பு தான் போக போக காதலாக மலர்ந்தது. யாருக்கு பக்கபலமாக நின்று வெற்றிக்கு பின்புலமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேனோ அவனுக்கு என்னை காதலித்ததால் இந்த நிலைமை ஏற்பட்டு விட்டதே என்று அழுகையாக வந்தது.
அழுதுகொண்டே நான் வேகமாக சென்று கட்டிலில் கட்டி இருந்த நிவேதாவின் கட்டை அவிழ்த்து விட்டேன். உடைகளை மாட்டிக்கொண்டு அவள் என்னை பார்த்து “காஃபீ ஷாப்ல நீ தானே பேசிட்டு இருந்தே. நீ தான் மறைக்க நினைக்குற பாஸ்டனு சொல்லிட்டானே ” என்று கேட்டாள்.
“இங்க பாரு நிவேதா. நான் அருணோட வைப். எங்க ரெண்டு பேரோட பெர்சனல். நீ அடிக்கிற கூத்தை எல்லாம் உன்னோட புருஷன் கிட்ட சொல்லவா” அவளை பார்த்து கோவமாக கேட்டேன்.
அதன் பிறகு அவள் ஒன்றும் பேசாமல் இது எல்லாம் எனக்கு எப்படி தெரியும் என்று என்னை ஒரு மாதிரி பார்த்து கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்.
“அவளை ஏண்டி இப்போ போக சொன்னே. கார்த்தி கடுப்பா ஆக போறான். உனக்கு என்ன தாண்டி வேணும். திரும்ப இப்போ நீ என் வந்தே” என்னிடம் கோவமாக கத்தினான்.
“ப்ளீஸ் அருண். தெரிஞ்சா தெரியாமலோ நீ எனக்கு தாலி கட்டிட்டே. ஜஸ்ட் ஒரே ஒரு நாள் மட்டும் நான் சொல்லுறதை கேளு அதுக்கு அப்புறம் நான் ”
“...” அவன் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டு இருந்தான்.
“ப்ளீஸ் அருண்.”
“சரி”
நேரடியாக அவன் ஹாஸ்பிடல் கூட்டி சென்று டாக்டரிடம் தனியாக விஷத்தை சொல்ல டாக்டர் அவனை மயக்க நிலைக்கு கொண்டு போய் பரிசோதித்து விட்டு என்னை ரூமுக்கு கூட்டி வந்தார்.
“அருண் ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia) அப்படிங்குற மனசிதைவு நோயால பாதிக்க பட்டு இருக்காரு”
“அப்படின்னா என்ன டாக்டர்”
“எது நிஜம் எது கற்பனை அப்படின்னே வித்யாசம் சொல்ல தெரியாது. அவங்களே கதாபாத்திரத்தை கற்பனை பண்ணி பேசிட்டு இருப்பாங்க. நிலைமை மோசமான ஒரு சில பேரு அவங்களுக்குன்னு ஒரு தனி கற்பனை உலகத்தையே உருவாகிப்பாங்க”
“...” ஒன்றும் புரியாமல் முழித்தேன், அதை புரிந்து கொண்ட டாக்டர்.
“உனக்கு புறியுற மாதிரி சொல்லுறேன்மா. தலைவலிச்சா என்ன பண்ணுவீங்க”
“ஹ்ம்ம் டேப்லெட் போடுவேன்”
“குட், அந்த டேப்லெட் என்ன பண்ணும்னு தெரியுமா”
“நோ”
“டேப்ளேட்ல இருக்க கெமிக்கல்ஸ் உங்களோட மூளைல இருக்க வலிய உணர வைக்கிற பைன் ரெசெப்டர தற்காலிகமா ஸ்டாப் பண்ணிடும்”
“ஹ்ம்ம்”
“நாம பாக்குறது பீல் பண்ணுறது எல்லாம் மூளை நமக்கு தர சிக்னல்ஸ் தான். அந்த சிக்னல் பால்ட் ஆயிடுச்சுன்னா இருக்குறது இல்லாம போகும். இல்லாம இருக்கிறது கண்ணுக்கு தெரியும்”. எனக்கு அழுகையே வந்தது.
“இதுக்கு என்ன காரணம் டாக்டர்”
“ஜெனெடிக்ஸ், அதீத தனிமை இல்லைன்னா ரொம்ப க்ளோஸ் ஆனவங்களோட டெத் கூட ரீசனா இருக்கலாம். நம்ம ஊருல இருக்க கிராமங்களல்ல எல்லாம் ஏதாச்சும் சாவு விழுந்தா கும்பலா கூடி ஒப்பாரி விட்டு அழுவாங்கா அது துக்கத்தில் இருக்கவங்களோட ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கும். இப்போ அழறதுக்கு கூட யாருக்கும் டைம் கிடையாது. பீர் ப்ரெஸ்ஸார், ஒர்க் ப்ரெஸ்ஸார்னு எக்க சக்க பிரச்னை எல்லாம் போட்டு மனசுல வச்சி புழுங்கிட்டு இருந்தா ப்ரைன் வேற என்ன பண்ணும்.”
எனக்கு இப்போது ஓரளவுக்கு விளங்கியது. கார்த்திக் அருண் கண்ணெதிரே சுட்டு கொல்லப்பட்டது அவன் மனதில் நீங்கா துயர் ஆகி இருக்க வேண்டும். அவன் அம்மாவின் அரவணைப்பு இருந்தவரை அவனால் இந்த உலகை ஏற்று கொள்ள முடிந்தது. அம்மா இறந்த பிறகு இவனே கார்த்திகை கற்பனையில் உருவாக்கி கொண்டு இருக்கிறான்.
“இப்படி ஒரு வியாதி இருக்குன்னு அருண் கிட்ட சொல்லலாமா”
“ஓஹ் எஸ். நிறைய பேசண்ட்ஸ் ஆரம்பத்துல மறுத்து உண்மையா அக்செப்ட் பண்ணிகிட்டு வாழ காத்துக்கிட்டவங்க நிறைய பேரு”
“அப்போ இதை குணமாக்க முடியுமா டாக்டர்”
“இதுக்கு மருந்து மாத்திரை எல்லாம் கிடையாது அன்பும் அரவணைப்பும் தான் மருந்து. அமெரிக்கால ஜான் நாஷ் அப்டிங்கறவரு இந்த வியாதியை வச்சிக்கிட்டு நோபல் ப்ரைஸ் கூட வாங்கி இருக்காரு. சோ எனிதிங் இஸ் பாசிபிள். டோன்ட் லூஸ் ஹோப்”.
“தேங்க்ஸ் டாக்டர்”
பக்கத்து ரூமில் அருண் மயக்கம் தெளிந்து படுத்து இருந்தான்.
“மேகா. நான் எப்படி பெட்ல வந்தேன்”
“லேசா மயக்கம் ஆகிட்டே அருண். நத்திங் டு ஒற்றி. முதல் முதல்ல என்னை வச்சி ப்ரோபஸ் பண்ணியே ஒரு இடம் ஞாபகம் இருக்கா”
“ஹ்ம்ம்”
“அங்கே என்னை கூட்டி போறியா”
“இப்போவா”
“ஹ்ம்ம்”
அங்கிருந்து கிளம்பி விடியற்காலையில் அருண் என்னை முதன் முதலாக காதலை சொல்லி முத்தம் கொடுத்த அந்த இடத்திற்கு சென்றோம்.
“ஐ லவ் யு அருண்” கட்டி பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்தேன்.
“நான் உன்னை அன்னைக்கு விட்டு போயிருக்க கூடாதுடா. இனிமேல் எப்பவுமே உன்னை விட்டு போக மாட்டேன்” அவனின் கையை கோர்த்துகொள்ள சூரியன் உதித்தது.
“அருண், என் கூட வா” என்று அவனை அங்கிருந்து கூட்டி கொண்டு என்னுடைய கசினின் அபார்ட்மெண்டிற்கு கூட்டி போனேன். கதவை திறந்தவள் எங்கள் இருவரையும் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு ஜாகிங் போவதாக சிக்னல் செய்துவிட்டு சென்றாள்.
“மேகா இங்கே எதுக்கு கூட்டி வந்தே” அருண் கேட்டான்.
“வா” என்று பெட்ரூம் உள்ளே கூட்டி போனேன்.
அங்கே தூங்கி கொண்டு இருந்த குழந்தையை பார்த்து யார் என்று கேட்டான் அருண்.
“உன் குழந்தை.. நம்மோட குழந்தை. இவன் எங்க அப்பா கண்ணுல பட கூடாதுன்னு நான் அமெரிக்காவில் ஓடி ஒளிஞ்சிகிட்டேன். நான் உன்னை பிரிஞ்சி இருந்தாலும் உன்னை நினைக்காத நாளே கிடையாது அருண்” சொல்லும் போதே என் கண்கள் கலங்க அருண் துடைத்துவிட்டான்.
சத்தம் கேட்டு குழந்தை எழ என்னை பார்த்தவுடன் “மம்மி” என்று ஓடி வந்தான்.
பக்கத்தில் நின்ற அருணை பார்த்து இது யாரு மம்மி என்றான் “நான் தான் உன்னோட டாடி” என்று அருண் அவனை தூக்கி எக்கச்சக்கமாக முத்தமிட்டான். முத்தமிட்டு கொண்டு இருக்கும் போதே அவனுக்கு அழுகை பீறிட்டு வர என் மகன் அவன் கண்ணை துடைத்து விட்டு “நான் இருக்கப்போ நீங்க எதுக்கு அழறீங்க” என்றான்.
“அழமாட்டேண்டா கண்ணா.. உன்னோட பேரு என்ன”
“கார்த்திக்”
அருணுக்கு மீண்டும் கண்ணீர் வந்தது.
அருணுக்கு நண்பன் கார்த்திக்கின் இழப்பால் வந்த மனசிதைவு நோய் மகன் கார்த்திக்கின் வரவால் குணமாகிவிடும் என்று தோன்றியது. அவர்கள் இருவரையும் கட்டிக்கொள்ள என்னையும் அறியாமல் ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் உருண்டு ஓடியது.
[சுபம்]
Bro Kannu kalangiduchi bro semma end