காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#9
ஆபீஸ் அச்சிஸ்டன்ட் பேப்பருடன் வரும்போதே எனக்கு மிக அருகில் அமர்ந்திருந்த சில நண்பர்கள், கலாவுக்கு மிக மிக நெருக்கமான நண்பர்கள் மாதேஷ் மற்றும் ஆண்டனி இருவரும் கண்களால் வரும் விஷயம் என்ன என்று கேட்டனர். அச்சிஸ்டெண்டோ, என்னமோ அவரே தோல்வி அடைந்த மாதிரி பெரும் விரலை தலைகீழாக கவிழ்த்து காட்டி ஜாடையால் தோல்வி என தெரிவித்தான். பின்னர் அதனை வாங்கிய கம்ப்யூட்டர் பாட ஆசிரியர், அவன் கிளம்பி செல்லும் வரை பொறுத்திருந்து பின்னர் ஒரு மயக்கும் புன்னகையுடன் செமஸ்டர் முடிவுகளை அறிவிக்க தொடங்கினார். அவர் வேண்டுமென்ற சதி செய்வதுபோல் எனது பெயரை மட்டும் விட்டுவிட்டு மற்றவர்களின் பெயரையும் மார்க்கையும் பாட வாரியா சொல்லி கொண்டிருந்தார். எனது வகுப்பில் பாதிக்கும் மேல் மாணவர்கள் ஒரே பாடத்தில் 50 %க்கும் குறைவாக பெற்றிருந்தனர். சிலர் அழுதே விட்டனர். மொத்த வகுப்பிற்கும் வாசித்த பின் சிலர் கலாவை பார்த்து நீதான் இந்த முறை முதலிடம் வந்திருப்ப என்று கூறி வாழ்த்துகளை தெரிவிக்க. கடுப்புடன் நான் எனது பெயர் விடுபட்டதை தெரிவித்தேன். எனது நியாயமான கோபத்தை சிறிய புன்னகையுடன் தலையாட்டிவிட்டு வாசிக்க தொடங்கினார்.

அவர் வாசிக்கும் போதே, அதுவரை சந்தோசத்தில் சிவந்திருந்த கலாவின் முகம், கோபத்தில் வெளுக்க தொடங்கியது. ஆம், மொத்தம் இருந்த ஏழு பாடத்தில் ஐந்தில் நான் முதலிடம் பெற்றிருந்தேன். எல்லாம் சொல்லிமுடித்த பிறகு ஆசிரியார் எனக்கு முதலாவதாக வாழ்த்துக்கள் சொன்னார். பின்னர் அங்கிருந்த சிலர் தான் பெயிலானாலும் எனக்கு சந்தோசத்துடன் வாழ்த்துக்களை சொல்ல தொடங்கினர். நானே நம்ப முடியாத செமஸ்டர் ரிசல்ட், சந்தோஷத்தில் வானுக்கும் பூமிக்கும் குதிக்க தொடங்கினேன். ஆனால் எனது எல்லா கர்வமும் அடுத்து வந்த நாட்களில் நிகழ்ந்த சில சம்பங்கள் முழுமையாக அகற்றி விட்டது. அதுவரை வாழ்க்கையில் எந்த விதமான பெரிய இலட்சியம் எதுவும் இல்லாமல் இருந்த என்னையும் மாற்றிவிட்டது.
செமஸ்டர் ரிசல்ட் வந்த பின்பு ஒருநாள் எங்கள் கல்லூரியில் 'Parents day ' என்று ஒரு விழா எடுத்தனர். கல்லூரியின் நோக்கம், மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் இணைத்து ஒரு கலந்தாய்வு மாதிரியான நிகழ்ச்சி நடத்துவது. அதுவரை எனது குடும்ப நிலை அறியாமல் என்னுடன் போட்டியிட்ட சிலர் நெருங்கி பழகாமல் இருந்த சிலர் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மேலும் என்னுடன் நட்பாய் பழக ஆரம்பித்தனர்.

'Parents Day ' அன்று அனைவரின் பெற்றோர்களும் வந்தனர். எனது அம்மாவால் உரிய நேரத்திற்கு வர முடியவில்லை, அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை ஆனாலும் வேலைக்கு சென்றிருந்தார்கள். வேலையிலிருந்து அனுமதி பெற்று நேரத்திற்கு வர முடியவில்லை. விழாவில் சில ஆசிரியர்கள் மாணவர்களையும் அவர்களுக்கு இருக்கும் எதிர்காலத்தை பற்றியும் ஆங்கிலம் மற்று தமிழில் கலந்து பேசிக்கொண்டிருந்தனர். மேலும் முதல் மூன்று இடத்தை பெற்ற மாணவர்களும் பேசவேண்டும். பின்னர் நேரம் இருக்கும் பற்றதில் கலந்தாய்வு நடத்தலாம் என்று திட்டமிட்டிருந்தனர். அதுபோல் விழாவையும் தொடங்கிவிட்டனர். ஆனால் என்னுடைய அம்மாவோ வர வில்லை. எனது அதிஷ்டம் அவ்வுளவுதான் என்று நினைத்து கொண்டிருந்தேன்.

நிகழ்ச்சியில் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிமுகபடுத்திக்கொண்டு பேச தொடங்கிவிட்டனர். பின்னர் மாணவர்கள் பேசதொடன்கினர், முதலில் மூன்றாம் இடம் பிடித்த கீது (Geethu) பேச தொடங்கினாள். அப்பொழுதான் எனது அம்மாவும் அங்கு வந்தார்கள். அவளை அடையாளம் கண்ட சில பேராசிரியர்கள் ஒரு இருக்கையில் அமர செய்திருந்தனர். பின்னர் கலா பேசினால் அதை தொரர்ந்து மேடையில் பேச எனது முறையும் வந்தது, ஆங்கிலத்தில் பேசலாம் என்று எழுதி வைத்திருந்ததை கிழித்தெறிந்து விட்டு, அம்மாவுக்காக தமிழில் பேச தொடங்கினேன். உள்ளத்தில் இருந்ததை அப்படியே பேசினேன். கண்ணீர்மல்க பேசினேன், ஆனால் என்ன பேசிகொண்டிருந்தேன் என்று உணராமல் அம்மாவிற்கும் ஆனந்த கண்ணீர் வரும் வரை பேசினேன். அதுவரை அவளை சட்டைகூட செய்யாத பலர் அவளை பெருமையுடன் பார்க்க தொடங்கினர். மேடையிலிருந்து அனைவரின் தலையும் அவளை நோக்கி திரும்பிவதை பார்க்க முடிந்தது.

நான் பேசி முடித்த பின் சில பேராசிரியார்கள், ஏன் கல்லூரி முதல்வரும் அம்மாவிடம் நேரில் சென்று வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தனர். கணவன் இழந்த பின்பும் மகனை மேற்படிப்பை தொடர்ந்து படிக்க செய்தும், குடும்ப பாரத்தை சிறிது அவனும் காட்டாமல் இருந்த செய்கையையும் சேர்த்து அனைவரும் பாராட்டினர். சில நண்பர்கள், என்னை கட்டி அனைத்து வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். நான் முதன் முதலாக மேடையில் பேசியது இதுதான் முதல் முறை. அதுவரை இருந்த எனது பயம் எல்லாம் மறைந்து எப்படி பேசினேன் எனது எனக்கே புரியவில்லை. இருந்தாலும் அம்மாவின் ஆனந்தத்தில் வரும் கண்ணீரை பார்க்குபோது அவளை இன்னும் சந்தோசமாக வைத்திருக்க வேண்டும் என்கிற வைராக்கியமே என்னுள் முளைத்தது. விழா எதிர் பார்த்ததை விட அதிகம் நேரம் எடுத்ததால், அடுத்த நாள் எங்களை மட்டும் வைத்து 'ஸ்டுடென்ட் கவுன்செல்லிங்' நடத்தினார்.
Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 29-01-2019, 10:38 AM



Users browsing this thread: 16 Guest(s)