Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
 இரண்டு நாட்களில்  நவநீதன் ஓரளவு குணமாகிவிட்டான். அடிபட்ட இடத்தில் ஒரு சின்ன வலி இருந்தாலும் அவனால் அதை மறந்து இயல்பாக இருக்க முடிந்தது. மீண்டும் அன்புவைப் பார்த்த போது கேட்டான்.! 
'' ஏன்டா ரேவதிகூட பேசறதில்லையா ?'' 

 '' என்னடா பேசச் சொல்ற.? ஊரு பூரா எல்லாம் நாறிப் போய் கிடக்கு. தெரியாதா உனக்கு.?'' என்றான் அன்பு.

 '' ம்.. தெரியும். ஆனா அது என்னடா பண்ணுச்சு. உன்னை லவ் பண்ணது தப்பாடா.? போன் பண்ணாக்கூட நீ எடுக்க மாட்டேங்கறியாம்.?''

 '' நீ என்ன லூசாடா ?'' என்று கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டான் அன்பு.  ''இவ்வளவு தூரம் நடந்தப்பறமும் நான் போய் அவகூட பேசற அளவுக்கு நான் என்ன மானங்கெட்டவனாடா ?''

 '' ச்ச.. அப்படி இல்லடா. இது ஒரு லவ் பீலிங்தான.?'' 

''மயிறு பீலிங் ! ஆளப்பாரு..!'' 

'' என்னடா அன்பு இப்படி பேசற.?'' 

'' பின்ன.. ? இதுக்கப்பறமும் அவகூட போய் என்னை பேச சொல்றியா ? நல்ல ஆளுடா நீ.!''

 '' அப்ப ரேவதியோட பழக்கம் ?''

 '' அதுலாம் இனி அவ்வளவுதான்டா '' என மிக இயல்பாகச் சொன்னான் அன்பு.  ''நா ஒண்ணும் அவள தேடிப் போய் லவ் பண்ல. அவதான் என்னை பண்ணா. நைட் பனிரெண்டு ஒரு மணிக்கெல்லாம் போன் பண்ணி என்னை டார்ச்சர் பண்ணிட்டு இருந்தா. ஏதோ நானும் கொஞ்சம்.. அவளுக்கு கம்பெனி குடுத்தேன். கொஞ்ச நாள்.. ! நானே இனி இவள எப்படி கழட்டி விடலாம்னு யோசிச்சிட்டுருந்தேன். அவ தம்பி மூலமா அந்த சான்ஸ் கிடைச்சாச்சு இனி அவ்ளோதான்டா. என்னை பத்தி உன்கிட்ட ஏதாவது அவ பேசினாலும் பேச வேண்டாம்னு சொல்லிரு..'' 

'' அடப்பாவி '' என்றான் நவநீதன். ''அப்ப அதுகூட பழகினது ?'' 

'' அது வேறடா..'' 

'' அப்ப பிரேம் சொன்னது உண்மைதானா ?''

 '' என்ன? '' 

'' ஓபனா சொல்லு. ரேவதிய கை வெச்சிட்டியா ?'' 

'' லிமிட்டுக்கு மேல போகலடா..! சும்மா... லைட்டாதான்.''

 '' இதுல என்னடா லிமிட்டு ?''

 '' நண்பா. நீ ஏன்டா இப்ப தேவை இல்லாம டென்ஷனாகிக்கற? விடுடா. இது அவளுக்கும் எனக்குமான பிரச்சினை இப்ப ஒரு முடிவுக்கு வந்தாச்சு. குட் பை சொல்லிட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான். விட்றுடா. மறுபடி அதைப் பத்தி பேசினா அது தேவை இல்லாத தலைவலிதான். ''

 நவநீதனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ரேவதியை நினைத்து  அவனுக்கு மனசு கஷ்டமாயது.
 '' என்னாருந்தாலும் நீ பண்றதுலாம் கொஞ்சம் கூட நல்லால்லைடா '

 '' இதுக்கு மேல என்னை என்னடா பண்ண சொல்ற? '' 

 '' அது கல்யாண ஆசைல இருக்குடா '

 '' அதுக்கு.. ? அவ ஒரு செவ்வாய் தோஷக்காரிடா. அவளை கல்யாணம் பண்ணிட்டு என்னை போய்ச்சேர சொல்றியா ? நல்லாருக்குடா உன் நியாயம். விட்டுத் தொலைப்பானா. இனிமே இதைப் பத்தி பேசாத. இதோட விட்டுத்தொலை..'' என இறுதி முடிவாகச் சொன்னான் அன்பு ..!!!



பிரச்சினைகள் மெல்ல ஓயத் தொடங்கி விட்டது. நவநீதன் அன்புவுடன் சேர்ந்து கம்பெனிக்கு வேலைக்குப் போகத் தொடங்கினான். அவன் வேலைக்குப் போன அடுத்த நாள் மாலை.. வேலை முடிந்து வந்து அன்பவுக்கு பை சொல்லி விட்டு அவன் வீட்டுக்கு கிளம்பியபோது.. அவனைக் குறுக்காட்டிக் கேட்டாள் திவ்யா ! 
'' வேலை புடிச்சிருக்கா ?'' 

'' ம்..'' சிரித்தபடி சொன்னான்.  ''புடிக்கலேன்னாலும் செஞ்சுதான் ஆகனும் ''

 '' இவன் கூடவா வேலை.?'' 

'' இல்ல நான் சூயிங்ல இருக்கேன்.'

 '' நெறைய பொண்ணுக இருப்பாங்களே ?'' 

'' இல்லாம? '' 

'' பாத்து சார். இங்கல்லாம் நீங்க நினைக்கற மாதிரி இல்ல.''

 '' நான் என்ன நினைக்கறேன் ''

 '' எனக்கென்ன தெரியும் '' என்று சிரித்தாள். அவள் பேச்சில் இருந்த பொறாமையை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. 

''நீதான சொன்ன..?'' 

'' இந்த கம்பெனி பொண்ணுக எல்லாம் ஒரு டைப்பானவளுக. ''

 '' திருப்பூர விடவா ?'' 

'' நீங்களே பாக்கத்தான் போறிங்க. அப்ப தெரிஞ்சுப்பிங்க. ஏதோ எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்.''

 '' ம்.. பாக்கலாம் '' 

'' சரி.. ட்ரீட் இல்லையா ?'' 

'' என்ன ட்ரீட்டு ?'' 

'' வேலைக்குலாம் புதுசா ஜாய்ண்ட் பண்ணிருக்கீங்க.. ?'' 

 '' சம்பளம் வாங்கித்தான் ட்ரீட் வெக்க முடியும் '' 

'' மறந்துடாதிங்க. நான் ட்ரீட் கேக்காம நீங்களே வெக்கனும் '' 

'' கண்டிப்பா . என்ன ட்ரீட்டு வேணும். ''

 '' பெருசா என்ன. ? ஏதோ சினிமா.. ஹோட்டல் சாப்பாடு... இந்த மாதிரிதான். '' 

'' செஞ்சுடலாம் '' என்று விட்டு விடைபெற்று வீட்டுக்குப் போனான் நவநீதன்.!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 25-12-2019, 11:24 PM



Users browsing this thread: 14 Guest(s)