27-12-2019, 09:07 AM
சினிமாவில் வருவதை போல அவளை மயக்க தொடங்கி விட்டான். அவளிடம் இப்போது எந்த வித எச்சரிக்கை உணர்வும் இல்லை. கணவனின் நண்பன், பிறகு அவளது நண்பன், இப்போ அவள் மனதில் அவன் என்ன உறவு என்று புரியாத ஒரு நிலை. அவனுக்காக எதிர்பார்க்க தொடங்கியது அவர்கள் பேச ஆரம்பித்த சிறிது நாளிலேயே தொடங்கி விட்டது. ஆனால் அப்போது ஏமாற்றம் இல்லை. இப்போது அவன் வரவில்லை என்றால் மனம் ஏமாற்றம் கொள்கிறது. இது தான் காதலா? அவன் மேல் அக்கறை கொள்கிறாள். புகை பிடிக்க வேண்டாம், வண்டியை வேகமாக ஓட்ட வேண்டாம் என்றெல்லாம் கணவனிடம் கொள்ளும் அதனை அக்கறையும் அவன் மீது வந்து விட்டது ஆச்சர்யம் தருகிறது. இது நிச்சயம் அவளது காதல் தான். கணவனுக்கு சரி சமமான நிலையில் அவனை நிறுத்தி விட்டால். கணவன் வண்டியை பற்றி பேசும் போது அவன் மீது எரிச்சல் கொள்ளும் அளவுக்கு பிரபு மீது ஆசை வந்து இருக்கு. அருமையாக கொண்டு போறீங்க. அவன் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அறிய இப்போவே ஆர்வம் தொற்றி கொண்டு விட்டது.