Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இன்றைய போட்டியில், டாஸில் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். இந்த மைதானம் சேஸிங்கிற்கு சாதகமான மைதானம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கோலிக்குப் பதிலாக சுப்மான் கில் மற்றும் ஷமிக்குப் பதிலாக கலீல் களமிறங்குகிறார்கள். தோனி, காயத்திலிருந்து இன்னும் முழுமையாகத்  தயாராகாத காரணத்தால், அணியில் இடம்பிடிக்கவில்லை. நியூஸிலாந்து அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் மற்றும் ரோகித் ஷர்மா களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கம் முதலே நியூஸிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களைத் திணறடித்தது. குறிப்பாக, போல்ட் பந்துவீச்சை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள கடும் சிரமப்பட்டனர். 
தவான், 13 ரன்னில் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து அறிமுக வீரர் கில் களமிறங்கினார். நிதானமாக ஆடிவந்த ரோகித், போல்ட் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ராயுடு மற்றும் தினேஷ் கார்திக் டக் அவுட் ஆக, இந்திய அணி திணறியது. 
அதன்பின்னர், சுப்மான் கில்லும் போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர்,  9 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஜாதவ், 1 ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணி தற்போது 35 ரன்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்து தடுமாறிவருகிறது. தற்போது, பாண்ட்யா மற்றும் புவனேஷ்வர் குமார் களத்தில் உள்ளனர். போல்ட், 7 ஓவர்கள் வீசி 8 ரன் விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by peter 197 - 31-01-2019, 09:19 AM



Users browsing this thread: 102 Guest(s)