07-01-2020, 01:04 AM
நிஷா....
எனக்கு வேலை இருக்கு சீனு... - சொல்லிவிட்டு வேகமாகப் போய்க்கொண்டே இருந்தாள். சீனு திகைத்தான். ஸ்வீட் பாக்ஸ்களை அங்கேயே வைத்துவிட்டு, போனான்.
அடுத்து பார்வதியை பார்க்கும்போது, என்னைக்கு வேலைக்கு போறானாம்?.. என்று கேட்டாள்.
இன்னும் இரண்டு நாள் கழிச்சி... வியாழன்லேர்ந்து....
அடுத்தடுத்த நாட்களிலும் நிஷா சீனுவை நிராகரிக்க... சீனு உடைந்தான். வியாழன் வந்தது. ஸ்கூலுக்கு கிளம்பி, வண்டியை எடுக்கும்போது பார்வதி தென்படுகிறாளா என்று பார்த்தாள். யாரும் இல்லை. ஸ்கூலுக்கு போனபின், பத்து மணிவாக்கில் பார்வதிக்கு போன் பண்ணினாள்.
அத ஏம்மா கேட்குற... அவன் வேலைக்குப் போகமாட்டேன்னு சொல்லிட்டான்.
ஏ..ஏன்???
தெரியலையே... பிடிக்கல.. பிடிக்கலன்னு சொல்றான். நீ முன்னமாதிரி அவன்கிட்ட பேசுறதில்லைன்னுதான்.... நான் உன்கிட்ட சொல்லல.
நிஷாவுக்கு பக்கென்றானது. இந்த பைத்தியக்காரன் ஏன் இப்படி இருக்கிறான்? உடனே ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். கதவு திறக்கும் சத்தம்கேட்டு பார்வதி வந்தாள். சீனுவை வீட்டுக்கு வரச்சொல்லுங்க... என்றாள்.
சீனு வாடிய முகத்துடன் வந்தான். இவள் முடியை முன்னால் போட்டுக்கொண்டு, விரலில் பேனாவை சுற்றிக்கொண்டு ஸ்டைலாக நின்றாள்.
துரை ஏன் ஆபிஸ் போகலை?
பிடிக்கல. போகல. - வேறுபக்கம் பார்த்துக்கொண்டு சொன்னான்.
ஏன்?
பிடிக்கல.
அதான் ஏன்னு கேட்குறேன். - கத்தினாள்.
இந்த வேலை உன்னாலதான் கிடைச்சது. உன் ரெக்கமண்டேஷனால கிடைச்சது. இன்டெர்வியுல நீ சொல்லிக்கொடுத்தத பேசுனதுனால கிடைச்சது. உனக்குத்தான் என்ன பிடிக்கலையே. அப்புறம் உன்னால கிடைச்ச வேலை எனக்கு எதுக்கு?
அறிவில்லாம பேசாதே... போய் கிளம்பு
நீ பழையபடி சந்தோஷமா பேசினாத்தான் கிளம்புவேன். நான் இதுல உறுதியா இருக்கேன்.
சந்தோசமா பேசுறமாதிரியா நீ நடந்துக்கிட்ட?
சீனு அவளை பார்த்தான். அவள் இவனையே முறைத்துக்கொண்டிருந்தாள்.
அது... அன்னைக்கு.. எதிர்பாராம.......
நீ பண்ணது தப்பா இல்லையா... அத சொல்லு
தப்புதான்... அதான் பலதடவை ஸாரி கேட்டேன்ல.... ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி ஸாரி நிஷா... - சீனு கெஞ்சியபடியே போய் அவள் கைகளைப் பிடித்தான். ப்ளீஸ்.. இனிமே இப்படிப் பண்ணமாட்டேன்.
ப்ச்... விடு.. - அவள் கைகளை உதறினாள்.
இப்போ ஏன் இவ்ளோ பிகு பண்ற? நானா உன்கூட படம் பாக்கணும்னு வந்தேன். நீங்கதான கூப்பிட்டீங்க. இப்போ இப்படி சிலிர்த்துக்கற? - அவனைவிட்டு விலகிப்போன அவளை, கையைப் பிடித்து... நிறுத்தினான்.
நாங்க கூப்பிட்டோம்தான்... அதுக்காக என்னனாலும் பண்ணலாமா? - அவள் சூடாகக் கேட்டாள்.
நான் என்ன பண்ணேன்? நல்ல பிள்ளையாதானே பாப்கார்ன் சாப்பிட்டேன்
நீ பாப்கார்ன் சாப்பிட்ட லட்சணம்தான் தெரியுமே