Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
``கமல், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம் கூட வேணும்னேதான் வேலை பார்க்கலை!’’ - இயக்குநர் அமீர்

"அப்போ யுவனும் ஸ்பாட்ல இல்லை. இருந்திருந்தா அவர்கிட்ட சொல்லச் சொல்லியிருப்பேன். அப்போ அங்க இருந்த சவுண்ட் இன்ஜினீயர், `பயப்படாதீங்க சார், சொல்லுங்க. எதுவும் சொல்ல மாட்டார்’னு சொன்னார். நானும் தயங்கிகிட்டே சொல்லப் போனேன்."
[Image: 148498_thumb.jpg]
``இளையராஜா சார்கூட ஏற்பட்ட முதல் சந்திப்பு இன்னும் என் நினைவுல இருக்கு. மிகப் பெரிய பிரமிப்பு அது. இப்போ நினைச்சாக்கூட உடம்பெல்லாம் சிலிர்க்குது...’’ என்ற அந்தச் சிலிர்ப்போடு பேசத் தொடங்குகிறார் நடிகரும் இயக்குநருமான அமீர்.  
`` `சேது’ படத்துல உதவி இயக்குநரா வேலை பார்த்துட்டிருந்த சமயத்துலதான் இளையராஜா சாரை நேர்ல பார்த்தேன். `காண கருங்குயிலே’ பாட்டுடைய கம்போஸிங் போயிட்டிருந்தது. கொஞ்சம் தூரத்துல நின்னு அவரையே பார்த்துட்டிருந்தேன். பாட்டை முடிச்சுக் கொடுத்துட்டுக் கிளம்பிட்டார். அந்தத் தருணத்தை என்னால மறக்கவே முடியாது.’’ 
[Image: DSC_7814_14500_17249.JPG]
[color][font]



``என்னுடைய எல்லா படங்களுக்குமே யுவன்தான் இசையமைச்சிருக்கார். கொஞ்ச நாள்லே நானும் யுவனும் க்ளோஸாகிட்டோம்.  கம்போஸிங் டைம்ல யுவனுடைய ஸ்டூடியோவுக்கு அடிக்கடி போவேன். அப்போ அவருடைய வீடுதான் ஸ்டூடியோ. அப்படிப் போகும்போதெல்லாம் இளையராஜாசாரை பார்க்கிற வாய்ப்பு கிடைக்கும். அவரைப் பார்த்து வணக்கம் சொல்வேன், பதிலுக்கு அவர் வணக்கம் சொல்வார். அப்போதைய உரையாடல் அவ்வளவுதான்.’’ [/font][/color]
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 01-02-2019, 10:26 AM



Users browsing this thread: 2 Guest(s)