Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மிரட்டும் போல்ட்... சீட்டுக்கட்டாகச் சரிந்த இந்திய வீரர்களின் விக்கெட்டுகள்! #NZvIND

இந்தியா  நியூஸிலாந்து அணிகள் மோதும் 4 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன், பந்துவீச்சைத் தேர்வுசெய்தார். 
[Image: tss_07523.jpg]
Photo Credit: Twitter/BCCI


இந்திய அணி நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடிவருகிறது. தற்போது நடைபெற்றுவரும் ஒருநாள் தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றிபெற்று,  இந்திய அணி தொடரை ஏற்கெனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், இன்று 4 -வது ஒருநாள் தொடர், ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
மீதம் இருக்கும் இரண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடரிலிருந்து இந்திய கேப்டன் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதனால், ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களமிறங் உள்ளது. ரோகித் ஷர்மாவுக்கு இது 200 -வது ஒருநாள் போட்டி என்பது கூடுதல் சிறப்பு.  தொடரைக் கைப்பற்றிவிட்ட காரணத்தால், இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 
[Image: cap_06598.jpg]
Photo Credit: Twitter/BCCI
19 -வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட சுப்மான் கில், இன்றைய போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்க உள்ளார். இளம் வீரரான அவருக்கு, போட்டிக்கான தொப்பியை தோனி வழங்கினார். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by peter 197 - 31-01-2019, 09:19 AM



Users browsing this thread: 21 Guest(s)