Romance அபி என்ற அழகு பிசாசு
#6
அழகாக இருக்கிறாளே ஒழிய, பிசாசாக பிறக்க வேண்டியவள். அவளுடைய அப்பா அம்மா வைத்த பேர் அபிராமி. அதை சுருக்கித்தான், 'அபி.. அபி..' என்று நான் செல்லமாக கூப்பிடுகிறேன் என அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். நானோ, அழகு பிசாசு என்பதை சுருக்கித்தான், 'அபி.. அபி..' என்று கடுப்புடன் அவளை கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.

நானும், சசியும் படித்த காலேஜில்தான் அபியும் படித்தாள். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறாள். எங்களை விட இரண்டு வயது இளையவள். என்ன சொல்றது அவளை பத்தி..? செம்ம்ம பிகரு...!! காலேஜில் பலபேர் அபியின் பின்னால் நாய் மாதிரி நாக்கை தொங்கப் போட்டு அலைந்தார்கள். நாய் மாதிரி இல்லாவிட்டாலும் நானும் அலைந்தேன். அவள் என்னை தன் காதலனாக டிக் செய்தாள். 'ஹையோ...!! நான் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி' என்று அப்போது மகிழ்ந்தேன். அப்படி மகிழ்ந்ததை இப்போது நினைத்தாலும், எனக்கு ஒரே சிரிப்பாக வரும்.

ஒரு பக்கம், சசி ஒரு டார்ச்சர் என்றால்.. அடுத்த பக்கம், அபி ஒரு டபுள் டார்ச்சர்..!! அண்ணனுக்கும் தங்கைக்கும், நேரம் காலம் தெரியாமல் என்னை டார்ச்சர் செய்வதுதான் அன்றாட வேலை. 'அண்ணனா.. தங்கையா..?' என்று நான் கொஞ்ச நேரம் யோசித்தேன். அப்புறம் ‘தங்கையே..!!’ என்று முடிவெடுத்தேன். சசிக்கு திரும்ப கால் செய்தேன். வண்டி ஓட்டிக்கொண்டே பேசுகிறான் போல. இரைந்தது.

"சொல்லுடா மச்சான்.. வந்துக்கிட்டே இருக்கேன்.." என்றான்.

"சாரிடா மச்சான்...!!"

"சாரியா.. என்னாச்சு..?"

"என்னால வர முடியாதுடா..!!"

"அதான் ஏன்னு கேக்குறேன்..?"

"டிசன்ட்ரிடா..!!" அபி சொல்ல சொன்ன பொய்களில் ஒன்றையே சொன்னேன். 

"டிசன்ட்ரியா..? நல்லாத்தானடா பேசிட்டு இருந்த..?" அவன் நம்பாத குரலில் கேட்டான்.

"டிசன்ட்ரி என்ன சொல்லிட்டா வரும்..? திடீர்னு ஆயிடுச்சுடா..!! இப்போ டாய்லட்ல இருந்துதான் பேசுறேன்..!! சத்தம் கேக்குதா...?"

"சத்தம்லாம் ஒன்னும் கேக்கலையே..?" என்றான் அவனும் விடாமல்.

"பாத்தியா.. என்னை நம்பலை பாத்தியா..? இதுலலாமாடா நான் பொய் சொல்வேன்..?"

நான் கொஞ்சம் சென்டிமென்டான குரலில் சொல்ல, சசி அமைதியானான். அப்புறம் கொஞ்சம் சமாதானாமான மாதிரியாக சொன்னான்.

"சரிடா.. விடு.. உடம்பை பாத்துக்கோ.. ரெஸ்ட் எடு..!!"

"ஓகேடா மச்சான்.. நெக்ஸ்ட் சண்டே.. எந்த டிசன்ட்ரி வந்தாலும்.. நாம ஒண்ணா ஊர் சுத்துறோம்..!! ஓகேவா..?"

"ஓகேடா..!!"

அவன் சொல்ல, நான் ஒரு நிம்மதி பெருமூச்சுடன் காலை கட் செய்தேன். சசி கால் செய்ததில், எனக்கு ஒரே ஒரு அட்வான்டேஜ் இருந்தது. நான் கிளம்பி ரெடியாகி இருந்தேன். அதனால் ஒன்பதே நிமிடங்களில் இம்பீரியல் காம்ப்ளக்சை அடைய முடிந்தது. அரக்க பரக்க, பைக்கை ஓட்டி, நான் அங்கு செல்ல, அபியோ 'உர்ர்..' என்ற முகத்துடன் என்னை வரவேற்றாள். பிங்க் கலர் டாப்சும், வொய்ட் கலர் பேண்ட்டும் அணிந்து, கோபக்கார தேவதையாக காட்சியளித்தாள். தோளில் ஒரு ஷோல்டர் பேக்.

"எவ்வளவு நேரம் வெயிட் பண்ணுறது..?" என்றாள் எரிச்சலாக.

"அதான் சொன்ன நேரத்துக்கு வந்துட்டனே அபி..?" என்றேன் நான் குழைவாக.

"ஆமாம்.. கிழிச்ச..!! எப்படி அவனை கழட்டிவிட்ட..?"

"டிசன்ட்ரினு சொன்னேன்..!!"

"ச்சேய்.. கருமம்..!! வேற நல்ல ஐடியாவே கிடைக்கலையா உனக்கு..?"

"நீதான சொன்ன..?"

"ஒரு பேச்சுக்கு சொன்னா.. அதையே போய் அவன்கிட்ட சொல்வியா..? சரி.. வா..!!" என்ற அபி, பட்டென்று என் கையை பிடித்து இழுத்தாள்.

"எங்கே..?"

"வான்றேன்ல..? வா..!!"

சொன்னவள் என்னை அந்த காம்ப்ளக்சுக்குள் இழுத்து சென்றாள். அது ஒரு எட்டு ப்ளோர் கொண்ட பெரிய காம்ளக்ஸ். எல்லா ப்ளோர்களிலும், கடைகள்.. ரெஸ்டாரன்ட்கள்.. திரள் திரளாய் ஜனங்கள்.. மெட்டல் டிடக்டர் வைத்து சோதனை செய்த பிறகே எங்களை உள்ளே அனுமதித்தார்கள். அபி என்னை இழுத்து சென்று, லிஃப்ட் முன்னால் நிறுத்தினாள். 'என்ன வாங்கப் போற..?' என்ற என் கேள்விக்கு முறைப்பை பதிலாக தந்தாள்.

லிஃப்ட் வந்ததும் ஏறிக்கொண்டோம். எங்களோடு சேர்ந்து ஒரு கூட்டமே ஏறிக்கொண்டது. அபி எட்டாவது ஃப்ளோர் பட்டனை அழுத்தினாள். 'எட்டாவது ஃப்ளோரில் என்ன இருக்கிறது..?' என்று கேட்க நினைத்தேன். அவளுடைய முறைப்பான மூஞ்சியை பார்த்ததும் கேட்க தோன்றவில்லை. ஒவ்வொரு ஃப்ளோராக ஆட்கள் இறங்கிக்கொள்ள, எட்டாவது ஃப்ளோரில் லிஃப்ட் காலியானது. நானும், அபியும் மட்டும்தான்.

லிப்டை விட்டு வெளியே செல்ல முயன்ற என்னை, அபி மீண்டும் லிஃப்டுக்குள் கையை பிடித்து இழுத்தாள். மீண்டும் கிரவுண்ட் ஃப்ளோர் பட்டனை அழுத்தினாள். 'இவளுக்கு என்ன லூசா பிடித்திருக்கிறது..?' என்று மனதுக்குள் நினைத்தேன். ஆனால் அந்த நினைப்பு எவ்வளவு தவறு என்று அடுத்த வினாடியே எனக்கு புரிந்து போனது.

லிப்ட் கதவு மூடியதுதான் தாமதம்.. அபி பாய்ந்து வந்து என் உதடுகளை கவ்விக்கொண்டாள். ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தாள். அவளுடைய மார்புப்பந்துகள் என் நெஞ்சில் உருள, அவளது கைகள் என்னை இறுக்கி அணைத்து, என் முதுகை பிசைய, அவளது செவ்விதழ்கள் என் தடித்த இதழ்களுக்குள், எசகுபிசகாக சிக்கிக்கொள்ள, நான் கிறங்கிப் போனேன். எதுவுமே செய்யத் தோன்றவில்லை. அமைதியாக அபியின் ஆவேசத்துக்கு ஒத்துழைத்தேன்.

அபிக்கு செதுக்கி வைத்த மாதிரி மெல்லிய உதடுகள். இயல்பாகவே சிவந்திருக்கும். இதில் லிப்ஸ்டிக் வேறு போட்டு, மேலும் சிவப்பாக்கி வைத்திருப்பாள். எப்போதுமே ஒருவித ஈரப்பசையுடன் காட்சியளிக்கும். தேனோ அல்லது தேன் மாதிரி எதோ ஒரு திரவத்தையோ அந்த உதடுகள் சுரக்கும். உறிஞ்சிப் பார்க்கும் எனக்குத்தான் அதன் உண்மையான சுவை தெரியும். அபியை முத்தமிடுவது எப்போதுமே எனக்கு ஒரு இனிய சுகானுபவம்.

[Image: 5c51b46544778.jpeg] 


இப்போதும் அப்படித்தான். ஆனந்தமாக அவளை முத்தமிட்டேன். அவளுடைய உதடுகள் தந்த மதுவை உள் வரை உறிஞ்சினேன். அந்த மது தந்த போதை, சுர்ர்ர்... என மூளையில் ஏற, அந்த சுகத்தை தாங்காமல் தத்தளித்தேன். எல்லாமே சில விநாடிகள்தான். மூன்றாவது ஃப்ளோரில் லிஃப்ட் நின்று, கதவு திறந்துகொள்ள, அபி என்னை தள்ளிவிட்டு, லிஃப்டின் இன்னொரு மூலையில் சென்று நின்றுகொண்டாள். ஆட்கள் லிஃப்டுக்குள் நுழைய, அபியோ எனக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி, எங்கேயோ பார்த்தாள். அவளுடைய குறும்பு உண்மையிலேயே எனக்கு முகத்தில் புன்னகையை வரவைத்தது.
Like Reply


Messages In This Thread
RE: அபி என்ற அழகு பிசாசு - by Karthick - 30-01-2019, 04:55 PM



Users browsing this thread: 2 Guest(s)