Thriller ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! [Completed]
#22
ஆருஷ் மீடியாவிடம் குடும்ப துக்கமாக கருதி அவர்களுக்கு பிரைவசி வழங்க வேண்டும் என்று சொல்லவிட்டு “ஒரு வழியா செத்துட்டா. காண்ட் வெயிட் டு செலிப்ரட் திஸ் வித் யு டுமாரோ” என்று மெஸ்ஸஜ் அனுப்பி கொண்டே தன்னுடைய ரூமிற்கு சென்றான். 

[Image: Trisha-Krishnans-Mother-Uma-Krishnan-Cal...ection.jpg]

கொஞ்ச நேரத்தில் த்ரியாவின் அம்மா சுமா கதறிய படியே ஓடி வந்தாள். தொடக்கத்தில் சீரியல்களில் நடித்து கொண்டு இருந்தவள், சீரியலில் நல்ல நடிகை என்று பெயர் இருந்தாலும் மகள் சினிமாவில் ஸ்டார் ஆனபோது தன்னுடைய நடிப்பை துறந்தாள். 

தன்னுடைய மகளின் சடலத்தை பார்த்து சத்தம் போட்டு அழ ஆரம்பிக்க மாமியார் வந்தது தெரிந்து ரூமில் இருந்து ஆருஷ் வெளியே வந்தான். 

“என்னாச்சி ஆருஷ். நான் 4 நாள் விட்டுட்டு போறதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சே” மருமகனை கட்டி பிடித்து அழுதாள்.

“என்ன ஆச்சுன்னே தெரியல அத்தை” அவன் முதுகை தடவி கொடுத்தான். 

“சார் போஸ்ட் மார்ட்டம் பண்ண எல்லாம் பக்கதுல இருக்க GHல ரெடி பண்ணியாச்சு. ஆம்புலன்ஸ் வெளியே இருக்கு”

“சூட்டிங்கில் இருந்தது ரொம்ப டயர்ட். குளிச்சிட்டு வந்துடவா, குளிக்க தான் போனேன் அத்தை வந்த உடனே வந்திட்டேன்”
“நான் ஹாஸ்பிடல் போய்ட்டு வரேன் மாப்பிள்ளை. அது இல்லாம கொஞ்ச நேரத்துல இண்டஸ்ட்ரில இருக்க எல்லாரும் வர ஆரமிச்சிடுவாங்க. நீங்க இங்கே இருக்கணும்” சொல்லிவிட்டு சுமா த்ரியாவின் சடலத்துடன் போஸ்ட் மார்ட்டம் செய்ய GH போனாள். 

“சரி அத்தை, அடுத்தது என்ன” ஆருஷ் கேட்டான்.

“இப்போவே லேட் ஆகிடுச்சு. நாளை காலை வரைக்கும் இண்டஸ்ட்ரில இருக்கவங்க எல்லாம் அஞ்சலி செலுத்தட்டும். அப்புறம் திருச்சி கொண்டு போய்டலாம்”

“என்ன திருச்சியா” 

“டீவிகாரங்களே த்ரியாவின் உடல் திருச்சியில் உள்ளே அவர்களின் சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்படும்னு போட்டாங்க. நீங்க என்ன விஷயம் தெரியாத மாதிரி கேக்குறீங்க. எங்க குடும்பத்துல எல்லாமே அங்கே தானே.” 

ஹாலில் இன்ஸ்பெக்டர் காவலாளியை விசாரித்து கொண்டு இருந்தார். 

“உன் பேரு என்ன?. எத்தனை வருசமா மேடத்தை தெரியும் உனக்கு”

“என் பேரு சிங்காரம் ஐயா. பாப்பாவை சின்ன குழந்தையிலே இருந்தே எனக்கு தெரியும். பாப்பாவோட அம்மா சுமா வீட்டுல தான் மொதல்ல வாட்ச்மேனா இருந்தேன். பாப்பா இந்த பங்களா கட்டுறப்பவே எனக்குனு ஒரு ரூம் கட்டி கொடுத்து இங்கேயே வேளைக்கு வெச்சிகிட்டாங்க” 

“சின்ன வயசுலேன்னு தெரியும்னு சொல்லுறீங்க. பாப்பாவுக்கு ஐ மீன் த்ரியா மேடத்துக்கு யாராச்சும் எதிரி இருக்காங்களா”

“எனக்கு தெரிஞ்சி யாரும் இல்லை சார்”

“ஹ்ம்ம் மேடத்தை நீ எப்போ பார்த்தே”

“நேத்து சாயங்காலம் அய்யா பாண்டிச்சேரி கிளம்புனப்போ மேடம் வந்து டாட்டா காட்டிட்டி போனாங்க. அதுக்கு அப்புறம் ராத்திரி 8.30 மணி போல அவங்க பிஸ்ஸா ஆர்டர் பண்ணியதை நான் தான் உள்ளே போய் கொடுத்தேன்.”

“அதுக்கு அப்புறம்..”

“அதுக்கு அப்புறம் காலையிலே இருந்து மேடம் வெளியே வரல. ஏதாச்சும் சாப்பிட வாங்கி வரவான்னு உள்ளே போய் கேட்கலாம்னு பார்த்தா மேடம் மயக்கம் போட்டு விழுந்து கிடந்தாங்க, உடனே டாக்டருக்கு போன் பண்ணினேன். அவரு வந்து பார்த்ததுக்கு அப்புறம் தான் பாப்பா இறந்து போனதே தெரியும்” சொல்லி கொண்டு இருக்கும் போதே கண்ணீர் அவரையும் அறியாமல் வந்தது.

“சரி நாங்க சொல்லுற வரைக்கும் நீங்க ஊரை விட்டு போக கூடாது”

“சரிங்க” என்று மீண்டும் வாசலில் கிடந்த தன்னுடைய சேரில் உட்கார்ந்தார். 

இன்ஸ்பெக்ட்டர் அங்கிருந்து போய் சிசிடிவி கமெரா ரெகோடரிங்கை பார்த்து கொண்டு இருந்த போலீஸ்காரர்களிடம் “என்னையா ஏதாச்சும் கிடைச்சுதா”

“ஒன்னும் இல்லை சார். கடைசியா வாட்ச்மேன்கிட்ட மேடம் பீஸ்ஸா வாங்கிட்டு கதவை சாத்தினத்துக்கு அப்புறம் அடுத்த நாள் வாட்ச்மேன் ரொம்ப நேரம் கதவை தட்டிட்டு தன் கிட்ட இருக்கிற சாவியால திறக்கிறது தான் அடுத்து. மாடில இருக்க கமெரா பாக் சாய்ட்ல இருக்க கமெரானு எல்லாத்தையும் பார்த்துட்டோம். சந்தேக படுற மாதிரி ஒன்னும் இல்லை”

“என்னையா ஏட்டு, எவளோ வருசமா சர்விசஸ்ல இருக்கே. நாச்சுரல் டெத்ன்னு நீயுமா நம்புறே”

“வீட்டுல இருக்க லாக் எதுலயும் போர்ஸ்ட் என்ட்ரி இல்லை சார். எனக்கு என்னவோ அட்டாக் வந்து இருக்கலாமோன்னு தோணுது” 

“4 நாளைக்கு முன்னாடி த்ரியா போட்ட குத்தாட்டதை பார்த்தா அப்படி சொல்ல மாட்டே” தாடியை சொரிந்தார்.

“நான் நினைக்கிறேன் சார், காலையில வீட்டை திறந்து வாட்ச்மேன் வீட்டு உள்ளே வந்தப்போ த்ரியா அரைகுறை ட்ரேஸ்ல இருக்கிறதை பார்த்து மூடாகி ஏதாச்சும் தப்பா நடக்க முயற்சி பண்ணி இப்படி போய் முடிஞ்சி இருக்கலாம்” 

“நானும் அது தான் யோசிச்சேன். ஆனா வாட்ச்மேன் கிட்ட பேசினத்துக்கு அப்புறம் அந்த எண்ணம் எல்லாம் போச்சு. அது இல்லாம மேடம் உடம்புல ஒரு காயம், கீறல் எதுமே இல்லை. எல்லாம் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தா தான் தெரியும். ஜிம் எல்லாம் போய் இவ்ளோ பிட்டா இருக்கவங்களுக்கே வருதுன்னா, யோவ் ஏட்டு நீ எல்லாம்.. ” என்று இழுத்தார். 

“ஹாஹாஹா” அங்கே இருந்த மிச்சம் இரண்டு போலீஸ்காரர்களும் சிரித்தார்கள். 

“சரி சிசிடிவி எவிடென்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி வையுங்க. நான் போய் ஆருஷ் கிட்ட விசாரிச்சு பாக்குறேன். கூட்டம் கூட ஆரம்பிச்சா அவனை பிடிக்க முடியாது” 

ஆருஷ் குளித்து விட்டு கருப்பு கலர் ஜிப்பா மற்றும் பேண்ட் போட்டு கொண்டு வெளியே வந்தான்.

“சார் உங்க கிட்ட ஒரு சில கேள்வி கேட்கலாமா”

“ஓஹ் எஸ்” உட்காருங்க என்று சோபாவில் உட்கார்ந்து சேரை காட்டினான்.

“இவளோ பெரிய வீட்டுல ஏன் வாட்ச்மேனை தவிர யாருமே இல்லை” 

“த்ரியா பிரைவசியை விரும்புறவங்க அதனாலே தான்”

“வேலைக்கு கூட ஆள் வைக்காத அளவுக்கு பிரைவசி முக்கியமா”

“உங்களுக்கே தெரியும். சில வருசத்துக்கு முன்னாடி அவங்க பாத்ரூம்ல குளிக்குற வீடியோ ஒன்னு வந்துச்சி. அது வீட்டுல வேலை பார்த்த ஒரு ஆள் லீக் பண்ணியது தான். அதுல இருந்து நம்பிக்கை இல்லாத எல்லாரையும் வீட்டை விட்டு தூக்கிட்டு எல்லாத்துக்கும் ரோபோட் வெச்சாச்சு. த்ரியா ரொம்ப ஹெல்த் கான்ஷியஸ் அப்டிங்கறதாலே செல்ப் குக் இல்லைனா அத்தை சமைப்பாங்க.”

இன்ஸ்பெக்டருக்கு பொறி தட்ட உடனே “வாட்ச்மேன் அவங்க பீஸ்ஸா சாப்பிட்டாங்கனு சொன்னான்” கேட்டார். 

“உங்களுக்கு தான் தெரியமே. த்ரியா ஒரு மெத்தட் அஆக்டர்னு அடுத்த படத்துல குண்டா இருக்கணும் அதுக்காக வெயிட் ஏத்த ஷி ஸ்டார்ட்எட் ஈட்டிங் ஜங்க்” 

“ஹ்ம்ம் சுமா மேடம் இங்கே தான் இருப்பாங்களா”

“ஆமா மோஸ்ட்லீ. த்ரியாகு சூட்டிங் இல்லாதப்போ திருச்சி போவாங்க”

“ஹ்ம்ம் தேங்க்ஸ் சார்”

“உங்க இன்வெஸ்டிகாசன் எப்படி போகுது”

“நத்திங் சஸ்பிசியோஸ். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்க்கு வைட்டிங்”

“ஓகே, இப் யு எக்ஸ்க்யூஸ் மீ. நான் போயிடு சில அரிஞ்சமென்ட்ஸ் பண்ணனும்”

அப்போது ஏட்டு வேகமாக ஓடி வந்தார். 

“ஐயா எனக்கு ஒன்னு தோணுது”

“என்ன” 

“இந்த பங்களா இருக்க இடத்தை பார்த்தீங்கலா”

“பீச் சைட் பங்களா. எல்லா பெரிய ஸ்டாரும் இங்கே தானே பங்களா காட்டுறாங்க”

“அதில்ல. ஆள்நடமாட்டம் இல்லாம தனியா பேய் பங்களா மாதிரி இல்லை. வர வழி பூரா சவுக்கு காடு. எனக்கு தெரிஞ்சி ஏதோ மோகினி பேய் அடிச்சிடிச்சுனு நினைக்கிறேன்”
Kavyanjali, written by Karthik
போடா திருட்டு பொறுக்கி
காமத்தின் விளைவுகள்
நான் யார்?
ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்
அனைத்தையும் கீழே உள்ள Website பட்டனை அழுத்தி படிக்கலாம்


Like Reply


Messages In This Thread
RE: ஸ்டார்ட் கேமரா.. ஆக்சன்!! - by naughty2hotty - 29-12-2019, 05:57 PM



Users browsing this thread: 2 Guest(s)