Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மிரட்டிய போல்ட்.. கைகொடுத்த இந்திய சுழல் கூட்டணி -நியூஸிலாந்து வெற்றிபெற 93 ரன்கள் இலக்கு! #4thODI

இந்திய அணிக்கு எதிரான 4 -வது ஒருநாள் போட்டியில், நியூஸிலாந்து அணியின் போல்ட் சிறப்பாகப் பந்துவீசி இந்திய வீரர்களின் விக்கெட்டுக்ளை காலி செய்தார். இந்திய அணி 92  ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 
[Image: iccv_09390.jpg]
Photo Credit: Twitter/ICC


ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் 4 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றநியூஸிலாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக ட்ரெண்ட் போல்டின் பந்துவீச்சை எதிர்கொள்ள இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர்.  
 
தவான் 13 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து அறிமுக வீரர் கில் களமிறங்கினார். நிதானமாக ஆடிவந்த ரோகித், போல்ட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆக, இந்திய அணி திணறியது. 

[Image: bolt_09483.jpg]

Photo Credit: Twitter/ICC

அதன்பின்னர், சுப்மான் கில்லும் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர்  9 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஜாதவ், 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து பாண்ட்யா அதிரடியில் இறங்கினார். போல்ட்டின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார். அதன் பின்னர், பாண்ட்யாவும் போல்ட்டின் பந்தில் ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்களின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்குவந்தது. போல்ட் 10 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து, 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில்  4 மெய்டன் ஓவர்களும் அடக்கம். 

[url=https://www.vikatan.com/news/sports/148447-new-zealand-dominated-indian-batsmans.html#collapseOne][/url]

Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 31-01-2019, 10:52 AM



Users browsing this thread: 104 Guest(s)