சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#4
“பசங்க இருக்காங்க இல்லையா மேடம், அவங்க முகத்தை பார்த்தாவது சந்தோஷத்தை தேடுங்க, அவங்க வாழ்கையை மனசுல வெச்சி வாழுங்க, இருக்குற கஷ்டங்களை மறக்க ஒரே வழி அது ஒண்ணுதான். என்னையும் உட்பட இங்கே இருக்குற பலருக்கு நீங்க தான் மேடம் ரோல் மாடல். எவளவோ புரட்சிகரமான books படிக்குறீங்க, practical ஆ நடந்துகுறீங்க. தெருவுலயும், office லயும் ஒரு பையன் உங்க கிட்ட வால் ஆட்ட மாட்டான். யாரும் அனாவசியமா நெருங்கினாலும் நீங்க குடுக்குற பதிலடியில அடுத்த தடவ உங்க கிட்ட அவசியம் இல்லேன்னா வர க் கூடாதுன்னு மனசுல பயப்புடற அளவுக்கு ஒரு பொம்பளைய இருந்துகுட்டு எப்படி உங்களால இப்படியெல்லாம் முடியுதுன்னு வங்கி முழுக்க இருக்குற நாங்க அசை போடாத நாளே இல்லை. கிட்ட தட்ட உங்க குடும்பத்துக்கு நீங்கதான் ஆம்பளை சங்கீதா மேடம். காலம் போக போக எல்லாம் சரி ஆகும் கவலை படாதீங்க.

“அப்படித்தானே நானும் நினைக்குறேன் ஆனா குடி பழக்கம் இன்னும் நிக்கலை, நீ பசங்க முகத்தை பார்த்து சந்தோஷ பட சொல்லுற ரம்யா, ஆனா இந்த ஆளு குடிச்சிட்டு வந்த பிறகு பேசுற பேச்செல்லாம் கேட்டுட்டு அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்மா னு என்னை பாவமா கேட்க்குதுங்க, ஏன் நான் அழுவுறேன்னு கேட்க்குதுங்க, இதுக்கெல்லாம் நான் அதுங்க முன்னாடி நடிச்சி சமாளிச்சி தூங்க வெச்சி அடுத்த நாள் காலைல ஸ்கூல் கு பத்திரமா அனுப்பி வெச்சாதான் அதுங்க எதிர்காலம் நல்லபடிய வரும் ரம்யா. சில நேரத்துல இந்த ஆளை divorce பண்ணிடலாமா னு கூடதோணும், அந்த அளவுக்கு அருவெறுப்பாக இருக்கு ஆனா அதனால குழந்தைகளுக்கு எதிர்காலம் பாதிச்சிட கூடாதுன்னு வாழுறேன்.”

“எல்லாம் சரி ஆகும் மேடம் நான் கடவுள் கிட்ட வேண்டிக்குறேன் உங்களுக்காக” என்று ரம்யா சொல்ல, சங்கீதா தனது lunch box மூடி வைத்து தனது cabin க்கு சென்றாள், அங்கே ஒரு 6 feet 2 inches கு ஒரு வசீகரமான இளைஞன் இருந்தான், சங்கீதாவின் கவனம் யார் மீதும் அவ்வளவு சீக்கிரத்தில் பட்டு விடாது, ஆனாலும் அவளே ஒரு முறை அவனை ஏறெடுத்து பார்த்தாள் என்பது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது..

“வாங்க என்ன விஷயம்?”

“Cheque Deposit போடா வந்தேன் “ என்று சொல்லி ஒரு 2 கோடி க்கு cheque எழுதியவனை ஒரு முறை புருவத்தை உயர்த்தி பார்த்தாள் சங்கீதா.. அவனுடைய உடலில் ஒரு துறுதுறு பாவனை இருந்தது அவனுடைய கையெழுத்து போலவே..

“இந்தாங்க” என்று அவன் அவளிடம் cheque நீட்டியபோது cheque மட்டும் அல்லாது அவனையும் ஒரு முறை பார்த்தாள். நல்ல நிறம், தலையில் நிறைய முடி கருமையான நிறத்தில், 4 நாட்கள் shave செய்யாத தாடி. தொந்தி இல்லாத கச்சிதமான முகத்துக்கு ஏத்த பொருத்தமான உடல் அவனுக்கு. இவனை பார்க்கும் எந்த பெண்ணும் ஒரு முறையாவது இவனை மறுபடியும் திரும்பி பார்க்காமல் இருக்கா மாட்டாள். அதில் சங்கீதா மட்டும் விதிவிலக்கல்ல..

“ மேடம், உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லலாம?”– ரொம்பவும் சாதாரனமாக பேச ஆரம்பித்தான்.

“சொல்லுங்க..” மென்மையாக சிரித்தாள்...

“ உங்களுக்கு dark colour புடவைகள் நன்றாக இருக்கும், கூடவே western style ல் tights போட்டாலும் நன்றாக இருக்கும்.... ஏன் சொல்கிறேன் என்றால் உங்களுக்கு ஹிப்ஸ் ரொம்ப wide.. அதனால்தான் உங்களுக்கு tights நல்லா இருக்கும் னு சொல்லுறேன்”– பட பட வென அவன் பேசி முடித்ததும் ஒரு நிமிடம் லேசாக சிரித்து விட்டு “ நான் சொல்லுறது சரிதானே”என்றான் சங்கீதா வை பற்றி செரியாக புரியாமல்....

“ sir, if you dont mind எனக்கு அட்வைஸ் தேவை இல்லை, எனக்கு என்ன தேவை என்று எனக்கு தெரியும், இருந்தாலும் உங்க suggesstion க்கு நன்றி” என்று மென்மையாக சிரித்தே சொன்னாள், பெரிய customer கள் யாரையும் கடுமையாக பேசி விட கூடாது என்பது அவளுக்கு நன்றாக தெரியும்.

“ மேடம், தப்பா நினைக்காதீங்க, இது அட்வைஸ் இல்ல, ஜஸ்ட் சிம்பிள் dress suggesstion, நீங்க சொல்லுறதை பார்த்தா நான் என்னமோ உங்க கிட்ட flirt பண்ண நினைக்குற மாதிரி தெரியுது, ஒருத்தர் கிட்ட எதாவது ஒன்னு நல்லா இருந்தால் அதை நல்லா இருக்குன்னு சொல்லுறது என் பழக்கம், அதே சமயம் சிலது சரி இல்லேன்னா அதை ஓபன் ஆ சொல்லுறது கேட்க்குரவங்களுக்கு நன்மை சேரத்தான். எப்போதும் நாமே correct னு நினைசிகாதீங்க, மத்தவங்க எதாவது ஒரு விஷயம் சொன்னா உடனே அதை புறக்கணிக்குரதால உங்களுக்குத்தான் நஷ்டம், ஆனா அதுவே வேற angle ல யோசிச்சா, உங்களுக்கு பெனிபிட் இருக்கா னு பார்த்த அதுல நிறைய positive திங்க்ஸ் இருக்கும்”


யாரும் இது வரை இவளவு தைரியமாக சங்கீதாவிடம் open statement குடுததில்லை. மிகவும் வசீகரமான குரலில், பயம் இல்லாமல் எனக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று இவ்வளவு frank ஆக பேசுகிறான், அதே சமயம் flirt பண்ணுவது போலவும் தெரியவில்லை அவன் கண்களில், யார் அந்த இலைஞன் என்று ஒரு நிமிஷம் ஆச்சர்யமாக பார்த்தாள் சங்கீதா....

“சரி நான் கிளம்புறேன் thanks” என்று சொல்லி அவன் கிளம்பினான்.

“ஒரு நிமிஷம் சார்” என்றால் சங்கீதா....

“ sir வேண்டாம் எனக்கு வயசு 23 தான்” என்று சொல்லி அதே வசீகர சிரிப்பை தந்தான் அந்த இளைஞன்.

“ நீங்க யாரு, உங்க பேரு என்ன?”–மிகவும் ஆர்வத்துடன் கேட்டால் சங்கீதா..

“ Mr.Raghav, CEO of India one fashion international” என்று புன்னகைத்தான்..
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (madhavan) - by johnypowas - 01-02-2019, 01:09 PM



Users browsing this thread: 5 Guest(s)