காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#19
இந்த காட்சியை பார்த்த என்னால் அங்கு அதற்க்கு மேல் இருக்க முடியவில்லை. யார் யார் என்னை அழைத்தார்கள் என்று தெரியவில்லை. ஓட்டமும் நடையுமாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். நான் கொண்டு வந்த பைக் கூட எனக்கு நினைவில்லை. கண்களில் கண்ணீருடன், நடந்தேன் கால் போன திசையிலேயே நடந்தேன். நான் கடைசியாக அழுதது எனது தந்தையின் இழப்புதான், அதன் பிறகு இன்று தான் நான் அழுகிறேன். மாலை போய் இரவாக தொடங்கிய நேரம் அது. எனது அழுகையின் ஓலம் கேட்டு, நான் வரும் போது கைகள் அசைத்து வழியனுப்பியதோ என்று நினைத்த வாழை இலைகள் இப்பொழுது என்னைகண்டு எள்ளி நகையாடியது. ஒருவேளை முன்னமே அவைகள் அப்படித்தேன் செய்திருந்ததோ நான்தான் தப்பாக நினைத்தேனோ என்றதொரு உள் எண்ணம். இருபுறம் நின்ற தென்னைகள் எனக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை, இறுதி ஊர்வலத்திற்கு நான் தாயார் என்பது போல் நின்று கொண்டிருந்தது.


எப்படி நினைத்த நான் இப்பொழுது இந்த உலகமே எனக்கெதிராக சுழந்தது போன்ற ஒரு எண்ணம் என்னை ஆட்டியது. இரவில் தூரத்தில் வெளிச்சம் தெரிந்தது. நான் நடந்து சென்ற பாதையில் சாலை விளக்குகள் எதுவும் கிடையாது. அங்கு தெரிந்த வெளிச்சம் எனது கண்ணை கூசியது. எனக்கு முன்னே சற்று தொலைவில் இரு வாகன முகப்பு விளக்கு மின்னியவாறு என்னை நோக்கி வந்தது. பின்னால் அதீக ஓசையுடம் வண்டி ஹோர்ன் ஒலி எழுப்பிய வண்ணம் ஒரு மர லாரி வந்தது. வாழை இலையில் சிரிப்புகள், தென்னை கீற்றின் சலனங்கள், எதிரே வந்த வண்டியில் கண் கூசும் வெளிச்சம், பின் வந்த வண்டியில் கதை பிளக்கும் ஹோர்ன் சத்தம் இவை அனைத்திற்க்கு மேல் எனை விட்டு என்னுயிருக்கு மேல் நான் நினைத்து ஏங்கிய கலா எங்கோ பறந்து சென்றுவிட்டால் என்கிற மனவலி. நான் என்ன செய்தேன் என்று தெரிய வில்லை நினைவு கூட இல்லை. பாதங்கள் தடுமாறி கீழே விழுந்தேன் நாகர்கோயில் சாலைகள் மண் தரையில் இருந்து சுமார் ஐந்து அடி உயரம் இருக்கும், நான் சாலையிலிருந்து தடுமாறி இடப்புறமாக இருந்த பள்ளத்தில் விழுந்தேன்.



ஊப்ஸ் நன்றாக எனது தலை எதோ தட்டியது. விமானத்தில் நான் சீட்டில் இருந்து நிலை தடுமாறி முன் இருந்த சீட்டில் முட்டி கொண்டேன். இதோ நான் வந்த விமானம் இப்பொழுது திருவனந்த புரம் வந்து விட்டது. சாரிங்க, நான் இப்போ நாகர்கோவிலுக்கு ஒரு வண்டியை பிடிக்கணும். போகும் போது விட்ட இடத்தில் இருந்து சொல்லுறேன்..
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 01-02-2019, 11:06 AM



Users browsing this thread: 11 Guest(s)