Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
மாலை நேரம்..  வீட்டில்  உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தான் நவநீதன். கவிதா உள்ளே வந்தாள். 
"மாமா.. அந்தக்கா வந்துருக்கு"

"எந்தக்கா?" திரும்பிப் பார்த்தான். வாசலில் நிழலாடியது.

"ரேவதிக்கா.."

சேரில் உட்கார்ந்தபடியே கொஞ்சம் முன்னால் நகர்ந்து வெளியே  எட்டிப் பார்த்தான். அவன் அம்மாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ரேவதி. 

"வாக்கா" என்றான் கொஞ்சம் சத்தமாக. 

அவள் உள்ளே வந்தாள். புடவை கட்டியிருந்தாள். 

"வாக்கா.. கவி அந்த சேரை எடுத்து போடு" என்றான். 

கவிதா சேரை எடுத்து  ரேவதி  உட்கார வசதியாகப் போட்டாள். 
"நல்ல ஆளுகடா.." என்றபடி உட்கார்ந்தாள். 

சிரித்தான். கவிதா அவன் பக்கத்தில் நின்றாள். 

"எப்படி  இருக்கு  இப்ப?" ரேவதி கேட்டாள். 

"பரவால்லக்கா"

"நல்ல  அடியா?"

"ம்ம்ம்.. கொஞ்சம்  அடிதான்"

"உன் இடுப்பை  ஒடச்சிருக்கணும்"

"இப்பவே பாதி  ஒடச்ச மாதிரிதான்"

"சரி.. என்ன நடந்துச்சு?"

அலுத்துப் போனது. ஆனாலும்  சொல்லத்தான் வேண்டும்.  இந்த பிரச்சினைக்கே காரணகர்த்தா இவள்.  அதனால் பாதிக்கப் பட்டவளும் கூட.

"என்ன சொல்ல? நான் பாட்டுக்கு சிவனேனு இருந்தேன். பிரேம்தான் போன் பண்ணி என்னை காட்டுக்கு வரச் சொன்னான். அங்க போனா.. பார்ட்டி.. ஓபனிங் நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பினிசிங்தான் சரியில்லே"

"ஹூம்.. அதுதான் ஊரு பூரா நாறுதே.." என்று வருத்தமாகச் சொன்னாள் ரேவதி "மொதல்ல வம்பிழுத்தது யாரு?"

"உன் தம்பி"

"என்ன பேசினான்?"

"எல்லாம்  உன் மேட்டர்தான். நான்  ஆரம்பத்துலயே பேச்ச மாத்தப் பாத்தேன். ஆனா பிரேம் விடல. மறுபடி மறுபடி  உன்னப் பத்தியே அவன்டகிட்ட பேசி வம்பிழுத்து.. கடைசில கை வெக்கற அளவுக்கு  ஆகிருச்சு" அவன் சொல்லி முடித்தபோது சட்டென ரேவதியின் கண்கள் கலங்கி விட்டது. 

நவநீதன் திகைத்தான். அவள் கண்ணீரைப் பார்த்து மனதில்  வருத்தம்  உண்டானது.
"ஸாரிக்கா" என்றான். 

கண்களைத் துடைத்து மூக்கை உறிஞ்சினாள். 
"பாவிகளா.. நான் என்னடா பண்ணேன்? என் பேரை ஊரு பூரா கொடிகட்டி பறக்க வெச்சிட்டிங்களே..? இப்ப என்கூட அன்பு பேசறதே இல்ல.  நான் போன் பண்ணாக்கூட  எடுக்க மாட்டேங்குறான்"

"ஸாரிக்கா.. நான் பிரச்சினை வராம தடுக்கத்தான் ட்ரை பண்ணேன். ஆனா.. ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசி..."

"தொலையுது. உன்னை  அடிச்சது யாரு?"

"உன் தம்பிதான். ஆனா  அவன் என்னை அடிக்கல.. அவனை அடிக்கப் போய் கல்லு என் மேல பட்றுச்சு.."

"கொலுப்புடா உங்களுக்கெல்லாம். அன்பு  என்னை லவ் பண்றேனு எதுவும் சொல்லலையா?"

"இல்லக்கா.. அது ஒரு மாதிரி.. திவ்யாவ கொஞ்ச நாள் முன்னாடி  பிரேம் லவ் பண்ணானாம்.. அதையும் இதையும் பேசித்தான்..."

"எப்படியோ.. மூணு நல்லவனுகளும் சேந்து தண்ணியடிச்சிட்டு என் வாழ்க்கையை தள்ளாட விட்டுட்டிங்களேடா.. உறுப்படுவீங்களா?"

"என்னை என்னக்கா பண்ண சொல்ற.?நான்  கூடப் போனது ஒண்ணுதான் தப்பா போச்சு" என்று பரிதாபமாகச் சொன்னான் நவநீதன்..!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 25-12-2019, 11:18 PM



Users browsing this thread: 11 Guest(s)