01-02-2019, 05:14 PM
(This post was last modified: 01-02-2019, 05:16 PM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
BREAKING NEWS: ``தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிப்பு” # Budget2019 #LiveUpdates
பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்!
- ஒரு ஆண்டுக்கான தனிநபர் வருமான வரிவரம்பு 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும். தவிர மத்திய நிதியமைச்சகம், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் புகழ்வாய்ந்த நதிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இருக்கிறது. இது குறிப்பிட்ட காலக்கெடுக்குவுக்குள் நடைபெறும் என நம்புகிறேன் - நிதின் கட்கரி
- மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 450 புள்ளிகளும், நிஃப்டி 130 புள்ளிகளும் உயர்வு.
- ``மீனவர் நலனுக்காக மீன்வளத்துறை ஏற்படுத்தப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கக்கூடியது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு, மீனவர்களின் வாழ்நாளில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இன்று. மத்திய பாஜக அரசுக்கு இது இறுதி பட்ஜெட்டா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும், எதிர் கட்சிகள் அல்ல” -தமிழக அமைச்சர் ஜெயக்குமார்.
- இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் திங்கள்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
- தனிநபரின் ஆண்டு வருமானத்தில் நிரந்தர கழிவு, 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக அதிகரிப்பு. 6.25 லட்சம் வரை வருமானம் பெறுவோர் கூட, வரி செலுத்த வேண்டிய தேவை இருக்காது.
- தனிநபர் ஆண்டு வருமானம் 6.5 லட்சமாக இருந்தால், 1.5 லட்சம் ரூபாயை பிபிஎஃப் போன்ற சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரியில் விலக்கு கிடைக்கும்.
- டெபாசிட்டில் கிடைக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலான வட்டிக்கு இனி வரிப்பிடித்தம் இல்லை
- வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை, இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும்.
- வீட்டு வாடகைக்கான வரி விலக்கு வரம்பு, ரூ. 1.8 லட்சத்திலிருந்து ரூ. 2.4 லட்சமாக உயர்வு.
- வங்கி, அஞ்சலங்களில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான வரிக்கழிவு 40 ஆயிரம் ரூபாயாக உயர்வு. 2-வது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும்.
- நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டே, வருமானவரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வருமான வரிச்சலுகை அளிக்கப்படுவது மரபு இல்லை.