Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பேரன்பு

[Image: 201902011222357338_Peranbu-Movie-Review-...MEDVPF.gif]நடிகர்மம்முட்டிநடிகைஅஞ்சலிஇயக்குனர்ராம்இசையுவன் ஷங்கர் ராஜாஓளிப்பதிவுதேனி ஈஸ்வர்
விமர்சிக்க விருப்பமா?மனைவி ஓடிப்போனதால், முடக்கு வாதத்தால் அவதிப்படும் தனது குழந்தை சாதனாவை பார்த்துக்கொள்ள இந்தியா வருகிறார் மம்முட்டி. இங்கு வந்த பிறகு தான், தனது குடும்பத்தினருக்கே தனது மகள் தொந்தரவாக இருப்பதை உணர்கிறார். இதையடுத்து சாதனாவை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளிப்புறத்தில், இயற்கை சூழலில் இருக்கும் ஒரு வீட்டிற்கு செல்கிறார்.

தாய் பாசத்தால் ஏங்கும் சாதனாவின் அனைத்து தேவைகளையும் ஒரு தந்தையாக நிறைவேற்றி வைக்கவும் முயற்சிக்கிறார். தேனப்பனும், ஜே.எஸ்.கே சதீஷும் மம்முட்டி குடியிறுக்கும் வீட்டை அபகரிக்க முயற்சிக்கிறார்கள்.

[Image: 201902011222357338_1_Peranbu-Review5._L_styvpf.jpg]


இந்த நிலையில், மம்முட்டி வீட்டிற்கு வேலைக்காரியாக வரும் அஞ்சலி, சாதனாவை தன் பெண்ணாகவே கவனித்துக் கொள்ள ஆரம்பிக்கிறார். இதற்கிடையே மோசடி மூலம் தேனப்பன் மம்முட்டியின் வீட்டை எழுதி வாங்கிவிடுகிறார். வீட்டை இழந்த நிலையில், சாதனாவுடன் சென்னை திரும்புகிறார் மம்முட்டி.

பரபரப்பாக இயங்கும் சென்னை சூழலில் மம்முட்டி தனது குழந்தையை எப்படி கவனித்துக் கொள்கிறார்? குழந்தையின் தேவையை நிறைவேற்ற அவர் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? அதில் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தார்? என்பதே பேரன்பின் மீதிக்கதை.

[Image: 201902011222357338_2_Peranbu-Review6._L_styvpf.jpg]


10 வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான கதையின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் மம்முட்டிக்கு வாழ்த்துக்கள். மலையாளத்தில் மாஸான நடிகராக இருக்கும் மம்முட்டி இதுபோன்ற ஒரு படத்தில் நடித்தது அவரது தரம் மற்றும் நற்சிந்தனையை காட்டுகிறது. ராமின் தேவையை ஒரு சாதாரண அப்பாவாக மம்முட்டி நிறைவேற்றி வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். தனது குழந்தையின் தேவையை பூர்த்தி செய்யும், தனது மகள் படும் கஷ்டங்களை பார்த்து வேதனைப்படும் ஒரு தந்தையின் உணர்வுகளை அப்பட்டமாக பிரதிபலித்திருக்கிறார்
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 01-02-2019, 05:41 PM



Users browsing this thread: 8 Guest(s)