Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
டி.ஹெச்.எஃப்.எல் மீது ரூ. 31,000 கோடி கடன் மோசடி புகார்! ஏன், எதற்கு?

டிஹெச்எஃப்எல் நிறுவனம், மோசடி பணத்தில் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பங்குகளாகவும், சொத்துகளாகவும் முதலீடு செய்துள்ளதோடு, இலங்கையில் கிரிக்கெட் அணி ஒன்றையும் விலைக்கு வாங்கியுள்ளது. மேலும், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தாராளமாக நன்கொடையும் வாரி வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
பிரபல வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான டிஹெச்எஃப்எல்,  ரூ.31,000  கோடி நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும், இவ்வாறு மோசடி மூலம் சுருட்டப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பங்குகள் மற்றும் சொத்துகளாக முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும் 'கோப்ரா போஸ்ட்' இணையதளம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 
[Image: DHFL_16006.jpg]
[color][font]
`கோப்ரா போஸ்ட்' என்ற ஆங்கில இணையதளம், கடந்த காலங்களில் வெளியிட்ட பல்வேறு புலனாய்வு தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், அந்த இணையதளம் தற்போது திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (டிஹெச்எஃப்எல்) என்ற வீட்டுக் கடன் வழங்கும் வங்கி சாரா நிதி நிறுவனம்,  32 வங்கிகளில் கடன்பெற்று மேற்கூறிய நிதி மோசடியை செய்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளது. 


பன்னாட்டு வங்கிகள், பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பினாமி பெயர்களிலும், தொழில் முறை பங்குதாரர்கள் பெயரிலும் கடனாக பெற்ற பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை, டிஹெச்எஃப்எல் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர்களான கபில் வதாவன், அருணா வதாவன் மற்றும் தீரஜ் வதாவன் ஆகிய 3 பேருக்குச் சொந்தமான ஆர்.கே.டபுள்யோ டெவலப்பர்ஸ், ஸ்கில் ரிலேட்டர்ஸ் மற்றும் தர்ஷன் டெவலப்பர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்குத் திருப்பி விட்டுள்ளது. இந்த 3 நிறுவனங்களுமே, ஷெல் கம்பெனிகள் என்று அழைக்கப்படும் போலி கம்பெனிகள் எனக் கூறப்படுகிறது. ஷெல் நிறுவனங்கள் என்றால் எந்த ஒரு வர்த்தகமும் தொழிலும் நடக்காமல் நிதிமுறைகேடுகள் செய்வதற்கென்றே தொடங்கப்பட்ட நிறுவனங்களாகும். 
இந்த நிறுவனங்கள் மூலம் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பங்குகளாகவும், சொத்துகளாகவும் முதலீடு செய்துள்ளது டிஹெச்எஃப்எல். இந்த மோசடி பணத்தில் இலங்கையில் கிரிக்கெட் அணி ஒன்றை விலைக்கு வாங்கியதும் அடக்கம்.   இதில் இன்னொரு திருப்பமாக, மோசடி செய்து சுருட்டிய பணத்தில்,  பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு டிஹெச்எஃப்எல்  குழுமம் சார்பில் நன்கொடை வாரி வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இதில் பாஜகவுக்கு மட்டும் 19.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. [/font][/color]
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 31-01-2019, 10:31 AM



Users browsing this thread: 105 Guest(s)