31-01-2019, 10:32 AM
இந்த நன்கொடை, ஆர்.கே.டபுள்யோ டெவலப்பர்ஸ், ஸ்கில் ரிலேட்டர்ஸ் மற்றும் தர்ஷன் டெவலப்பர்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் மூலம் 2014-15 மற்றும் 2016 -17-ம் ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதன் நிகர லாபத்தில் 7.5% வரை நன்கொடை வழங்கச் சட்ட விதிகள் அனுமதிக்கிறது. ஆனால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகவோ அல்லது வழங்கும் நன்கொடையை விட குறைந்த லாபம் ஈட்டியதாகவோ இருக்கக்கூடாது.
பல்வேறு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலம் டிஹெச்எஃப்எல் குழுமம் வாங்கியுள்ள கடன் சுமார் 97,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும், இதில் வங்கிகளிடம் வாங்கிய கடன் மட்டுமே 50,000 கோடி ரூபாய் இருக்கும் என்றும் தெரிவித்துள்ள கோப்ரா போஸ்ட், நாட்டின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ-யிடமிருந்து 11,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.
எந்த ஒரு நிறுவனத்துக்குக் கடன் வழங்கும்போதும் சொத்து உத்தரவாதம் மட்டுமின்றி, கடன் பெறும் நிறுவனங்களின் தனிப்பட்ட உத்தரவாதமும் பெறப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், இந்த நிறுவனம் வாங்கிய கடன் தொகை, போலி நிறுவனங்களுக்கும், குடிசை மாற்று திட்டங்களுக்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லாமல் திருப்பி விடப்பட்டதால், அந்தக் கடனைத் திரும்ப வாங்குவது என்பது அத்தனை சாத்தியமானது அல்ல. மக்களின் பணம் ஏறக்குறைய 1 லட்சம் கோடி ரூபாய், சூறையாடப்பட்டுவிட்டதாகவே கருத வேண்டும்.
ஆனால், டிஹெச்எஃப்எல் நிறுவனம், கடந்த பல மாதங்களாகவே கடும் நிதி சிக்கலைச் சந்தித்து வந்தது. இந்த நிலையில், அதன் நிதி நெருக்கடிக்குக் காரணம் என்ன என்பதும், வங்கிகளிடம் கடனாக வாங்கப்பட்ட பல ஆயிரம் கோடி ரூபாய் எங்கே மடைமாற்றி விடப்பட்டது என்பதும் தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது.