காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#12
அதுவரை மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச கர்வமும் 'ஹெட் ஆப் டிபார்மென்ட்' பேராசிரியாரால் கிழித்து எறியப்பட்டது. ஆரம்பத்தில் என்னை சீண்டும் சில கேள்விகளால் எனது கோபத்தையும் வேகத்தையும் ஏறசெய்தார். நான் கூறிய பதிலை கடுமையாக விமர்சித்தார்.

பின்னர் மெதுவாக அவரது கருத்துகளை என்னுள் விதைக்க தொடங்கினார். அவர் கூறியவற்றில் இன்றும் நினைவில் இருப்பது ஓன்று மட்டும்தான். 'MBA முடிச்சுட்டு என்ன பண்ண போற என்று கேட்டார். நானும் ஏதாவது கம்பெனில வேலை சேர்வேன் என்றேன். அதற்கு அவர் 'உனது பலம் எதுன்னு கூட தெரியாமலே வாழ்க்கையை கடத்த போறியா, எல்லாரையும் மாதிரி நீயும் டிகிரி வாங்கிட்டு கம்பெனி கம்பெனி-யா ஏறி இரங்கி வேலை பார்க்க போறியா. அன்று விழாவில் உன்னோட அம்மாவை சந்தோஷ படுத்தி பார்த்து நீ சந்தோசமா இருந்தாய்'. உனது சந்தோசம் ஒருவேலைல சேர்ந்தா மட்டும் நிறைவேரிடுமா. முதல் வாழ்க்கைல ஒரு இலக்கை குறிவைகனும் பின்னர் அதனை நோக்கி நீச்சல் அடிக்கணும். இலக்கில்லா வாழ்க்கை கண்டிப்பா மன நிம்மதியான வாழ்க்கையா இருக்காது. 'MBA வெறும் டிகிரி சேர படிக்கிறதா நினைச்சிருந்தா இப்போவே நீ இங்கிருந்து கிளம்பலாம். இங்க படிகிறத தாண்டி ஒரு பெரிய பொறுப்புக்கு உன்னை தகுதி படுத்துறதா இருக்கணும். நீ வெறும் ஏட்டு புத்தகத்தை வச்சிருகாம, ஒவ்வொரு புது விசயத்தை தெரிஞ்சிக்க முயர்ச்சிகனும் என்றும் மேலும் நிறையா சொன்னார்.

ஆனால் அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ஆணி அறைந்த மாதிரி இறங்கியது. கவுன்செல்லிங் முடிந்த பின், ஒரு தெளிவானா மன நிலையுடன் வெளியே வந்தேன். அதுவரை கிளாஸ் ரோமியோ, ஜோக்கர் என பட்டம் வாங்கி பெண்களை கவர முயற்சி செய்த நான், கொஞ்சம் பாடம், கொஞ்சம் விளையாட்டு, சரிசமாக புதிய விசயங்களை பற்றிய தேடல் என வாழ்க்கையின் போக்கை மாற்றினேன்.

நான் ஒருபுறம் என்னை மாற்றி கொண்டிருக்க, விதி வேறு மாதிரி விளையாடியது. கலா என்னுடன் போட்டியிட்ட நாட்கள் போய், சிநேகமாக பழக ஆரம்பித்தாள். எனக்கு அவளது நட்பு பிடித்திருந்தது, நானும் அவளிடம் இருந்து பல புதிய விசயங்களை கற்று கொண்டேன்.

இரண்டாம் செமஸ்டர் முடிந்த பின், எங்களை 'Internship ' என்று பெரிய நிறுவனங்களில் நான்குமாத தொழில் சம்மந்தமான பயிற்சிக்கு அனுப்பி இருந்தனர். நமது தமிழ் நாட்டில் பல பெரிய நிறுவனங்கள் சென்னையில் தான் உள்ளது அனைவரும் சென்னைக்கே சென்று பயிற்சி பெற்றோம். அந்த நான்குமாதம் எனக்கும், கலாவிற்கு ஒரு மன மாற்றத்தை தந்தது. எனக்கு அவளை பற்றிய தேடல் அதிகமாக இருந்தது.

நாங்கள் இருவரும் இரு வெவ்வேறு நிறுவனங்களில் பயிர்ச்சி பெற்று வந்தோம். அவள் என்னை தொடர்பு கொள்ள எந்த விதமான வசதியும் என்னிடம் கிடையாது. நான் எனது நண்பர்களுடன் தங்கி இருந்தேன். அந்த நான்கு மாதம் தான் எனக்கு பல பெரிய நல்ல நண்பர்கள் கிடைக்க உதவியது.

அப்பொழுதி திடீரென்று ஒருநாள் எனது அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாக, அவர்களால் தொடர்ந்து வேலைக்கு போக முடியவில்லை. அதனால் என்னால் மேலும் பயிற்ச்சியை தொடர வசதியும் இல்லை. இருந்தாலும் நண்பர்கள் பலர், உதவியுடன் அந்த பயிற்சியை முடித்தேன். அவர்கள் அன்று அளித்தது வெறும் பொருள் உதவி மட்டும் அல்ல மன தயிருமும் கூட. இன்றுவரை அவர்கள் செய்த பொருள் உதவியை திரும்பி கேட்கவும் இல்லை, அவர்களின் நட்பு முறையும் மாறவே இல்லை. இப்படி பட்ட நண்பர்கள் கிடைக்க உண்மையில் நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என எண்ணியது கூடஉண்டு.


எங்களின் பயிற்சி மூன்று மாதங்கள் முடிந்து விட்டது, அப்பொழுது ஒருநாள், எங்கள் கல்லூரி 'ஹெட் ஆப் டிபார்ட்மென்ட்' பேராசிரியார் எங்களுக்கு ஒரு மீட்டிங் வைத்திருந்தார். எங்களின் பணி எப்படி இருக்கிறது, ப்ராஜெக்ட் வொர்க் நல்ல பண்ணுறோமா என்று ஆலோசை வழங்க அந்த ஏற்பாட்டை செய்திருந்தார். அங்கு எப்படியும், கலாவை காண்பேன் என்று சந்தோசத்தில் சென்றிருந்தேன். அங்கோ கலாவை சுற்றி பலர் சூழ்ந்திருந்தனர். மனதில் எதோ ஒரு நெருடல், எங்கே நான் அவளிடம் இப்போது பேசினால் கண்டிப்பாக என்னையும் மற்றவர்களை போல் நினைப்பாள் என்று கருதி அவளை தவிர மற்ற நண்பர்களுடனும், பேராசிரியரிடமும் பேசிவிட்டு, அங்கு தயாராக இருந்த மதிய உணவை உண்ண சென்றேன்.


அங்குவைத்துதான் அது நிகழ்ந்தது. கலா என்னை மார்பில் கைவைத்து தடுத்து நிறுத்தினாள். என்ன நீ ஒரு பெரிய இவனா, இங்க உனக்காக இப்படி ஒருத்தி காத்துட்டு இருக்கேன் நீபாட்டுக்கு வந்தும் என்னை கண்டுகாமல், என்னை தவிர எல்லாரிடமும் பேசுற. இப்போ உன்பாட்டு சாப்பிட வர. நீ மனசுல என்னதான் நினைச்சுட்டு இருக்கிற. என நெற்றியில் அறைந்தாற்போல் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தாள். அவள் சமாதானம் செய்வதுக்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.


அதன் பின்பு வந்த நாட்கள் அவளின் நினைவுகளிலேயே கடத்தினேன். அவள் என்னை காதலித்தாளா, இல்லை நான் அவளை காதலிக்க தொடங்கினேனா?? புரியாமலே நான் தவித்தேன். வாழ்க்கையில் ஒரு இலக்கை அடையாமல் எந்த வித ஆசைக்கும் தவிக்க கூடாது என எனது மனதை கட்டுப்படுத்த முயன்றேன். மனதை அடக்க நினைத்தால் அது அலையும், அறிய நினைத்தால், அது அடங்கும் என்று எங்கோ கேட்டே நியாபகம். மனதை கட்டுப்பாடுடன் வைக்க சில பயிற்ச்சிகள் செய்தேன். எனது இலட்சியமாக நான் வைத்திருந்த 'இழந்த எனது தந்தையின் சொத்துக்களையும், கடனால் விற்றுவிட்ட எனது அப்பா நடத்திய அந்த ரப்பர் பாக்டரியை மீட்டு, சொந்தமாக தொழில் செய்யவேண்டும்' மேல் அதிக கவன செலுத்த மனதை தயார் செய்தேன். எனது காதல் கனவுகளை ஒதுக்க முயற்சி செய்தேன்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 30-01-2019, 01:19 PM



Users browsing this thread: 1 Guest(s)