Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
நவநீதனுக்கு அன்று முழுவதும்  மனசெல்லாம்  ஒரு மாதிரி பாரமாக இருந்தது.  அதற்கு முதல்  காரணம் திவ்யா  அவனை விரும்புவது. அவளை அவனுக்கும் மிகவும் பிடிக்கும்தான். ஆனால்  அவள் தன் நெருங்கிய நண்பனின் தங்கையாக இருப்பதுதான் பெரும் தடையாக  இருந்தது. 

அடுத்ததாக இந்த காதல் விவகாரத்தால் அவன் மனதில் கிருத்திகா  அடிக்கடி வந்து போனாள். அவள் நினைவுகள் ஒரு பக்கம்  அவனை வாட்டி வதைத்தது. என்ன இருந்தாலும் மனசார நேசித்த கிருத்திகாவை அவனால் சுலபமாக மறக்க முடியவில்லை. அப்பறம் ஒரு பக்கம் ரேவதியின் பிரச்சினையாகிப் போன காதல். இப்படி மொத்தமாக  அவன் மனசு கலங்கிப் போயிருந்தது. இதற்கிடையில் கவிதாவுக்கும் அவனுக்குமிடையே இப்போது புதிதாக  ஏற்பட்டிருக்கும்  இந்த உடல் நெருக்கமும் அவனை ஒரு  குழப்பமான மனநிலைக்குத் தள்ளியது.

அவன் கம்பெனி விட்டு   வீட்டுக்குப் போனபோது இருட்டி விட்டது. ஆடுகள் எல்லாம் பட்டியில்  அடைக்கப்பட்டிருந்தன. அம்மா சமையல் செய்து கொண்டிருந்தாள்.  அவனைப் பார்த்ததும் சிரித்து விட்டு  காபிச் சட்டியை எடுத்து  அடுப்பில் வைத்தாள். 

அவன் உடை மாற்றிப் போய் கை, கால், முகம் கழுவி வந்து  அம்மாவிடம் அவளது பாஷையில் கேட்டான். 
'கவி எங்க? '

'அங்க' மாமா வீட்டை அம்மா கை காட்டினாள். 

முக ஈரம் துடைத்து விட்டு வெளியே போனான். மாமா வீட்டில் டிவி ஓடிக் கொண்டிருந்தது. மாமாவைக் காணவில்லை. அத்தை சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி  உட்கார்ந்து டிவியில்  சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். அமுதா கட்டிலில்  உட்கார்ந்து  எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். பையனையும், கவிதாவையும் காணவில்லை. அமுதா நிமிர்ந்து  அவனைப் பார்த்து சிரித்தாள். 

"ஹோம் ஒர்க்கா?"
"ஆமா மாமா"

அத்தை திரும்பி  அவனைப் பார்த்தாள்.
"வா நவநி"
"அவ எங்கத்த?"

"யாரு மாமா கவியா?" அமுதா கேட்டாள். 
"ம்ம்ம் "
"கடைக்கு போயிருக்கா தம்பிய கூட்டிட்டு"
"மாமா?"

அத்தை  "அவரு  எங்காவது வெட்டி நாயம் பேசிட்டிருப்பாரு. உள்ள வா"
"இல்லத்த.. நான் அப்றம் வரேன். என்ன பண்றீங்கனு பாக்கலாம்னு வந்தேன்"
"இப்ப வந்துருவா. நான்தான் கொஞ்சம் செலவெல்லாம் வாங்கிட்டு வரச் சொல்லி அவளை கடைக்கு அனுப்பினேன்"
"வரட்டும்த்த.. சும்மாதான் கேட்டேன்.  அம்மு காபி குடிக்கறியா?"
"ஏன் மாமா?"
"இல்ல. உங்கத்தை காபி வெக்குது. அதான் கேட்டேன்"
"வரேன் மாமா. எனக்கும் சேத்தியே வெக்க சொல்லுங்க.."
"சரி வா"
"அதென்னமோ இந்த புள்ளைக்கு காபின்னா எப்படித்தான் இருக்குமோ.. எத்தனை தடவை குடுத்தாலும் குடிச்சிட்டே இருக்கா" என்று அத்தை சொல்ல அமுதா எழுதிக் கொண்டிருந்த நோட்டுப் புத்தகத்தை மடக்கியபடி கட்டிலை விட்டு  இறங்கினாள். 

நவநீதன் சிரித்தபடி தன் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் காபியை  சேர்த்து வைக்கச் சொன்னான். அமுதா அவன் பின்னாலேயே வந்தாள். அவன் அம்மா பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள். அவன் சேரில் உட்கார்ந்து டிவியைப் பார்த்தபடி அமுதாவுடன் பேசிக் கொண்டிருந்தான். காபி ஆகும் முன்பே கவிதாவும் வந்து விட்டாள். அவள் தம்பியும் கூடவே வந்து விட.. அனைவருக்குமே காபியை ஊற்றிக் கொடுத்தாள் நவநீதனின் அம்மா.

அதன்பின் அமுதா அங்கேயே உட்கார்ந்து தன் ஹோம் ஒர்க்கை முடித்தாள். நவநீதனும் வெளியே போகவில்லை. கவிதா அவனுடன் ஆர்வமாக  அரட்டை அடித்தாள். கவிதா காட்டும் நெருக்கம் அவன் மனதின் குழப்பங்களைப் போக்கியது. அவனும் ஜாலியாக மாமாவின் வாரிசுகளுடன் அரட்டை  அடித்தான்..!!!

Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 04-01-2020, 10:43 AM



Users browsing this thread: 15 Guest(s)