30-01-2019, 10:32 AM
ஆன்லைன் மூலம் ரயிலில் புக்கிங் செய்வது குறித்த சில அட்வைஸ் அல்லது டிப்ஸ் உங்களுக்காக,
1. அனைத்து ரயில்களின் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் 120 நாட்களுக்கு முன்பிலிருந்து தொடங்கும்.
2. ஒரு ஆன்லைன் டிக்கெட் புக்கிங் விண்ணப்பத்தில், ஒருவர் தனது அக்கவுண்ட் மூலம் ஆறு பேர் வரை மட்டுமே டிக்கெட் புக் செய்ய முடியும். இதில், அனைத்து புக்கிங்கும் ஒரே ரயிலில், ஒரே இடத்திற்கு செல்லும் வகையில் தான் டிக்கெட் புக் செய்ய முடியும்.
3. டிக்கெட் வெற்றிகரமாக புக் செய்யப்பட்டுவிட்டால், பெர்த் எண், கோச் எண் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு கிடைக்கும்.
4. RAC என்று புக் ஆகும் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தால், நீங்கள் ரயிலில் உட்கார்ந்து தான் செல்ல முடியும். இருப்பினும், ரயில் புறப்படுவதற்கு முன்பு கடைசி நேரத்தில் சில புக்கிங்ஸ் கேன்சல் ஆகும் பட்சத்தில், உங்களுக்கு அந்த சீட் ஒதுக்கப்படும்.
5. சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, டிக்கெட் புக் உறுதி செய்யப்பட்ட பயணியின் பெயர், RAC உறுதி செய்யப்பட்ட பயணியின் பெயர் அதில் இடம்பெற்று, அவர்கள் ஐஆர்சிடிசி விதிப்படி ரயிலில் பயணம் செல்ல அனுமதிக்கப்படுவர்.
6. சார்ட் தயாரிப்பதற்கு முன்பு வரை மட்டுமே ஆன்லைனில் நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய முடியும். சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, உங்களால் ரத்து செய்ய முடியாது.
7. அப்படி ஒருவேளை, சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டுமெனில், பயணிகள் [email protected] எனும் முகவரிக்கு டிக்கெட் விவரம் குறித்த தகவலுடன் மின்னஞ்சல் அனுப்ப வேண்டும். அதன்பிறகு, ஐஆர்சிடிசி அதன் மேல் நடவடிக்கை எடுத்து, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, உங்களது ரீஃபண்ட் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
8. அதேசமயம், சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகான டிக்கெட் ரத்து விவகாரங்களுக்கு என ஐஆர்சிடிசி TDR(ticket deposit receipt) எனும் வசதியை தருகிறது. இதன்மூலம், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்ய விண்ணப்பிக்கலாம். தவிர, ரத்து செய்யப்பட்ட டிக்கெட் ரீஃபண்ட் குறித்த நிலைமையையும் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
9. சார்ட்டில் இடம்பெறாத பயணிகள் எக்காரணம் கொண்டும் ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது ஆன்லைன் டிக்கெட் ரத்து செய்யப்பட்டு, திரும்பி அவரது வங்கிக் கணக்குக்கே பணம் திருப்பி அனுப்பப்பட்டுவிடும்.
10. டிக்கெட் யார் பெயரில் புக் செய்யப்பட்டுள்ளதோ அவரின் அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் பயணம் செய்தால் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும்